பேச்சு:ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்

@Ravidreams:, வணக்கம். என்னால் இந்தக் கட்டுரையை எனது கணக்கில் சேர்க்க இயலவில்லை. இற்றைபடுத்த முயலும் போது விக்கி அமைப்பு பின் வரும் செய்தியை காண்பிக்கிறது. "Blocked by Ravidreams for sharing same IP Address தானியங்கி தடைவிதிக்கப்பட்டுள்ளது ஏனெனில் வேங்கை போட்டிக்கு சம்பந்தமில்லாத கட்டுரையை சமர்பிக்க முயற்சி செய்வதால்". ஒன்றும் விளங்கவில்லை. புதிராக உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவ வேண்டுகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 16:08, 27 மார்ச் 2018 (UTC)

@Ravidreams:, @Dineshkumar Ponnusamy:, மேலும் மேல் குறிப்பிட்ட பிழை செய்தியோடு இந்த பயனர் பெயர் வருகிறது "Yoge9941112364" இவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? சம்பந்தமில்லாத ஒருவர் என்னை ஏன் தடுக்க வேண்டும்? இதை விரைவில் சரிசெய்யவும். எங்கோ தவறு நேர்ந்துள்ளது. நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 16:14, 27 மார்ச் 2018 (UTC)

@Ravidreams:, @Dineshkumar Ponnusamy:,வணக்கம். கட்டுரையை மீண்டும் fountain பக்கத்தில் சமர்பிக்க முயற்சி செய்து பார்த்தேன். இப்போது சமர்பிக்க முடிந்தது. கட்டுரை சேர்க்கப்பட்டுவிட்டது. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!.--உமாசங்கர் (பேச்சு) 01:30, 28 மார்ச் 2018 (UTC)

@Umashankar81: நிலைமை சீரானது அறிந்து மகிழ்ச்சி. நான் Yoge9941112364 என்ற பயனரை மட்டும் தான் ஒரு நாளுக்கு மட்டும் தடுத்தேன். ஆனால், அது தொடர்பே இல்லாத மற்ற பயனர்களுக்கும் தடை செய்தியைக் காட்டுகிறது. இன்னொரு பயனருக்கும் இதே சிக்கல் நேர்ந்தது. இது ஏன் என்று புரியவில்லை. --இரவி (பேச்சு) 13:54, 28 மார்ச் 2018 (UTC)

ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட புலம்பல் --AntanO (பேச்சு) 02:13, 28 மார்ச் 2018 (UTC)

AntanO (பேச்சு) அவர்களே, வணக்கம். இந்தக் கட்டுரையின் முழுமையான கருத்திற்கு ஏற்புடையதான தலைப்பு என்று நினைத்து தான் அந்த தலைப்பை கொடுத்தேன். "ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட புலம்பல்" சரியாக பொருந்துமா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் கவிஞர் ஜான் டான்னே தனது கவிதையில் காதலர்களின் பிரிவை இறந்தபோன ஆன்மாக்களோடு ஒப்புமை படுத்துகிறார். ஆகவே புலம்பல் என்று அழைப்பது தவறு அதற்குப் பதிலாக "துக்கம்" அல்லது "இரங்கல்" என்று வைத்துக்கொள்ளலாம். அப்படி பார்த்தால் என்னை பொருத்தவரையில் சரியான தலைப்பு "ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்" அல்லது "ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட இரங்கல்" எனலாம். இது எனது கருத்து. தலைப்பை மாற்றும் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்கள் சரியான தலைப்பை முடிவு செயது மாற்ற உதவுங்கள். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 04:49, 28 மார்ச் 2018 (UTC)
"ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்" அல்லது "ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட இரங்கல்" என்பதில் ஒன்றுக்கு மாற்றிவிடுங்கள். --AntanO (பேச்சு) 13:37, 28 மார்ச் 2018 (UTC)

உரை திருத்தம் தேவை

தொகு

@Umashankar81: முதலில் இலக்கியங்கள் தொடர்பான உங்கள் ஆர்வத்தைப் பாராட்ட விரும்புகிறேன். இத்தலைப்பில் உள்ள ஆங்கிலக் கட்டுரை மிகவும் சிக்கலான சொற்றொடர்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பின்வரும் இரண்டாம் பத்தி:

//Donne's use of a drafting compass as an analogy for the couple—two points, inextricably linked—has been both praised as an example of his "virtuoso display of similitude", and also criticised as an illustration of the excesses of metaphysical poetry; despite detractors, it remains "the best known sustained conceit" in English poetry. As well as citing this most famous example, literary critics point to Donne's use of subtlety and precise wording in "A Valediction", particularly around the alchemical theme that pervades the text.//

இதனைத் தற்போது தாங்கள் மொழிபெயர்த்துள்ள விதம் துல்லியமான பொருள் தராததாகவும் புரிந்து கொள்ளக் கடினமாகவும் உள்ளது. இதனைக் குறையாகச் சொல்லவில்லை. இதை எப்படி எளிமையாக மொழிபெயர்ப்பது என்று எனக்கும் புரியவில்லை. இது போன்ற கட்டுரைகளை உரை திருத்தும் அனுபவமுள்ள மற்ற பயனர்கள் உதவ வேண்டுகிறேன். @Rsmn, George46, and Booradleyp1: கட்டுரையில் உரிய மாற்றங்களைச் செய்த பிறகு போட்டியில் கணக்கில் கொள்ளலாம். தொடர்ந்து போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கும் நிலையில், சற்று மொழிபெயர்க்க இலகுவான கட்டுரைகளைத் தாங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்பது பணிவான வேண்டுகோள். நன்றி. இரவி (பேச்சு) 15:31, 24 ஏப்ரல் 2018 (UTC)

@Ravidreams:, மேல் உள்ள பத்தியை, என்னால் முடிந்த அளவு சிறிய திருத்தங்களை செய்துள்ளேன். "டான்னே தனது கவிதையில் காதலர்களின் ஒப்பீடாக, இரு புள்ளிகளை ஒப்பிட்டு காட்டும் திசைகாட்டி, முரண்பாடான பண்புகளால் இணைக்கப்பட்டவர்கள் ஆகிய இரண்டும் கலை நுணுக்கத்துடன் ஒத்திருக்கும் தன்மையை காட்டுகிறார்.[1] இது நுண்புலக் கவிதை வடிவின் சிறந்த எடுத்துக்காட்டு என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் அது ஆங்கில கவிதைகளில் "நன்கு அறியப்பட்ட கருத்தியல்" ஆகும். இலக்கிய விமர்சகர்களிடத்தில் அறியப்படும் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டு மேற்கோள், "டான்னே ஒரு நுட்பமான மற்றும் துல்லியமான வார்த்தைகளை குறிப்பாக "ஒரு பிரிவுரை" என்பதுடன் இணைத்து, கவிதையின் கருப்பொருளை அந்த வார்த்தைகளுடன் பொருந்துமாறு சரியாக பயன்படுத்துகிறார்"." --உமாசங்கர் (பேச்சு) 11:31, 25 ஏப்ரல் 2018 (UTC)


@Ravidreams:, வணக்கம் இரவி. பாராட்டுக்களுக்கு நன்றி!. ஆம் இலக்கியம் மீதான ஆர்வம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. நீங்கள் கூறியது போல நான் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அனைத்தும் மிகக் கடினமான, இலக்கியத்தை மையமாக கொண்ட புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு, கதை மாந்தர்கள் இப்படியாகவே அமைந்துவிட்டது. இது இயல்பாகவே நடந்த ஒன்று. மகாகவி பாரதி கூறியது போல பல நல்ல வேற்று மொழி நூட்களை தமிழில் படைப்போம் என்பதை மெய் படுத்த என்னால்லான ஒரு சிறு முயற்சி. அவ்வளவே தவிர வேறொன்றில்லை. வரும் நாட்களில் என்னால் முடிந்த உரை திருத்தம் செய்ய முயற்சிக்கிறேன். நான் பெரும்பாலும் ஆங்கிலத்தையே எனது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் தமிழில் எழுதும் போது அதிகமான பிழைகள் உண்டாகிறது. பிழைகளை குறைக்க என்னால் ஆன் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!--உமாசங்கர் (பேச்சு) 06:38, 25 ஏப்ரல் 2018 (UTC)
@Umashankar81: நிச்சயம், உங்கள் ஆர்வத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொள்கிறோம். நானும் மற்ற பயனர்களும் சேர்ந்த இக்கட்டுரைகளை மேம்படுத்த முனைவோம். --இரவி (பேச்சு) 10:36, 25 ஏப்ரல் 2018 (UTC)
Return to "ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்" page.