பேச்சு:உயிரியல் முறைகேடு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

உயிரியல் முறைகேடு என்ற சொல் பொருத்தமாக இல்லை. உயிர்வளக் கொள்ளை எனலாமா?--இரவி (பேச்சு) 16:47, 28 சூன் 2012 (UTC)Reply

கொள்ளை என்பது முழுவதுமாக கைப்பற்றிக் கொள்வதாக அமையும். சிறிய அளவிலானதிலிருந்து அதாவது உணர்வு ரீதியிலான முறைகேடுகளில் இருந்து முழுவதும் கொள்ளையிடுவது வரை இது உள்ளடக்குமல்லவா? வேறு பொருத்தமான சொல் இருந்தால் நல்லது. முறைகேடு என்ற சொல்லில் திருப்தி இல்லாமல் தான் இக்கட்டுரை எழுதுவதை சிலகாலம் தள்ளிப்போட்டிருந்தேன். பொருத்தமான சொல்லை யாரும் பிரேரித்தால் மகிழ்வேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:28, 29 சூன் 2012 (UTC)Reply
உயிர்வளப் போலியாக்கம், உயிர்வளப் போலியாக்கல். இவை எனது பரிந்துரைகள். --இராச்குமார் (பேச்சு) 05:18, 29 சூன் 2012 (UTC)Reply
உயிர்வளப் புரட்டு என்றும் சொல்லலாம். --இராச்குமார் (பேச்சு) 05:22, 29 சூன் 2012 (UTC)Reply

இங்கு போலியாக்குவது மட்டும் பிரச்சினை இல்லை. ஏனெனில், அறிவு சார் உடைமை உரிமைகள் பெறுவதன் மூலம் மரபார்ந்த உரிமையைத் தடுக்கும் சிக்கலும் உண்டு. online piracy, Bio piracyல் உள்ள piracy என்ற சொல் கூட கடற் கொள்ளை போன்ற ஒன்றைக் குறிப்பது அன்று. மணற் கொள்ளை என்ற பயன்பாட்டையும் பார்க்கலாம். எனவே, கொள்ளை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இன்னொரு விசயம், ஆங்கில விக்கிப்பீடியாவில் bio piracy கட்டுரை bio prospectingக்கு வழி மாறுகிறது. இந்தப் பொருளையும் உள்ளடக்க வேண்டும் என்றால் வேறு சொல் வேண்டும். இதனை உயிர்வளத் தேடல் எனலாமா?--இரவி (பேச்சு) 05:28, 29 சூன் 2012 (UTC)Reply

உயிர்வளத் தேட்டம் என்ற சொல்லையும் கவனிக்க--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:22, 29 சூன் 2012 (UTC)Reply
உயிர்வளக் கொள்ளை என்பது பொருத்தமாகத் தானுள்ளது. Bioprospecting க்கு உயிர்வளமாக்கல் என்றே பெயரிடலாம் என்பது எனது பரிந்துரை. --இராச்குமார் (பேச்சு) 06:38, 29 சூன் 2012 (UTC)Reply
உயிரித்திருட்டு? ---Nan (பேச்சு) 07:30, 29 சூன் 2012 (UTC)Reply
Bio piracy என்ற சொல்லுகான தமிழில், 'வளம்' என்ற இடைச்சொல்லை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் பொருத்தமாக தான் இருக்கும். உயிரியல் புரட்டு அல்லது உயிரியல் புரட்டல் என்பது எவ்வாறுள்ளது ? --இராச்குமார் (பேச்சு) 08:00, 29 சூன் 2012 (UTC)Reply

உயிரியல் என்பது biology. bio வரும் இடங்களில் எல்லாம் உயிரியல் என்று எடுத்தாள்வது சரியாகத் தோன்றவில்லை. அதே போல் உயிரி என்பது organismஐக் குறிக்கும் என்பதால், உயிர்வளங்களில் உள்ள மூலக்கூறுகள் முதலானவற்றை உரிமை கோருவதற்குப் பொருந்தவில்லை. http://ta.wiktionary.org/wiki/bioprospectors உயிர்வளமாக்கிகள் என்று குறிப்பிட்டாலும் இந்தச்சூழலுக்குப் பொருத்தமான சற்றே எதிர்மறையான பொருளைத் தரவில்லை. வளம் என்பதை இடைச்சொல்லாகப் பார்க்கத் தேவை இல்லை. மனிதவளம், கனிமவளம் என்பது போல் காணலாம். மனிதச் சுரண்டல், மனிதத் திருட்டு என்பதற்கும் மனிதவளத் திருட்டு, மனிதவளச்சுரண்டல் என்பதற்கும் பொருள் மாறுகிறது அல்லவா? --இரவி (பேச்சு) 08:52, 29 சூன் 2012 (UTC)Reply

இரவி நீங்கள் சொல்வது உண்மை தான். இக்கட்டுரையை உயிர்வளமாக்கல் என மாற்றலாம் என்று நினைக்கிறேன். உயிர்வளக் கொள்ளை biopiracy என்றப் பக்கத்தில் இருந்து, உயிர்வளமாக்கல் என்ற பக்கத்திற்கு வழிமாற்று செய்யவும் வேண்டும். --இராச்குமார் (பேச்சு) 09:05, 29 சூன் 2012 (UTC)Reply
உயிர்வளமாக்கல் என்பது Bio-fertilizer எனப் பொருள்பட்டுவிடும். இலங்கையில் Bio-fertilizer என்பதை உயிரியல் வளமாக்கி என்ற தமிழ்பதத்தால் பயன்படுத்துகின்றோம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:38, 30 சூன் 2012 (UTC)Reply
உயிரியத் திருட்டு??---Nan (பேச்சு) 13:23, 3 சூலை 2012 (UTC)Reply
நந்தகுமார் கூறும் உயிரியத் திருட்டு என்பது சரியாக இருக்கும். உயிரியம் சார்ந்த அறிவு/உரிமை திருட்டு/பறிப்பு. எனவே சுருக்கமாக உயிரியத் திருட்டு என்று கூறலாம்.--செல்வா (பேச்சு) 14:17, 3 சூலை 2012 (UTC)Reply
Return to "உயிரியல் முறைகேடு" page.