பேச்சு:கல்வெட்டியல்

தமிழ்க்கல்வெட்டுகள் பற்றியும், இந்திய கவெட்டுக்கள் பற்றியும் கருத்துக்கள் சேர்க்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அதிகமாக கல்வெட்டுக்கள் உள்ள மொழிகளுள் தமிழ் ஒன்றாகும். முனைவர் நாகசாமி, 1973ல் தோராயமாக கணித்தபடி 25,000க்கும் அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன. கன்னட மொழியில் 30,000 கல்வெட்டுக்கள் உள்ளதாக ஆங்கில விக்கியில் சொல்லப்பட்டுள்ளது (அடிப்படை மேற்கோள் எதுவென்று தெரியவில்லை). தமிழ் கல்வெட்டுக்கள் பற்றியும் பிற எழுத்துப் பதிவுகள் பற்றியும் எழுத வேண்டும். பார்க்கவும்: பேச்சு:கல்வெட்டு. --செல்வா 15:30, 14 ஏப்ரல் 2007 (UTC)

இக்கட்டுரை ஆங்கில விக்கியிலிருந்ததை மொழிபெயர்த்து ஒரு தொடக்கமாக எழுதப்பட்டது. தொடர்ந்து எழுத எண்ணியுள்ள பல கட்டுரைகளுக்கான தொடக்கமாகவே இது உள்ளது. இந்திய, மற்றும் தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்படுகின்றன. சில முக்கியமான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் பற்றித் தனிப்பக்கங்களும் எழுத எண்ணியுள்ளேன். Mayooranathan 17:11, 14 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி, மயூரநாதன். எனக்கே நினைவு படுத்திக்கொள்ளவே மேலே உள்ள குறிப்பை இட்டிருந்தேன். 25,000 தமிழ் கல்வெட்டில் 6,000 என்னவோதான் பதிவு செய்திருக்கிறார்கள். ஜெர்மன் பல்கலைக்கழகம் கொலோன் (cologne) எண்மியப் பதிவுகள் செய்யவிருக்கிறார்கள்.--செல்வா 18:19, 14 ஏப்ரல் 2007 (UTC)

Start a discussion about கல்வெட்டியல்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்வெட்டியல்&oldid=123713" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்வெட்டியல்" page.