பேச்சு:ஏர்
டிராக்டர் தமிழ்ப்பதம் என்ன? --சிவகுமார் 15:06, 23 ஜூன் 2006 (UTC)
- ஆங்கிலச்சொல்லின் பொருள் இழுத்துச் செல்வது என்பதுதான். இதற்கு தமிழில் (உழுவத்ற்கு பயன் பட்டால்) உழுவுந்து, ஏருந்து என்றோ உழுவூர்தி, ஏரூர்தி என்றோ பயன்படுத்தலாம். Backhoe போன்ற எந்திரங்களுக்கு,
அகழுந்தி, மண்ணள்ளி என்று தேவைகேற்றார்போல ஆக்கிகொள்ளலாம். --C.R.Selvakumar 15:14, 23 ஜூன் 2006 (UTC)செல்வா
- நன்றி செல்வா. --சிவகுமார் 15:19, 23 ஜூன் 2006 (UTC)
தமிழிணையப் பல்கலைக்கழகத் தரவில் "இயந்திரக் கலப்பை", "இழுவை இயந்திரம்", "இழுவைப்பொறி" போன்ற பரிந்துரைகளும் உள்ளன. இருப்பினும் "இயந்திரம்" (வடமொழி என்பது ஒருபுறமிருக்க) என்பது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை. தானுந்துக் கலப்பை என்பது உழுவுந்து என்பதைக் காட்டிலும் பொருத்தமா? -- Sundar \பேச்சு 09:07, 25 ஜூலை 2006 (UTC)
- சுந்தர், உழப் பயன்படும் ஒருவகை உந்து உழுவுந்து. தானுந்து என்னும் பொருளிலேயே சுருக்கமாக உந்து என்பதுள்ளது, கலப்பை என்பது உழுவதற்குப் பயன்படும் கருவிதானே. உழுபடை என்றால் கலப்பை. எனவே நீங்கள் விரும்பும் இரு பொருளும் சுருக்கமாய் உழுவுந்து என்பதில் உள்ளது. மேலும் தானுந்துக் கலப்பை எனில், தானியங்கி போல், யாரும் செலுத்தாமல் உழும் கலப்பை என்பது போன்ற பொருளும் தரலாம். எனவே அவ்வளவாகப் பொருந்தாது. உந்து என்பது எளிமையான சொல்லும் வளமாக பிறசொற்களுடன் இணைந்து பொருள் பெருக்கக்கூடிய சொல். சுமையுந்து, தொடருந்து, அகழுந்து, மகிழுந்து, களியுந்து (களியுலா உந்து =RV), நீருந்து, பீய்ச்சுந்து (jet propelled) என்று பல சொற்கள் ஆக்கப் பயன் படும் சொல்.--C.R.Selvakumar 13:27, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
- நீங்கள் குறிப்பிட்ட இடத்தில், உழவுந்தைக் காட்டிலும் தானுந்துக் கலப்பை என்பதுதான் பொருந்தும். உழவுந்து என்பது tractor and its kind. நீங்கள் சொல்வது புதிய கருத்தான தானே நிலத்தை உழும் தானியங்கியுந்து, அதாவது தானியங்கிக்கலப்பை அல்லது தானியங்கிஉழுவுந்து. நன்றாக எழுதியுள்ளீர்கள் :) அண்மையில் சேர்ந்த என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி. உரம் கூட்டுகிறேனா, சினம் கூட்டுகிறேனா என்று தெரியவில்லை :)--C.R.Selvakumar 15:18, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
Start a discussion about ஏர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஏர்.