பேச்சு:ஈராக்குது அணை

ஈராக்குது அணை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
ஈராக்குது அணை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

இந்த அணையின் பெயரை இந்தி விக்கிப்பீடியாவில் हीराकुद என அழைக்கின்றார்கள். தமிழில் இராக்குது அல்லது ஈராக்குது எனப் பெயரிட்டு அழைப்பது பொருந்தும். தமிழில் வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதுதல் பிழை. எனவே இராக்குது அணை எனப் பெயரை மாற்றுகின்றேன். ஏதும் மறுப்பிருந்தால் தெரிவிக்கவும். --செல்வா (பேச்சு) 01:16, 7 மார்ச் 2017 (UTC)

இந்தியில் எழுதியுள்ளது ஹீராகுத³ . கடைசி எழுத்து டகரமன்று, மெலிந்த தகரம். பதம், காதம் முதலான சொற்களில் வரும் தகரம். யாரும் மறுப்பு சொல்லவில்லை எனில் ஈராக்குது என மாற்றவிருக்கின்றேன். தலைப்பே இலக்கணப்பிழையுடன் இருப்பது நல்லதன்று.--செல்வா (பேச்சு) 15:36, 7 மார்ச் 2017 (UTC)
எனினும் இது எவ்வாறான உச்சரிப்பில் அழைக்கடுகிறது ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:58, 7 மார்ச் 2017 (UTC)
ஃகீராக்குத அல்லது ஃகீராக்குது (கடைசியில் இருப்பது குற்றியலுகரம்). --செல்வா (பேச்சு) 18:33, 7 மார்ச் 2017 (UTC)
பலருக்கும் ஆங்கிலத்தில் வல்லின தகர வொலியோ மெலிந்த தகர வொலியோ கிடையாது என்பது தெரிவதில்லை. மோதீ என்னும் பெயரை ஆங்கிலதி Modi என எழுதி எல்லோரும் மோடி என எழுதுகின்றார்கள். இது அறவே பிழையானது. ஆங்கிலத்தில் வல்லின தகர வொலியோ மெலிந்த தகர வொலியோ கிடையாது.--செல்வா (பேச்சு) 18:38, 7 மார்ச் 2017 (UTC)

Start a discussion about ஈராக்குது அணை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈராக்குது_அணை&oldid=2198819" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈராக்குது அணை" page.