பேச்சு:உள்ளம்
உள்ளம், மனம், சிந்தை ஆகியவை, ஆங்கிலத்தில் Mind என்றதைத்தானே குறிக்கின்றது? --Natkeeran 16:02, 25 ஏப்ரல் 2008 (UTC)
- தமிழில் உள்ளம் என்பது பல ஆழமான கருத்துகளின் அடிப்படையில் வருவது. உள் என்றால் வெளீப்புறத்திற்கு மாறாக உள்ளே என்பதன் அடிச்சொல் என்பது ஒரு பொருள். ஆனால் உள் என்பது உள்ளது, மயக்கம், குழப்பம் ஏதும் ஏதும் இல்லாமல் இருப்பது (உள்ளது) என்றும் பொருள். உண்மை என்னும் சொல்லின் அடி உள் என்பதுதான் உள் +மை =உண்மை. உள்ளம் என்பது ஆங்கிலத்தில் soul என்பார்களே அதனையும் குறிக்கும். உள்ளுதல் என்றால் ஆழ எண்ணுதல், உள்ளும் உள் உள்ள ஒன்று உள்ளம். ஆழ்வார்கள் பாடல்களிலும் சிவனடியார்கள் பாடல்களிலும் உள்ளம், உள்ளுவார், உளன் என்னும் ஆட்சிகள் பெருவழக்கு. எனவே உள்ளம் என்பதை நேரடியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல் கடினம். இடத்திற்கு ஏற்றார்போல Soul, mind, heart என்றெல்லாம் கூறலாம். மனம் என்பது தமிழ்வழி மன்னுதல் = எண்ணுதல், கருதுதல் என்னும் பொருளில் இருந்து வருவது. மனம் என்பது கருதும் அகக்கருவி, எண்ணும் அகக்கருவி. Mind, intellect, hear என்று இடத்திற்கு ஏற்றார்போல மொழி பெயர்க்கலாம். சிந்தை என்பது சிந்திக்கும் அகக்கருவி. சிந்தித்தல் என்பது உள்ளுக்குள், படிப்படியாக, முறைப்படி கேள்விகள் எழுப்பி விடை தேர்வது, ஒன்றைப் புரிந்து கொள்வது, ஒன்றைச் செய்ய வழி வகுப்பது.இவை எல்லாம் தமிழ்வழிப்பொருள். மனஸ், chinta என்று வடமொழி வழியும், consider என்னும் சொல்லில் உள்ள sider (Middle English, from Anglo-French considerer, from Latin considerare to observe, think about, from com- + sider-, sidus heavenly body, 14th century - Thanks to Merriam Webster) என்பதும் சிந்தனையைக் குறிக்கும் தொடர்புடைய சொல்- ஆனால் அதன் மூலங்கள் வேறு. தமிழில் சிந்தனை என்பது சிந்து (சிறுதுளியாக விழுதல் --> சிறுகச் சிறுக கேள்வி-முகமாக எண்ணுதல் என்று பொருள்). எண்ணுதல் என்பதும் என்பது அத்தகையதே. எண் என்றால் எளிமை, சிறுமை என்னும் பொருளது. எண்ணுதல் என்பது எளிமைப்படுத்தி, சீர்மைப் படுத்தி, துல்லியமாக ஒன்றைப்பற்றி உள்ளத்தில் தீரக் கருதுதல். எனவே மனம், மன்னுதல் (மன்னன் என்பவன் நன்கு திறம்பட எண்ணித் தேர்பவன். அப்படி எண்ணித் தம் மக்களைக் காப்பவனுக்கும், யாதொரு தொழிலிலும் மிகுதேர்ச்சி பெறுவனுக்கும் வழங்கும் சொல். ஆங்கிலத்திலே expert, king), எண்ணம், எண்ணுதல், சிந்தி, சிந்தித்தல், சிந்தனை, உள், உள்ளம், உள்ளுதல், உண்மை, நினை, நினைத்தல், நினைவு , கருத்து, கருதுதல் (கருதுதல் என்பதும் கருவாக பலவற்றையும் இணைக்கும் முகமாக, தோற்றுவிக்கும் முகமாக எண்ணுதல் நினைத்தல் என்பதைக் குறிக்கும்). என பல சொற்கள் பல்வேறு நிறங்கள் தரும் சொற்கள். --செல்வா 17:55, 25 ஏப்ரல் 2008 (UTC)
- உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நினைவிற்கு வருகிறது. இவ்வளவு நாளாக மனம் வடமொழிவழி வந்தது என்ற மயக்கம் கொண்டிருந்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. உண்மை என்பது உள் + மை என்பதில் ஒரு பண்பாட்டின் கூட்டறிவு வெளிப்படுகிறது! சில நாட்களை முன்புதான் உண்மையைப் பற்றிய பல்வேறு பண்பாடுகளின் நோக்கைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். Relato refero என்பது சில கிரேக்கர்களின் கோட்பாடு; கீதையின்படி அது ஒரு வழுப்புள்ளி போல, கேள்விக்குட்படாதது. உள் + மை என்பது உள்ளானதும் மாறிலியுமாகிய மெய்க்கூற்று ("inherent and absolute" truth) என்று ஆகிறது. இதில் தமிழரின் "existential" பார்வை தென்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 07:46, 27 ஏப்ரல் 2008 (UTC)
செல்வா, தமிழின் சுவையை உணர வைக்கும் இது போன்ற பல விளக்கங்களை உங்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பார்க்கிறேன். "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற இலக்கணம் எந்த அளவு சாத்தியம் என்று நினைத்திருந்தேன். இனி எல்லா தமிழ்ச் சொற்களையும் வேரறிந்து பொருட்சுவை அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. "வெளிய ஒன்னு பேசி உள்ள ஒன்னு நினைக்காத" என்பார்கள். உள்ளே இருப்பது தான் உண்மை என்று அழகாகச் சுட்டுகிறது.--ரவி 11:13, 27 ஏப்ரல் 2008 (UTC)
Start a discussion about உள்ளம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve உள்ளம்.