பேச்சு:கட்டாத்தி

இக்கட்டுரை குறிப்பிடுவது தமிழகத்தில் கொழுக்கட்டை மந்தாரை என அழைக்கப்படும் மஞ்சள் வண்ணப் பூ கொண்ட தாவரமா?--Booradleyp (பேச்சு) 04:06, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

  • தாவரவியல் அறிந்த பயனர்களின் கவனத்துக்கு:

மூலிகை கட்டாத்தி (காட்டாத்தி) என்பதன் தாவரவியல் பெயர்:Woodfordia fruticosa என்பது இக்கட்டுரை தரும் வெளி இணைப்பில் காணப்படுகிறது. ஆ.வி இல் இதற்குரிய கட்டுரையின்படியும் கூகுள் தேடலிலும் இச்செடியின் பூ சிவப்பாக உள்ளது.

ஆனால் இக்கட்டுரை கட்டாத்தியின் தாவரவியல் பெயர் Bauhinia tomentosa என்கிறது. மேலும் இத்தாவரத்தின் பூ மஞ்சள் நிறம் என்கிறது.

இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

- நீங்கள் சொல்லும் முரண்பாட்டினை பார்க்கிறேன். இதுபற்றி மேலும் தகவல் கிடைத்தால் சேர்க்கிறேன். --ஜீவா (பேச்சு) 15:38, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

  • Woodfordia fruticosa - வடஇந்தியாவில் காணப்படும் (இமயமலைப்பகுதிகளில்) அருகிவரும் மருத்துவ தாவரஇனம்.
  • Bauhinia tomentosa - நமது இலக்கியங்களிலும் இதுபற்றி குறிப்பிட மருத்துவ மரம்.சில வட இந்திய பகுதிகளிலும் காணப்படுகிறது.ஆத்தி,மலையாத்தி,மந்தாரை,புளியாத்தி,ஆரி என்றும் இதன் சிற்றினங்களுக்கு பெயருண்டு.
  1. சோழ மன்னர்கள் சூடும் உயரிய மலர்களை உடையது என சூடாமணி நிகண்டு கூறுகிறது.
  2. குறிஞ்சிப்பாட்டு: அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை
  3. பெரியபுராணம்: தலவிருட்சம்

பொங்கும் அன்பால் மண்ணில் மணல் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்

  1. தேவாரம்:

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டானாரே.
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி

- அரிய செய்திகளை அளித்தமைக்கு நன்றிகள் தகவலுழவன். --ஜீவா (பேச்சு) 02:14, 28 அக்டோபர் 2012 (UTC)

அருமையான விவரங்கள், தகவலுழவன்.

  • கட்டுரையில் தரப்பட்டுள்ள வெளி இணைப்பை நீக்கி விடலாமா?
  • தலைப்பு கட்டாத்தியா (கட்டு+ஆத்தியா) அல்லது காட்டாத்தியா? (காட்டு+ஆத்தி)
  • இதற்கு கொளுக்கட்டை மந்தாரை (மஞ்சள் நிறப் பூ) செடி, பூ படம் சரியானது என்றால் என்னால் இணைக்க முடியும்.

இந்த மூன்றுக்கும் உங்களது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 04:04, 28 அக்டோபர் 2012 (UTC)Reply

ஓ! நீண்ட நாட்களாக கவனிக்காமல் இருந்துவிட்டேன்.மன்னிக்கவும்.விரைவில் விரிவு படுத்த முயலுகிறேன். கட்டுரையின் வெளியிணைப்பை நீக்குதல் நன்றன்று. வலைப்பூவை நீக்குதல், பொதுவிதியாக இருப்பினும், அதிலிருந்து தான் தாவரவியல் பெயரை உறுதிபடுத்திக் கொண்டேன். (காட்டு+ஆத்தி) என்பதே சரி. பல தமிழ் பெயர்கள் அங்ஙனமே உள்ளது.கொளுக்கட்டை மந்தாரை (மஞ்சள் நிறப் பூ) செடி, பூ படம் சரியானாதா என்று என்னால் கூற இயலவில்லை. அதன் தாவரவியல் பெயர் தெரிந்தால், ஓரளவு இனங்கான முடியும். அதுவரை அப்படத்தை இப்பேச்சுபக்கத்தில் இணைக்க வேண்டுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 08:34, 24 ஏப்ரல் 2013 (UTC)
இந்தக் கட்டுரை தரும் விளக்கத்திலிருந்து கட்டுரை குறிப்பது Bauhinia tomentosa என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் என்பது உறுதியாகிறது. கூகுள் தேடலும் அதனை உறுதி செய்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரை தரும் தாவரத்தின் ஒரு சிறப்புவகையாக படக்காட்சியில் மட்டும் இதன் படம் தரப்பட்டுள்ளது. எனவே படம், தாவரவியல் பெயர் எல்லாம் சரி என்பது உறுதியாகிறது. ஆனால் இதன் தமிழ்ப் பெயர் குறித்துதான் குழப்பமே. மேலும் இத்தாவரத்திற்கு மருத்துவ குணங்கள் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.

வெளி இணைப்பு தரும் ’காட்டாத்தி’யின் தாவரவியல் பெயர், இலையமைப்பு இரண்டும் முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளது. --Booradleyp (பேச்சு) 05:47, 25 ஏப்ரல் 2013 (UTC)

இங்கு தாவரங்களின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. முன்பு ஒருமுறை, இதுபற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த தங்கலீசு! சொற்களை மாற்ற முயல்கிறேன். இயன்றவரை மாற்ற உதவுக.--≈ உழவன் ( கூறுக ) 04:34, 18 செப்டம்பர் 2013 (UTC)

வளர்நிலையில் தாவரங்களின் இலையமைப்பு வேறுபடுவதுண்டு. அது அங்கு தொட்டியில் தானே வளர்ந்து வருகிறது. எனவே, தவறென்று என்னால் கூற இயலவில்லை. ஒரு வாரத்திற்குள் தேடித்தருகிறேன். ஆனால், ஐயம் இருக்கும் அவ்வெளியிணைப்பை, கட்டுரையின் பேச்சுப்பகத்திற்கு மாற்றுதல் நல்லதென்றே எண்ணுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 05:56, 25 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரையில் தரப்பட்டுள்ள வெளி இணைப்பை நீக்கி விடலாம்ம் என்பது நான் நினைக்கிறேன் - --ஜீவா (பேச்சு) 23:28, 28 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டாத்தி&oldid=1501459" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கட்டாத்தி" page.