பேச்சு:எம். ரங்கா ராவ்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by AntanO in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
தொகுஇந்தத் தலைப்பு தமிழில் தவறான பொருளைக் கொடுக்கிறது. பெயர்ச் சொற்களுக்கு இலக்கண விதி பயன்படுத்தும்போது கவனம் தேவை.- UKSharma3 உரையாடல் 08:20, 23 பெப்ரவரி 2023 (UTC)
- ஆம், எஸ். வி. ரங்கராவ் என்பது போல எம். ரங்கராவ் அல்லது எம். இரங்கராவ் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 08:31, 23 பெப்ரவரி 2023 (UTC)
பயனர் பேச்சு:Arularasan. G (பிரதி)
தொகுரங்கா ராவ் என்பதே சரியான பெயர். இப்படியான பெயர்களை விதிவிலக்காகக் கொள்ளலாம்.
இரங்கராவ் என்று எழுதுவதும் பொருள் வேறுபடும். எஸ். வி. ரங்கராவ் என்று ஒரு பக்கம் இருக்கிறது. மேலும், ர எழுத்தில் தொடங்கும் பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் இருக்கின்றன. ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ராவ் என்பதை தனித்தே எழுதுகிறார்கள். கட்டுரையின் தலைப்பை எம். ரங்கா ராவ் என்று எழுதுவதே சரியானது என்பது என் கருத்து. நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 02:09, 24 பெப்ரவரி 2023 (UTC)
- ஆதரவு வணக்கம் ஐயா. இங்கு மொழி முதலெழுத்துகளை பயன்படுத்த வேண்டியதில்லை. @Uksharma3: அவர்கள் குறிப்பிட்டது போல பொருள் மாறிவிடும். இங்கு இரங்காராவ் என்பது இரங்கல், இரங்கற்பா போன்ற சொற்களுக்கான பொருள் தந்துவிடும். \\இப்படியான பெயர்களை விதிவிலக்காகக் கொள்ளலாம்\\ தமிழில் ரங்கநாதன் என்பதை அரங்கநாதன் என்று எழுதலாம். இதுவே ரங்கா ராவ் என்பதை அரங்காராவ் என்று எழுதுவதும் கூடாது. ஏற்கனவே இருந்த ரங்கா ராவ் என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:02, 4 சூன் 2023 (UTC)
- சில கருத்துக்கள்
- குறிப்பிட்ட பேச்சுப்பக்கத்தில் அது குறித்து உரையாட வேண்டும். பயனர் பக்கத்தில் அல்ல அல்லது குறிப்பிட வேண்டும்.
- பேச்சுப்பக்க உரையாடலுக்கு ஏற்பவே பக்கம் நகர்த்தப்பட வேண்டும்.
- //ரங்கா ராவ் என்பதே சரியான பெயர். இப்படியான பெயர்களை விதிவிலக்காகக் கொள்ளலாம்.// வெறும் சொல்லாடலே அன்றி விளக்கம் இல்லை.
- //ர எழுத்தில் தொடங்கும் பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் இருக்கின்றன.// இது ஒரு பிழையான வழிமுறையும் ஏரணமும்.
- //ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ராவ் என்பதை தனித்தே எழுதுகிறார்கள்.// இது தமிழ் விக்கிப்பீடியா
- //இங்கு மொழி முதலெழுத்துகளை பயன்படுத்த வேண்டியதில்லை.// ஏன்?
- ர என்று தொடங்கி எழுதுவதில் தவறில்லை. ஆனால், அதற்கு முறையான ஆதாரம் தேவை. இந்த நபர் தமிழில் எவ்வாறு எழுதுகிறார் என்பதற்கு சான்று உள்ளதா?