பேச்சு:கழி நெடிலடி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Parvathisri
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தளைகள் வெவ்வேறானவையாக இல்லை. நிரையொன்றாசிரியத்தளை மூன்று முறை தரப்பட்டுள்ளது.--Booradleyp (பேச்சு) 17:11, 17 ஆகத்து 2012 (UTC)
- இங்கு குறிப்பிட்டுள்ள தளைகள் ஐந்து சீர்களுக்கிடையே பயின்று வருபவை. சீர் பிரிக்கும் போது (அலகீட்டு வாய்பாடு) வரும் தளைகள். ஒரு பாவில் வெவ்வேறான தளைகள் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தளைகளைக் கொண்டுதான் வெண்பாவா ஆசிரியப்பாவா கலிப்பாவா என பா வகைகளை அறியலாம்.
மன்னிக்கவும். 5 தளைகளால் இப்பெயர் என்பதால் 5ம் வெவ்வேறாக இருக்க வேண்டுமோ என்ற குழப்பம். யாப்பிலக்கண அறியாமையே காரணம். விளக்கியமைக்கு நன்றி.
- கழி நெடிலடி என இடம்விட்டு வருமா, கழிநெடிலடி என இணைந்து வருமா அல்லது இருவிதமாகவும் வரலாமா?--Booradleyp (பேச்சு) 17:23, 17 ஆகத்து 2012 (UTC)
- இடம் விட்டே வர வேண்டும். கழி என்பது மிகுந்த என்ற பொருளில் வரும். நெடிலடியினும் மிகுந்ததால் கழி நெடிலடி ஆகும் நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:47, 17 ஆகத்து 2012 (UTC)
- நன்றி. கட்டுரைக்குள் சேர்ந்து வரும் இடங்களைப் பிரித்து விடுகிறேன்.--Booradleyp (பேச்சு) 18:06, 17 ஆகத்து 2012 (UTC)
- கழிநெடிலடி என இடம் விடாமலும் வரும், அப்படி வருவதே வழக்கமும். கழிபேருவகை, கழிபெரும் மகிழ்ச்சி என்றும் கூட வரும். இரண்டு உரிச்சொற்கள் சேர்ந்து வருவதால் சேர்ந்தே வரலாம். கழி + நெடில் ஆகிய இரண்டும் உரிச்சொல் அல்லது பெயரடை (அடி என்பது இங்கே பெயர்ச்சொல்). மேலும், ஐந்து தளைகள் வரவேண்டும் என்பதன் விளக்கம் சரியாக விளங்கவில்லை. ஆறு சொற்கள் இருந்தால் இடையே ஐந்து தளைகள் இருக்கும்தானே. ஒருகால் ஓரடியின் கடைசிச் சீருக்கும் அடுத்து வரும் அடியின் முதற்சீருக்கும் இடையே தளை இருப்பதாகக் கருதவேண்டாம் என்பது குறிப்பா? ஒவ்வொரு பாவினத்துக்கும் இன்னின்ன தளைகள்தாம் வரலாம் என்னும் விதிகள் உண்டு. வெண்பாவில் கலித்தளை போன்ற பற்பல தளைகள் வரலாகாது. பாவின் இனங்களே சீர், அடி, தளை முதலியவற்றால் வரையறுக்கப்படுவன. ஐந்து தளைகளும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று கூற வரவில்லை, என்னென்ன தளைகள் வரலாம் என்பது பற்றியும் ஏன் ஐந்து தளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறுதல் வேண்டும் என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 18:29, 17 ஆகத்து 2012 (UTC)
- நன்றி செல்வா காண்க தளை (யாப்பிலக்கணம்) மேலும் எடுத்துக்காட்டுச் செய்யுள் ஆசிரியப் பாவாலானது. எனவே நிரையொன்றாசிரியத் தளை சீர்களில் வந்துள்ளது. பிற தளைகள் பயின்றும் வருபவை பற்றி,
- மாமுன் நேர் வருவது நேரொன்றாசிரியத் தளை - ஆசிரியப்பாவுக்குரியது.
- விளம்முன் நிரை வருவது நிரையொன்றாசிரியத் தளை -ஆசிரியப்பாவுக்குரியது.
- மாமுன் நிரையும் விளம்முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை - வெண்பாவுக்குரியது.
- காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை - வெண்பாவுக்குரியது.
- காய்முன் நிரை வருவது கலித்தளை - கலிப்பாவுக்குரியது.
- கனிமுன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை - வஞ்சிப்பாவுக்குரியது.
- கனிமுன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித்தளை - வஞ்சிப்பாவுக்குரியது.