பேச்சு:கட்டுவள்ளம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

தலைப்பை கட்டுவள்ளம் என மாற்றலாம். வள்ளம் என்ற சொல் தமிழிலும் படகையே குறிக்கும். அண்மையில் வெளிவந்த நீர்ப்பறவை என்ற திரைப்படத்திலும், வள்ளம் என்ற சொல் வந்துள்ளது. கட்டுதல் என்ற சொல்லே மலையாளத்தில் கெட்டு என மாறியிருக்கிறது. அதைப் போல, படுதல் என்பதை பட்டு என்று சொல்வதை, மலையாளத்தில் பெட்டு என்பார்கள். உள்பட்ட(உட்பட்ட) என்பது மலையாளத்தில் உள்ப்பெட்ட எனத் திரியும். கட்டுவள்ளம் என மாற்ற பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:07, 16 சூலை 2014 (UTC)Reply

கட்டு வள்ளம் என்பது தான் சரியானது. கட்டு என்பதை மலையாளத்தில் கெட்டு என்றழைப்பார்கள், அதனால் அதனையே அப்படியே தமிழில் ஒலிபெயர்க்க வேண்டியதில்லை. கட்டு வள்ளம் என்ற சொல்லானது குமரி, திருவனந்தபுரம், மற்றும் வட இலங்கைத் தமிழர்களிடையே புழக்கத்திலிருக்கும் சொல்லே. ஆகையால், இக் கட்டுரையின் தலைப்பை கட்டு வள்ளம் என மாற்றுகின்றேன். --விண்ணன் (பேச்சு) 22:12, 27 ஆகத்து 2015 (UTC)Reply
நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:29, 29 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டுவள்ளம்&oldid=3506473" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கட்டுவள்ளம்" page.