பேச்சு:ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம்

Latest comment: 10 மாதங்களுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை

@Kanags: வணக்கம். //திருத்த தகவல் கிடைக்கவில்லை. நீக்கலாம்// என்பதாக உலோ.செந்தமிழ்க்கோதை ஐயா குறிப்பினை இட்டுள்ளார். இணையான ஆங்கிலக் கட்டுரையை என்னால் கண்டறிய இயலவில்லை. தங்களின் உதவியை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:56, 30 மே 2023 (UTC)Reply

@Selvasivagurunathan m and உலோ.செந்தமிழ்க்கோதை: en:Laser detuning என்பதே இதன் மூலக் கட்டுரை. Laser இங்கு ஒளிமி எனக் கூறப்பட்டுள்ளது. laser இற்கு ஒளிமி பயன்பாட்டில் இல்லாத சொல். பாடத்திட்டத்தில் ஒளிமியைப் பயன்படுத்துகிறார்களோ தெரியாது. தலைப்பு (விக்சனரியின்படி, சீரொளியின் தொனிப்பிறக்கல்) மாற்றப்பட்டு கட்டுரையும் முழுமையாகத் திருத்தி எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:12, 31 மே 2023 (UTC)Reply

Laser- ஒருங்கொளி என தமிழக வழக்கில் பயன்பாட்டில் உள்ளது. இங்கு ஒளிமி அல்லது ஒளியன் என்பது photon ஐக் குறிக்கிறது. இம்முறை அணுவுக்குள் உள்ள ஒளியனின் ஆற்றலை அதன் ஒத்திசைவு அதிர்வில் இருந்து மேலும் கீழும் அமையுமாறு கட்டுப்படுத்தும் நிகழ்வாகும். இதற்கான ஆங்கிலச் சொல் இருந்தால் மொழியிடை இணைப்பைக் கொடுத்து மேலும் செப்பனிடலாம். இது குவைய இயக்கவியல் கட்டுரை ஆகும். இல்லையென்றால், தற்போதைக்கு நீக்கலாம். தவறில்லை. இதில் கண்டறிதல் எனும் சொல்லும் சரியன்று. தொனிபிறக்கம் எனும் ச்வட-தமிழ்க்) கலப்புச் சொல்லுக்கு இணையான ஒத்திசைவு மாற்றம் என்பதே சரி. குவைய இயக்கவியல் வல்லுனரைக் கலந்துரையாடலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:26, 31 மே 2023 (UTC)Reply

Laser detuning என்ற ஆங்கில விக்கிக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:34, 31 மே 2023 (UTC)Reply
நன்றிகள், நண்பரே தங்கள் ஆற்றுப்படுத்தலுக்கும் செல்வகுருநாதான் அவர்களின் விடாத உறுதிப்பாட்டுத் தேடலை வழிப்படுதியதற்கும். தலைப்பை ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம் என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:57, 1 சூன் 2023 (UTC)Reply

இக்கட்டுரையின் துப்புரவும் முடிந்தது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:59, 10 சூன் 2023 (UTC)Reply

Return to "ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம்" page.