கன்னடம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எழுத்துக்கள்

தொகு

-ஆறூ (ஆறு (தமிழில்)) - ஏழூ (ஏழு (தமிழில்)) //

கன்னடத்தில் ற,ழ போன்றவை ஹலே கன்னட எழுத்துக்கள் அல்லவா ? தற்கால ஹொச கன்னடத்தில் இவற்றுக்கு பதிலாக ர,ள போன்றவை தானே பயன்படுத்தப்படுகின்றன ? மேலும் இந்திய அரசு வெளியீட்டுள்ள இலவச இந்திய மொழி குறுந்தகட்டில் உள்ள பன்மொழி அகராதியிலும் ஆறு -ஆரு ; ஏழு -ஏளு என்றே தரப்பட்டுள்ளது.வினோத்ラージャン 13:06, 24 மே 2008 (UTC)Reply

கன்னடத்தில் ழ, ற, ன ஆகியன இருந்தன. இரண்டுசுழி னகரத்தை 1980களில்தான் நீக்கினார்கள். இன்றைய கன்னடத்தில் (அதாவது அரச ஏற்புபெற்ற கன்னடத்தில்) ழ, ற, ன ஆகியன கிடையாது என்றுதான் நினைக்கிறேன். --செல்வா 13:19, 24 மே 2008 (UTC)Reply

செல்வா, இந்த எழுத்துவடிவத்துக்கான மாதிரியை சுட்ட முடியுமா ? தெலுங்கிலும் ஈற்றெழுத்தாக நகர மெய்யை குறிக்கும் ஒரு எழுத்து வரும். இதை நகர பொல்லு என்று கூறிவார்கள் என நினைக்கிறேன். இது தற்கால பயன்பாட்டில் இல்லை.   (லோகாந்) . ஆ.வி.கன்னட கட்டுரையிலும் இந்த கன்னட எழுத்து ನ್ மூலம் பிரதி செய்யப்பட்டதாக கூறிகிறது. ஆக, இரண்டும் ஒன்றே என நினைக்கிறேன். இதை வைத்துதான் கன்னட எழுத்துமுறை கட்டுரையில் தகவல் சேர்த்துள்ளேன்
மறைந்த இக்கன்னட எழுத்தை எவ்வாறு 'ன'கரத்தை குறிக்க பயன்படுத்தினார்கள் என அறிய ஆவல். கன்னட எழுத்துமுறை குறித்த கட்டுரையில் திருந்தங்கள் செய்வதற்கு உதவியாக இருக்கும் வினோத்ラージャン 13:51, 24 மே 2008 (UTC)Reply

இந்த இரண்டுசுழி னகரத்தைப் பற்றி ( vyanjana??) எங்கோ படித்தேன், ஆனால் நினைவில்லை. ஆனால் மூன்று லகர வகைகள் உள்ளன என்று நினைக்கிறேன் (முதல் இரண்டும் உறுதி): ள் ள (ಳ್ ಳ), ல் ல (ಲ್ ಲ) , ழ் ழ (ೞ್ ೞ ??) என்று நினைக்கிறேன். பரஃகா (Baraha) தட்டெழுதி மென்பொருளில் Lx என்று குறிப்பிட்டுள்ளது ழகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன் (அல்லது பழைய ளகர வடிவமா??). நன்றாக கன்னடம் அறிந்தவர்கள் யாரிடமாவதுதான் இது பற்றிக் கேட்கவேண்டும்.--செல்வா 15:00, 24 மே 2008 (UTC) ஆங்கில விக்கியில் இங்கே கன்னடத்தில் மறைந்த றகர, ழகரத்தைப் பற்றிய குறிப்பைச் சுட்டுகிறார்கள். --செல்வா 15:11, 24 மே 2008 (UTC)Reply

மூன்றாவது ழகரம் தான் செல்வா. யூனிகோட் வழக்கம் போல் செய்யும் குளறுபடியாக இந்த எழுத்தை Kannada Fa என இட்டுள்ளது. யூனிகோட்டின் எழுத்துக்களின் பெயரை மாற்ற முடியாதென்ற அதிஅற்புதமான விதி இருப்பதால், கன்னட யூனிகோடு அட்டவணை ஆவணத்தில் இந்த எழுத்தை குறித்த குறிப்பில் மட்டும் name is a mistake for LLLA என இட்டுள்ளது.

மலையாளத்தின் இரண்டு சுழி னகரத்தை ஏதோ ஒரு வலைத்தளத்தில் கண்டதாக நினைவு. எனினும் இவ்வெழுத்து எப்போது மறைந்தது என தெரியவில்லை வினோத்ラージャン 15:22, 24 மே 2008 (UTC)Reply

சான்றுகோள்கள்

தொகு

பெயர் அறிவிக்காத பயனர்(117.97.38.58), கட்டுரையில் "2500" ஆண்டுகள் என்று மாற்றியதை இல்லாது செய்துள்ளேன். தக்க சான்றுகோள்கள் இல்லாமல் இப்படி திருத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.--செல்வா 13:31, 21 செப்டெம்பர் 2009 (UTC)Reply

ஆதாரம் தேவை

தொகு

//மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான// இந்த கூற்றுக்கு ஆதாரம் தேவை..--−முன்நிற்கும் கருத்து முகுந்தன்78 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கன்னடம்&oldid=3783791" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கன்னடம்" page.