பேச்சு:கவுரியர்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic விளக்கம்

//கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது.//

மேலுள்ள தொடர் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:10, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

கவவு அகத்திடுமே. (தொல்காப்பியம் 2-357, உரியியல்) --Sengai Podhuvan (பேச்சு) 20:13, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி.

ஆனால் கவவு என்ற சொல் தான் கவுரியர் ஆனது என ஏதேனும் நூலில் உள்ளதா அல்லது அது உங்கள் சொந்தக் கருத்தா? மேலும் கவுரியர் நாடு தனுஷ்கோடி என்பதற்கு ஆதாரம் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:10, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

கவவு என்ற சொல் தான் கவுரியர் ஆனது - இது உங்கள் கருத்து
கோடி - பாடலில் தெளிவு உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 19:27, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

//கவவு என்ற சொல் தான் கவுரியர் ஆனது - இது உங்கள் கருத்து//

இது என்னுடைய கருத்தெல்லாம் அல்ல. கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். என்பதற்கு மட்டும் தான் இரண்டாம் நிலைச் சான்று தரப்பட்டுள்ளது. கீழுள்ள வாக்கியம் எந்த இரண்டாம் நிலை மூலங்களில் இருந்து எடுக்கப்பட்டது?

//இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது.// இப்படி கவவு-->கவர்-->கவுரியர் என்று எந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது? இந்த முறையை எந்த நூலில் யார் சொன்னார்? நீங்கள் கொடுத்த இரண்டாவது மேற்கோள் இரண்டாம் நிலை விளக்கம் மட்டுமே. இலக்கியத்தில் உள்ள கோடி எனக் குறிப்பிடப்படும் இடம் தனுஷ்கோடி என்பது எந்த நூலில் பதியப்பட்டது? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:00, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்கள் கருத்துக்குச் சான்று எனக்குத் தெரியவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 06:44, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

மீண்டும் சொல்கிறேன். அது என்னுடைய கருத்தல்ல. நீங்கள் கட்டுரையில் கொடுத்த உள்ளடக்கங்களுக்கு நான் எந்த நூல் எனக் கேட்பது கேள்வி.

////இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது.//

இந்த வாக்கியம் கட்டுரையில் நீங்கள் எழுதியது தானே? இது எந்த நூலில் கூறப்பட்டவை?

மீண்டும் உங்கள் கருத்து எனக் கூற வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:40, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

  • வரலாற்றைப் பார்த்து என் குறிப்புதான் என அறிந்துகொண்டேன்.
  • செப்பம் செய்துள்ளேன்
  • நீங்களும் செப்பம் செய்து முடித்துவிடுங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 05:25, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

வென் வேல் கவுரியர் தொன் முது கோடி - அகம் 70/13 வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை - அகம் 342/4 தவிரா ஈகை கவுரியர் மருக - புறம் 3/5 கவவு என்பதே காவு என நடைமுறையில் உள்ளதே. காவுதல், கவ்வுதல், வவ்வுதல் என்றாலும் கவர்தல் என்றே பொருள்படும். கவவுக்கரந்து என ஏதோ ஒரு தொல்தமிழ்ப்பாடலிலும் உள்ளதாகத்தெரிகிறது! கரும் காக்கை கவவு முனையின் - பொரு 184 மாய பொய் பல கூட்டி கவவு கரந்து - மது 570 நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி - மது 663 கவவு கொள் இன் குரல் கேள்-தொறும் - நற் 212/9 கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை - நற் 350/7 கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் - குறு 132/1 அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி - ஐங் 360/3 கவவு கை விட பெறும் பொருள் திறத்து - கலி 14/18 காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது - கலி 33/7 கவவு இன்புறாமை கழிக வள வயல் - அகம் 13/17 கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை - அகம் 26/17 கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து - அகம் 361/6 வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் - நற் 52/5 ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் - கலி 90/10 அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்/பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் - கலி 91/13,14 ஐயம் இன்றி கடும் கவவினளே - நற் 297/11 கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு/ஒண்மை எதிரிய அம் கையும் தண் என - கலி 83/17,18 பிரிந்து உறல் அறியா விருந்து கவவி/நம் போல் நயவர புணர்ந்தன - ஐங் 419/2,3 கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால் - கலி 35/11

அனானி பயனரின் மேற்கோகள் கவவு சொல் வரும் பாடல்களை பட்டியல் இடுகிறது. ஆனால் கவவு எப்படி கவவியர் என மாறாமல் கவுரியர் என மாறிற்று என விளக்க முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:01, 30 நவம்பர் 2014 (UTC)Reply

பயனர்:Sengai Podhuvan அவர்களும் மேற்குறித்த வினாவுக்கு விடை தர முயலலா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:54, 5 திசம்பர் 2014 (UTC)Reply

விளக்கம் தொகு

"மளிதிறை ஊர்ந்துதன் மண்கடல் வ/வௌவ்வலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட வலிவினால் வனக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" கவ்வுதல் வவ்வுதல் என்பன ஒரேபொருள்கொண்டனவாகத் தெரிகின்றன. மேலும் பாண்டியன் நெடுஞ்செழியனே தென்னவனாகவும் கவுரியர் மருகனாகவும் பாடல்களில் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் சத்திரியன் அல்லாதவன் என்பதை மணிமேகலையில் காணலாம்! அவனது போர் ஆரியருக்கு எதிரானது என்பதையே இப்பாடல்கள் உணர்த்துகின்றன! மௌரியரை மோரியர் எனவும் கவுரியரை கொரியர் எனவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன! நெடுஞ்செழியன் ஒரு மங்கொளியன் என்பதை ஒளியர் குறித்த பழந்தமிழ்ப்பாடல்களிலும் ரிக்வேதத்திலும் காணலாம்.
  
கவுரியர் - கௌரியர் (எழுத்துப்போலி)
கவ்வினான் - கௌவினான் (எழுத்துப்போலி)
அவ்வை - ஔவை (எழுத்துப்போலி)
கவ்வினான் - கவ்வு - பகுதி
கவ்வு - கவை(கவட்டை) போல் முழங்கையை மடக்கி மற்றொருவரைத் தன்னகத்தே இட்டுக்கொள்ளுதல், அரவணைத்துகொள்ளுதல்
கவ்வு - கவவு
எண்ணிப் பார்க்கலாம். தமிழ்ச்சொல் என்று எண்ணுவோம்
சொல்லுக்குக்காகப் போராட வேண்டியதில்லை.
வேண்டாம் என்றால் நீக்கிவிடுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 00:24, 6 திசம்பர் 2014 (UTC)Reply

நீங்கள் இதற்கு பதில் சொன்னால் என்னுடைய ஆய்வுக்கு பயன்படுத்தனும் என்ற எண்ணத்திலேயே கேட்டது. வேறொன்றுமில்லை. நீங்கள் இதை சேர்க்கவில்லை என்றால் கூட நாளை நான் இந்த கருத்தை பரவலாக ஏற்கச்செய்துவிட்டு மேற்கோளோடு சேர்ப்பேன். தகுந்த துறை சார்ந்த ஊடக்ங்களில் ஏற்றி ஏற்கச்செய்தால் மட்டுமே விக்கியில் எழுத முடியும் அல்லவா. அதனால்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:40, 6 திசம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவுரியர்&oldid=3019122" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கவுரியர்" page.