பேச்சு:ஏவூர்தி வரலாறு

ஏவூர்தி வரலாறு என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஊர்தி என்றால் வண்டி என்றல்லவா பொருள்படும்? அதனால் ஏவுகணை என்றே பயன்படுத்தலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:03, 1 சூன் 2012 (UTC)Reply

ஏவுகணை - missile
ஏவுகலம் - rocket.--Kanags \உரையாடுக 07:55, 1 சூன் 2012 (UTC)Reply

ஏவூர்தி இன இக்கட்டுரையில் பயன்படுத்தியிருந்ததால் நானும் அத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:33, 1 சூன் 2012 (UTC)Reply

ஆங்கிலத்தில் Launch Vehicle என்பது ஏவூர்தி எனத் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. இதனை ஏவுகலம் என்பது மேலும் பொருத்தமானது. ஏவூர்தியின் உந்துவிசையினை விறிசுகள் (rocket) தருகின்றன. ஏவுகணை என்பது ஆயுதத்தை குறிக்கும். Spacecraft/ spaceship = விண்கலம் அல்லது விண்ணோடம் எனப்படுகிறது.--மணியன் (பேச்சு) 15:11, 1 சூன் 2012 (UTC)Reply
ஏவூர்தி, ஏவுகலம், ஏவுகணை, ஏவுந்து ஆகிய அனைத்தும் வெவ்வேறு பொருளில் வெவ்வேறு சூழலில் பயன்படும். ஏவுகணை என்பது missile ((குறிப்பாக தாக்கும் வகை). கணை என்றால் பொதுவாக நீட்டமாக உருளை வடிவில் இருக்கும் ஒரு பொருளுக்குப் பெயர். திப்பிலியைக் கூட கணை என்பர். கணை என்றால் அம்பு என்றும் பொருள். தீக்கணை என்றும் பயபட்டிருக்கின்றது. ஏவுகலம் என்பது பொதுவாக விண்ணில் ஏவப் பயன்படும் கருவிக்கும், விண்னில் ஏவி உலவும் கலத்துக்கும் பொருந்தும். ஏவூர்தி என்பது ஏவப்பட்டு விண்ணில் ஊர்ந்து செல்லும் விண்கலம், விண்ணூர்தி என்றும் பொருள்படும். ஏவுந்து என்பது விண்ணில்ல் ஏவப்பயன்படும் இராக்கெட்டு எஞ்சின் என்றும் எவப்பட்டு விண்ணில் "பறக்கும்" உந்து/ஊர்தி என்றும் பொருள் படும். ஆகவே தக்கவாறு பொருத்திப் பயன்படுத்தலாம். (வண்டி என்பது பொதுவாக உருண்டோடும் ஊர்திக்குப் பொதுவாகப் பயன்படும் சொல்; ஊர்தி என்பது நகர்ந்து செல்லும் எந்தவகையான ஓர் கருவிக்கும் பயன்படுத்தலாம்; பனிச்சறுக்கு ஊர்தி என்பது பனியில் சறுக்கிச்செல்லும் சக்கரங்கள் (ஆழிகள், சில்லுகள்) இல்லாத ஊர்திக்கும் பயன்படுத்தலாம், காற்றில் பறக்கும் வானூர்திக்கும் பயன்படுத்தலாம்; எப்படி எண்ணெய் என்பது எள்+நெய் என்பது மாறி எந்த ஒரு நெய்யுக்கும் எண்ணெய் என்பது போல் வண்டி என்பதும் எந்த ஓர் ஊர்திக்கும் பயன்படுத்துமாறும் கொள்ளலாம்). --செல்வா (பேச்சு) 15:24, 1 சூன் 2012 (UTC)Reply

புதிய கட்டுரை

தொகு

இங்கு, ஆங்கில விக்கியில் Rocket தலைப்பிலுள்ள கட்டுரையின் முதல் பகுதி மட்டும் தமிழில் இருக்கிறது. ஏவூர்திகளின் வகைகள், வடிவமைப்புகள், பயன்பாடுகள், சிறப்பம்சங்கள் போன்றவற்றை மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு ஏவூர்தி என்று தலைப்பிடலாமென்றால், அத்தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை நீக்கப்பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்தி வருகிறது. என்ன செய்யலாம்? --செந்தில்வேல் (பேச்சு) 23:04, 9 சனவரி 2014 (UTC)Reply

ஆம், ஏவூர்தி என்ற அக்கட்டுரை பதிப்புரிமை மீறியிருந்ததால் நீக்கினேன். நீங்கள் புதிதாக எழுத விரும்பினால் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதே தலைப்பில் ஆரம்பியுங்கள். நன்றி,--Kanags \உரையாடுக 07:36, 10 சனவரி 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏவூர்தி_வரலாறு&oldid=1596384" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏவூர்தி வரலாறு" page.