பேச்சு:ஐ. என். எசு. அரிகந்த்

ஐ. என். எசு. அரிகந்த் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழில் arhant என்பதை அருகன் என்று ஈராயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளோம். ஒலிப்புத் துல்லியம் வேண்டும் எனில் அரிஃகந்த் என்று எழுதுவோமே. இத்தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன். அரிஃகந்த் அல்லது அரிகந்த் என எழுதலாம். --செல்வா 15:53, 27 ஜூலை 2009 (UTC)

தலைப்பை மாற்றும்போது கப்பற்படை அணுசக்தி கலம் அரிஃகந்த் என இருந்தால் இன்னும் தெளிவாக இருக்கும். அல்லது INS Arihant - இந்திய கடற்படை கப்பல் அரிஃகந்த் என்றும் இடலாம். INS - Indian Navy Ship இல்லையெனில் ஏதோ நபர் பெயர்போல உள்ளது.--மணியன் 17:59, 27 ஜூலை 2009 (UTC)

இந்திய கடற்படை கலங்களுக்கு முன் ஐ.என்.எசு போன்ற முன்னெட்டு தேவை. தலைப்பிலும் அவ்வாறே வைத்தால் கடற்படை கலங்களை தேடும் பொது உதவியாயிருக்கும். அது போலவே பிரித்தானிய கலங்களுக்கு முன் எச்.எம்.எசு என்ற முன்னெட்டு தேவை. ஐ.என்.எசு அரிகந்த் என மாற்றலாம். --குறும்பன் 18:11, 27 ஜூலை 2009 (UTC)

மற்ற பயனர்களில் சிலரும், கட்டுரையை எழுதிய பயனர் பெ.நாயகியும் கருத்து தெரிவித்தால் மாற்றலாம். --செல்வா 20:10, 27 ஜூலை 2009 (UTC)
எனக்கும் ஐ.என்.எசு. அரிகந்த் என்பதில் உடன்பாடே. செல்வா குறிப்பிட்டிருக்கும் அருகன் ஒலிப்பதற்கு இயல்பாக இருப்பதால் உரிய மேற்கோள்களுடன் இதனையும் இணையாகப் பயன்படுத்தலாம். அருகன் பற்றி மற்ற பயனர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.--சிவக்குமார் \பேச்சு 20:26, 27 ஜூலை 2009 (UTC)
எனக்கும் ஐ.என்.எசு.அரிகந்த் என்பதிலும் ஆய்தத்துடன் எழுதினாலும் உடன்பாடே. பெ.நாயகி தனது பேச்சுப் பக்கத்தில் அளித்திருந்த ஒப்புதலையும் கீழே தந்துள்ளேன். கட்டுரையின் தலைப்பை மாற்றிவிடலாம் எனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:50, 28 ஜூலை 2009 (UTC)
முதல் பக்கத்தில் இட்டுள்ளதால் விரைந்து மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:51, 28 ஜூலை 2009 (UTC)

இந்த மாற்றம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று இந்திய கப்பல் படையிடம் உறுதி பெற்றுக் கொள்வது நல்லது :) --ரவி 07:06, 31 ஜூலை 2009 (UTC)

தாராளமாக

தொகு

விக்கிபீடியாவில் கட்டுரை வந்து விட்டால் அது அனைவரின் குழந்தை. அதனை அழகு படுத்துவதற்கு தமிழன்பர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்னை மதித்து கருத்து கேட்டதற்கு நன்றி. நான் தமிழில் ஆழ்ந்த ஞானம் உடையவன் அல்லன். எது சரி என்று படுகிறதோ அந்த மாற்றங்களை அறிஞர்களின் கூட்டு ஒப்புதலோடு செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. --பெ.நாயகி 05:35, 28 ஜூலை 2009 (UTC)

நன்றி பெ.நாயகி.--செல்வா 02:16, 29 ஜூலை 2009 (UTC)

உரை திருத்தம்

தொகு

சுந்தர், நீங்கள் செய்த திருத்தம் (உரிச்சொல் வரிசை) சரியாக உள்ளது.--செல்வா 02:16, 29 ஜூலை 2009 (UTC)

சரிபார்த்துச் சொல்லியதற்கு நன்றி, செல்வா. -- சுந்தர் \பேச்சு 02:21, 29 ஜூலை 2009 (UTC)

பொருத்து X பொறுத்து

தொகு

"இதைப் பொறுத்து அது மாறும்", "இதைப் பொருத்து அது மாறும்" - பொறுத்தா பொருத்தா - எது சரி? பொறுத்து என்று நினைக்கிறேன். இது போல் அடிக்கடி பிழை விடும் சொற்கள் பட்டியல் தேவை--ரவி 07:09, 31 ஜூலை 2009 (UTC)

பொருத்து என்றால் ஈடாக, இணக்கமான, "பொருந்துமாறு" என்று "பொருள்". பொருதல் என்றால் போர் புரிதல், இங்கு கருத்து என்னவென்றால், ஏறத்தாழ ஈடான வலிமை உடையவர்கள் (இருவரோ, இரு அணிகளோ) மோதுதல். திருமணத்தில் பொருத்தம் பார்த்தல் என்றால் ஒத்ததன்மை அல்லது இணக்கம் உடைமை பார்த்தல். பொருள் என்னும் சொல்லே கூட ஒரு சொல் குறிக்கும் அதற்கு ஈடான உண்மை என்று "பொருள்". பொருள் என்றால் பணம் என்றும் "பொருள்"; ஏன் இதற்குப் பொருள் என்றால், ஈடாக தரும் பொருள் :)(இங்கு பொருள் என்னும் சொல் பல பொருள்களில் ஆண்டுள்ளேன்). இறைவனுக்கும் பொருள் என்று பெயர், இதை இங்கு விரித்தால் பெருகும். பொறுத்து என்றால் "தாங்கி", "ஏற்று" என்று பொருள். பொறுமை என்றால் "தாங்கிக்கொள்ளுதல்". பொறுத்தார் பூமி ஆள்வார்ர். திருக்குறளில் கூறுவது போல,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அங்கு பொறுத்தல் என்பது தாங்கிக்கொள்ளுவது. பொறுப்பு, பொறுப்புணர்வு என்பது responsibility என்னும் பொருள் தருவது. இதைப் பொருத்து அது மாறும் என்பது சரி. என்னைப் பொருத்த அளவிலே அதனை நான் சரி என்பேன் என்று கூறும்பொழுது என்கருத்தை, என் கணிப்பை ஈடாகக் கொண்டு பார்க்கும் பொழுது அதனை நான் சரி என்பேன், என்று பொருள். எதனையாவது ஒப்பிட அல்லது ஒப்பிட்டு ஒன்றைச் சொன்னால் அது பொருத்து (இடையின ரகரம்). பொறுப்பானவர், பொறுமையானவர் என்றால், நிறைய தாங்கிக்கொள்பவர், நிறைய "பொறுப்புகளை"" ஏற்றுக்கொண்டவர் என்னும் படியாக பொருள் வரும். இங்கே என்னைப் பொறுத்த அளவிலே என்று கூறினால் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்ட அளவிலே என்று பொருள் வரும். பொறாமை என்னும் சொல் ஏற்றுக்கொள்ளாமை (இன்னொருவர் பெறும் உயர்வை, உயர்ச்சியை, பெருமையை ஏற்றுக்கொள்ளாமை, தாங்கிக்கொள்ளாமை). பொராமை என்றால் மோதி சண்டையிடாமை என்று பொருள். ஈடாகாமை. பொராது என்றால் ஈடாகாது, இணையாகாது. சல்லிக் காசு பொராது என்றும் கூறலாம். --செல்வா 21:01, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, செல்வா--ரவி 05:58, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

இந்த இடத்தில் இதை மற்றொரு கோணத்தில் நான் பார்க்க விரும்புகிறேன். "என்னை பொருத்த வரையில்" என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் மாற்றினால், "according to me" என்று தானே வரும். பலர் பலவிதமாக கூறும்போது என்னுடைய கருத்து என்று நான் முன்வைக்கிறேன். இதை Match the following அல்லது பொருத்துக என்ற கோணத்தில் பார்ப்போம். கணேசன் இவ்வாறு கூறுகிறார், சங்கர் இவ்வாறு கூறுகிறார். நான் இவ்வாறு கூறுகிறேன். பள்ளியில் 'பொருத்துக' செய்வது போல, கணேசன், சங்கர், நான் என்ற பெயர்களை ஒரு வரிசையிலும் எங்களுடைய கூற்றுகளை மற்றொரு பக்கம் வரிசையாக அடுக்கிவைத்தால், பொருத்தித் தானே பொருள் காண்கிறேன். அப்படி பார்த்தால், என்னை பொருத்தவரை என்ற சொற்றொடரில், பொருத்த என்று தானே வர வேண்டும்.

IAS - Indian Administrative Service - இ.ஆ.ப

தொகு

INS - Indian Naval Service. இ.க.சேவை ?? புருனோ மஸ்கரனாஸ் 20:18, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

சில கடற்படை அதிகாரிகளிடம் கேட்டதில் INS விரிவாக்கம் Indian Navy Ship என்பதாகும். அவர்கள் சேவையை IN என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். காட்டாக Commandr R N Dixit IN அவர்களது நிலத்திலுள்ள அலுவலகங்களையும் கப்பலாகவே எண்ணி INS என்ற பெயரொட்டு கொடுக்கிறார்கள். அலுவலகங்களிலும் கப்பலிலும் ஒரே பணி/உணவு நேரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. தவிர, வாரத்தின் ஒவ்வொரு நாளும் மெஸ் உணவு நாடு முழுவதும், கடலாக இருந்தாலும் நிலமாக இருந்தாலும் ஒன்றே. காட்டாக,புதன் அன்று சாதமும் சாம்பாரும் என்றால் அது சென்னையில் இருந்தாலும், நடுக்கடலில் சோமாலியாவில் இருந்தாலும் தில்லியிலும் அதுவே.--மணியன் 04:27, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
வியப்பூட்டும் செய்தி மணியன்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. --செல்வா 14:13, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
இது குறித்து இந்தியக் கடற்படை என்னும் கட்டுரையில் சேர்க்க வேண்டும். இவ்வழக்கங்கள் இந்தியக் கடற்படையில் மட்டுமா அல்லது உலகப்படை வழக்கமா? வியப்பூட்டும் செய்தி. நன்றி மணியன். --சிவக்குமார் \பேச்சு 18:45, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
Return to "ஐ. என். எசு. அரிகந்த்" page.