ஐரோ என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Euro is the currency of Europe. Similarly ஐரோ should be the currency name for ஐரோப்பா. யூரோப் என்ற ஆங்கில உச்சரிப்பை விட ஐரோப்பா என்ற தமிழ் உச்சரிப்பு பிரபலமாக இருக்கும் காரணத்தினால் நாணயப் பெயரையும் ஐரோ என்று வழங்குவது தான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. ஜெர்மன் மொழியில் கூட ஐரோப்பா, ஐரோ என்று தான் அழைக்கிறார்களே தவிர Europe, Euro என்று அழைப்பதில்லை. எகிப்து, இத்தாலி போன்ற நாட்டுப்பெயர்கள் தமிழ் மொழி ஒலி அமைதி கருதி தமிழ் உச்சரிப்புடன் தொடர்ந்து வழங்கி வருவது போல, இந்த மாற்றத்தையும் கருத்தில் கொள்ளலாம் என்பது என் ஆலோசனை. எனினும் யூரோ என்ற வழிமாற்றுப்பக்கமும் தொடர்ந்து இருப்பது அவசியம்--ரவி (பேச்சு) 10:14, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

ஆம். ஐரோ என்று அழைப்பதே சரியானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை -ஸ்ரீநிவாசன் 10:49, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply
இப்பெயரை நாம் பரிந்துரைத்து எட்டாண்டுகள் ஆகியும் எந்த நாட்டுத் தமிழ் ஊடகமும் இவ்வழக்கைக் கையாள்வதில்லை. இந்திய மொழிக் குடும்பத்தில் எல்லாம் யூரோ என்றே அழைக்கப்படுவதாலும், படிப்பவர்களுக்குக் குழப்பத்தைத் தவிற்கவும், யூரோ என்று முதன்மைப் பெயர் ஆக்கப் பரிந்துரைக்கிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 02:49, 31 அக்டோபர் 2013 (UTC).--👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:28, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

//எந்த நாட்டுத் தமிழ் ஊடகமும் இவ்வழக்கைக் கையாள்வதில்லை.// ஐரோப்பாவின் பல நாடுகளில் சுற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். அங்கு வாழ்கிற உள்ளூர் மக்களும் சரி, புலம்பெயர்ந்துள்ள தமிழர்களும் சரி ஐரோ என்றே குறிப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஐரோப்பா என்ற சொல்லே பல ஐரோப்பிய மொழிகளில் அக்கண்டத்தைக் குறிப்பிடுவதற்கு ஒத்த ஒலிப்பே. --இரவி (பேச்சு) 18:59, 13 திசம்பர் 2013 (UTC)Reply

ஐரோ என்ற சொல் புழக்கத்துக்கான எடுத்துக்காட்டுகள்:

--இரவி (பேச்சு) 19:57, 13 திசம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐரோ&oldid=2289857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐரோ" page.