பேச்சு:இல்லத்துப் பிள்ளைமார்
வலைத்தளத்திலிருந்து அப்படியே நகலெடுக்கலாமா? பார்க்க --Anton (பேச்சு) 13:50, 11 ஆகத்து 2013 (UTC)
Anton வலைதளத்தொகுப்பு விக்கியை வைத்து கூட எழுதப்ப்டிருக்கலாம். அலுவல் கணினியில் அந்த வலைதளம் முடக்ஜ்கப்பட்டுள்ளதால் என்னால் பார்க்க இயலவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:32, 24 ஆகத்து 2016 (UTC)
இரண்டுமே ஒரே தேதியில் இருக்கே? ஒருவேளை விக்கியில் அந்த வலைபதிவரே கூட ஏற்றியிருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:33, 24 ஆகத்து 2016 (UTC)
- ஆம், ஆயினும் உரிய முறையில் பதிப்புரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய தொகுப்பை மீளமைத்தவரும் விளக்கமின்றி மீளமைத்துள்ளார். --AntanO 12:45, 24 ஆகத்து 2016 (UTC)
எது முதலில் ஏற்றியதென எப்படிச்சொல்கிறீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:42, 24 ஆகத்து 2016 (UTC)
- விக்கி கட்டுரை உருவாக்கம் - 1 திசம்பர் 2008, கூகுள் தேடல் Feb 3, 2008 என்கிறது. --AntanO 15:50, 24 ஆகத்து 2016 (UTC)
- அக்கட்டுரையை எழுதியவர் நமது தேனி.சுப்பிரமணியம் அவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு முறை முத்துக் கமலத்தில் இடம்பெற்ற கட்டுரையை அப்படியே இங்கே பிரதியீடு செய்திருந்தமைக்கு நான் வினவுகையில், தாமரைச்செல்வி என்பது எனது புனைப் பெயர்களில் ஒன்றென தெரிவித்திருந்தார். அவருடைய விக்கிப்பக்கத்தில் கூட இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை உறுதி செய்த பிறகு நடவெடிக்கைகளை எடுக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:56, 24 ஆகத்து 2016 (UTC)
- இந்த வலைத்தளம் ஆக்கங்களுக்கு பதிப்புரிமை கொண்டுள்ளது. --AntanO 16:01, 24 ஆகத்து 2016 (UTC)
- @Shriheeran: காப்பினை மாற்றியுள்ளேன். தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுங்கள். --AntanO 15:54, 3 ஏப்ரல் 2017 (UTC)
சிறுகுடி வேளாளர்
தொகுயாழ்ப்பாணக்குடியேற்றம் நூல், பாண்டியநாட்டு வேளாளர் என்பவர்கள் நெடுஞ்குடி வேளாளர், சிறுகுடிவேளாளர், அகமுடைவேளாளர், நீறுபூசும் வேளாளர், கார்காத்த வேளாளர் என்னும் ஐவகைப்படுவர் என்கிறது [1] பாலமுரளி 04:13, 14 செப்டம்பர் 2020 (UTC)
சிறுகுடி வேளாளர் செப்பு பட்டயம்
தொகுகொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது. கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.
1. அறுபத்தி மூவரில் பேர் பெற்றோர் (ஏனாதி நாயனார் இல்லத்துப் பிள்ளைமார் என்கிற சிறுகுடி வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்)
2. சேர, சோழ, பாண்டியருக்கு வாட் பயிற்சி பயிற்றுவிப்போன் போர்கலை ஆசான்
3. திருவாருர் கோவிலை கட்டியவர்கள்
4. காருணாகர கிளைஞன் கருணாகர தொண்டைமான் வம்சத்தினர்
5. கலிங்கமும் கொண்டு பரணியும் ஏற்றோர் கலிங்கத்து பரணி இவர்களின் பெருமையை பாடுகிறது
6. சிறுகுடி நாட்டில் சிறப்புடன் வாழ்ந்து பெருங்குடியாக பிரசண்டம் பெற்றவர்கள் (அரசர்களுக்கு இணையாக வாழ்ந்தவர்கள்)
7. காவிரி பூம்பட்டினம் தன்னில் வணிகர்கள் மனமகிழ ஆர்வ ஜெயந்தி இருபிளவாக தராசில் நிறுத்தி வைத்தவர்கள் (வணிகர்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இரண்டு பிளவாக பிளந்து தராசில் நிறுத்திய போது தராசு சமமாக நின்றது அந்த அளவுக்கு வாள் வீச்சில் வல்லவர்கள்)
8. வந்திடும் முன்னே நிமிடத்தில் வணிகர் தேளேரும் சேவகன் (வணிகர்களின் தோளின் மீது ஏறி வரும் அதிகாரி என்று பொருள்)
9. மகிழ்ந்து தோளில் சுமந்து வரும் செட்டியார்கள் அவர்களின் சீரக மாலையை பெற்றவர்கள்
10. சிங்ககொடி பிரதாபன்
11. ஈழம் திறை கொண்ட லங்காபுரி காவலன் (ஈழத்தில் வரி பெறும் உரிமையுடையவர்கள்)
12. ஈழத்து ராஜன் மனமகிழ ஈழம் தன்னிலே ஆரவ ஜெயித்து இருசிஙக-கோ என பேர் பெற்றோர். (ஈழத்து அரசனின் பெண்ணை மணந்தவன் இவர்களின் முன்னோன்)
13. தாசப்படை வெட்டி இரட்டை சங்கு பிடித்தவன்.
14. வீரபத்திர கடவுளின் சோவடிகளை தினமும் வணங்குவோர். (இவர்கள் வீரபத்திரனின் வழிவந்தவர்கள்)
15. பஞ்சநாட்டார் வாழி, மருமூட்டில்லம் வாழி, செஞ்ச நாட்டார் வாழி, சிறந்த ஆரணத்தோர் வாழி, மிஞ்சும் சோழியர் வாழி (இவர்களின் ஐந்து இல்லங்களை பற்றி கூறுகிறது – இது அவர்களின் உட்பிரிவுகள் ஆகும்) பாலமுரளி 04:16, 14 செப்டம்பர் 2020 (UTC)
- ↑ "யாழ்ப்பாணக்குடியேற்றம் நூல் ஆசிரியர் கு.முத்துக்குமாரசுவாமி பிள்ளை