பேச்சு:இலட்சுமி (இந்துக் கடவுள்)

இலட்சுமி அல்லவா சரியாக அமையும் !! --Natkeeran 06:42, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply

லட்சுமி என்று எழுதுவதே பரவலான வழக்கம். -ஸ்ரீநிவாசன் 06:47, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply
ஆம் லட்சுமி என்பது பரவலான பயன்பாடு என்பதால் அந்த தலைப்பில் கட்டுரை இருப்பதில் தவறில்லை. இலக்குமி, லக்குமி, லெட்சுமி, லஷ்மி, லெஷ்மி என்ற பிற வழக்குகளும் உண்டு. இவற்றில் எது எதற்கு வழி மாற்றுப்பக்கம் உருவாக்குவது அவசியம் என தெளிவில்லை. , -வில் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள் குறித்து நடைக்கையேட்டில் விவாதித்து முடிவு செய்யலாம். மற்றபடி, இங்கு அதிகமாக தமிழ் ஆராய்ச்சி நடப்பதாக ஸ்ரீனிவாசன் கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன் :) --ரவி (பேச்சு) 16:52, 10 செப்டெம்பர் 2005 (UTC)Reply
விக்கிபீடியா பாலிஸிகளின் படி ஒரு கட்டுரையின் தலைப்புக்கு எத்தனை வழக்குகள் உண்டோ அத்தனைக்கும் வழிமாற்றுப்பக்கங்கள் உருவாக்கலாம். இங்கே இலக்குமி, லக்குமி, லெட்சுமி, லக்ஷ்மி, லெக்ஷ்மி ஆகிய அனைத்திற்குமே வழிமாற்று பக்கங்கள் உருவாக்கலாம். ர, ல போன்ற தொடங்கும் கட்டுரை தலைப்புகளுக்கு ஒரே நடைக்கொள்கையை அனைத்திற்கும், அனைவரும் கடைபிடிக்க வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்த வரை தமிழ்நாட்டில் லட்சுமி என்று எழுதுபவர்களே அதிகம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் ல, ர வில் தொடங்கும் சொற்களின் முன் கண்டிப்பாக இ சேர்த்துக் கொள்வதை கவனித்துள்ளேன். ஒரு வழக்கில் உச்சரிப்புக்கும், மற்றொன்றில் இலக்கணத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இரண்டிலுமே தவறில்லை, ஏதாவது ஒரு வழக்கையே அனைத்து விக்கிபீடியா பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும் என்றும் இல்லை. வெவ்வேறு கட்டுரைகளில் வெவ்வேறு வழக்குகளை பயன்படுத்தலாம், ஆனால் ஒரே கட்டுரையில் கன்சிஸ்டன்சி பாவிப்பது நல்லது. நற்கீரன் எனக்கு முன்பாகவே இலட்சுமி என்ற கட்டுரையை ஆரம்பித்திருந்தால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. தமிழ் நாட்டில் ராவணன் என்ற வழக்கே அதிகம். ராவணன் கட்டுரையை நான் தொடங்கும் முன் யார் வேண்டுமானாலும் இராவணன் கட்டுரையை தொடங்கலாம். எழுத்துப்பிழை மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ராவனன் அ இராவனன், என்ற தலைப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். -ஸ்ரீநிவாசன் 05:45, 11 செப்டெம்பர் 2005 (UTC)Reply
ஸ்ரீநிவாசனின் கருத்துகளுடன் முழுதும் உடன்படுகிறேன்--ரவி (பேச்சு) 09:25, 12 செப்டெம்பர் 2005 (UTC)Reply

கோயில்கள் தொகு

ரவி, ஏன் கோயில் பற்றிய தகவலை நீக்கினீர்கள்? உலகில் எங்கெல்லாம் லட்சுமி கோயில் உள்ளதோ அனைத்தைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரே லட்சுமி கோயில் பெசன்ட் நகர் கோயில். உங்களுக்குத் தெரிந்த கோயில்கனைத்தையும் நீங்களும் இங்கே குறிப்பிடலாம். -ஸ்ரீநிவாசன் 05:50, 11 செப்டெம்பர் 2005 (UTC)Reply

மன்னிக்கவும், ஸ்ரீநிவாசன். அந்த நீக்கத்திற்கு பிறகு விளக்கம் தர எண்ணியிருந்தேன். மறந்து விட்டேன் :) தற்பொழுது உள்ளது மாதிரி தனியாக லட்சுமி கோயில்கள் என்ற துணைத் தலைப்பில் பெசன்ட் நகர் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தால் எனக்கு நீக்கத் தோன்றியிருக்காது. லட்சுமியை பற்றிய விளக்கத்திற்கு பிறகு சடாலென (?) பெசன்ட் நகர் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது logical flow of informationஆக இல்லாமல் jump செய்தது போல் இருந்தது. மேலும் உலகத்திலேயே முக்கியமான லட்சுமி கோயில் பெசன்ட் நகர் கோயில் தான் என்ற தோற்றத்தையும் எனக்கு தந்தது. மேலும் பெசன்ட் நகர் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பற்றி குறிப்பிடுஙது தான் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.அதனால் தான் நீக்கினேன். மற்றபடி தற்பொழுது உள்ளபடி துணைத்தலைப்பின் கீழ் அனைத்து கோயில்களையும் பட்டியலிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அப்புறம், எனக்கும் வேறு லட்சுமி கோயில் எதுவும் தெரியாது. :)--ரவி (பேச்சு) 09:25, 12 செப்டெம்பர் 2005 (UTC)Reply
I don't know how notable is the "Ashtalakshmi Koil" in Beasant Nagar to be mentioned in a parent article on the topic of "Lakshmi" itself. However, there is no harm in having that in a separate list along with other Lakshmi temples. -- Sundar \பேச்சு 10:26, 12 செப்டெம்பர் 2005 (UTC)Reply
This temple is not one of those ancient historical temples, but, yes, this is a well known temple and one of the important landmarks in Chennai. It is certainly notable in this article given that temples dedicated to Lakshmi are relatively rare compared to that of someone like Shiva. When I said we can mention all temples, I meant only notable temples, and not all the temples to be found in one's neighbourhood. -ஸ்ரீநிவாசன் 15:21, 12 செப்டெம்பர் 2005 (UTC)Reply
Thanks for your clarification, Srinivasan. I haven't been in Chennai except for a few visits. That's why I asked. -- Sundar \பேச்சு 03:54, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply
Return to "இலட்சுமி (இந்துக் கடவுள்)" page.