செல்வா, இதுவரை எலெக்ட்ரானிக்ஸ் என்பதற்கு இலத்திரனியல் என்று தானே கையாண்டு வந்துள்ளோம். நுண்மின்னியல் புதிய கலைச்சொல்லாக உள்ளதே. சீர்மைக்காக ஒரே கலைச்சொல்லை தரப்படுத்துதல் நல்லது. --மணியன் 00:53, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

மணியன், இலத்திரனியல் எனப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டில் மின்னணுவியல் எனப் பயன்படுத்துகின்றனர். மின்மியியல் என்பது பொருந்தும், எதிமின்னியியல் என்பதும் பொருந்தும், ஆனால் சரியாகப் பொருந்தினாலும் இவையும் பெருவழக்கு இல்லை. சீர்மைக்காக எனில் மின்னணுவியல் என்னும் சற்று பொருத்தம் இல்லாத சொல்லைப் பயன்படுத்தலாம். மின்னியல், மின்னணுவியல் என electrical and elactronics என்பதை மாற்றவா (மிமி என்றாவது இருக்கும் :) ) ?--செல்வா 01:59, 16 அக்டோபர் 2011 (UTC)Reply
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் எனப் பரிந்துரைக்கிறேன்.--ஆர்.பாலா (பேச்சு) 11:17, 6 சனவரி 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐஇஇஇ&oldid=1593869" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐஇஇஇ" page.