பேச்சு:கணித மரபு


நன்றி + மூன்று தேவைகள் தொகு

திரு. செல்வா, திரு மயூரநாதன், திரு நட்கீரன் திரு சிவகுமார், ஆகிய நால்வருக்கும் என்னை ஊக்குவித்துப்பாராட்டியதற்கு நன்றி.

என்னுடைய தேவைகள் மூன்று.

1. நான் எழுதும் தமிழைத்தீட்டி நல்ல தமிழாக்கம் செய்வதற்காகவும், கல்லூரிகளில் கணிதத்தை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ளாத மாணவர்களும் கணிதப்பொருளைஅறிந்துகொள்ளும்படி நடை எளிமையாக இருக்கிறதா என்பதற்கும், என் கட்டுரைகளை ஆய்வுத்திறன் செய்து எனக்கு உதவ வேண்டும்.

2.வடிவியல் வரைபடங்கள் நிறையப்போடவேண்டியிருக்கும். நான் Latex முறையில் தட்டச்சு செய்ய இன்னும் கற்கவில்லை. வேறு எப்படி வரைபடங்களை upload செய்வது?

3. Abstract என்ற ஆங்கிலச்சொல்லிற்கு ச்சரியான தமிழ்ச்சொல்லை சீக்கிரம் முடிவு செய்யவேண்டும். நான் இச்சொல்லை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தவேண்டியிருக்கும்.

Abstract (as an adjective): நுண்பிய; நுண்புல:

Abstract (as a verb): தத்துவப்படுத்து; பண்படுத்து; நுண்பியம்பு;

Abstraction: பண்பியல் : நுண்பியம்; தத்துவப்படுத்துதல்; கருத்தியல் வழி காணல்;

இப்படி பல மாற்று முறைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. முடிவை நான் தமிழ் வல்லுனர்களுக்கு விடுகிறேன்.

--Profvk 06:42, 17 ஏப்ரல் 2007 (UTC)

பேரா.வி.கே. அவர்களுக்கு வணக்கம். கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற உங்களைப் போன்றவர்கள் இங்கு பங்களிக்கத் துவங்கினால் த.வி. மேலும் மெருகு பெறும்.
இந்தக் கட்டுரை நல்ல அறிமுகக் கட்டுரை. நடை மட்டும் கலைக் களஞ்சியத்திற்கேற்ப சிறிது மாற்றப்பட்டால் மேலும் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக "கணிதத்தின் மூச்சு" என்பனப் போன்ற பயன்பாடுகள் பொது வாசிப்பிற்கான ஆக்கங்களுக்குத் தகுந்தவையெனினும் இங்கு சற்றே ஒட்டாமல் நிற்கின்றன. இருப்பினும் இதைக் கூடுதலாகப் பொருட்படுத்த வேண்டாம். பிற பயனர்கள் ஆங்காங்கே சரி செய்துவிடுவர். உங்கள் பணி தொடர வேண்டும். -- Sundar \பேச்சு 14:06, 17 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணித_மரபு&oldid=124432" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணித மரபு" page.