பேச்சு:ஏதென்சில் கொள்ளைநோய்

ஏதென்சில் கொள்ளைநோய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Plague என்பது பொதுவான கொள்ளைநோயின் பெயர். --AntanO (பேச்சு) 03:15, 9 அக்டோபர் 2022 (UTC)Reply

AntanO பிளேக் என்ற பெயர் பொதுவாக தமிழ்நாட்டில் பெரு வழக்கில் உள்ள பெயர்தான். அந்த நோயைக் கண்டு அஞ்சி பிளேக் மாரியம்மன் என்ற பெயர்களைக் கொண்ட கோயில்கள் கூட தென்னிந்தியாவில் பரவலாக உள்ளன. ஆங்கில விக்கியிலும் பொதுவான கொள்ளைநோயின் பெயரான Plague என்ற சொல்லே பயன்பட்டுத்தப்பட்டுள்ளது. கட்டுரையின் பெயராக மக்களுக்கு நெருக்கமான இதே பெயர் தொடரலாம் என்று நினைக்கிறேன். இதில் மறுப்பு இருந்தால் பொருத்தமான பெயரை பரிந்துரையுங்கள் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 05:35, 9 அக்டோபர் 2022 (UTC)Reply
பொதுவாக தமிழ்நாட்டில் பெரு வழக்கில் தமிழுக்கு மாற்றீடாக பல ஆங்கிலப் பெயர்கள் இருப்பதை அறிவேன். ஆங்கிலச் சொற்கள் பெரு வழக்கில் உள்ளதற்கான அதை அப்படியே த.வியில் பயன்படுத்துவது பிழையான உதாரணம். இது இப்படியே போனால் அம்மா 'மம்மி'யாகிவிட வாய்ப்புள்ளது. \\ஆங்கில விக்கியிலும் பொதுவான கொள்ளைநோயின் பெயரான Plague என்ற சொல்லே பயன்பட்டுத்தப்பட்டுள்ளது.\\ ஆங்கிலத்தில் Plague தானே? ஆகவே அங்கு அப்படி இருப்பதற்கும் த.வி தொடர்பான ஏரணம் விளங்கவில்லை. @செல்வா and Kanags: --AntanO (பேச்சு) 13:36, 9 அக்டோபர் 2022 (UTC)Reply
கொள்ளைநோய் (ஒரு சொல்) என்பதே சரியான தமிழ்ச் சொல். ஏதென்சில் கொள்ளைநோய் எனத் தலைப்பிடலாம். பிளேகு என்ற சொல்லைத் தமிழிலும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.--Kanags \உரையாடுக 20:35, 9 அக்டோபர் 2022 (UTC)Reply
Return to "ஏதென்சில் கொள்ளைநோய்" page.