பேச்சு:காச நோய்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic காசு போல் சளி
காச நோய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
காச நோய் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது TB எனில், இது "சுவாசத் தொகுதியை" மட்டும் பாதிக்ககூடிய நோய் அல்ல. உடலின் எந்த உறுப்பையும் (எலும்பு உட்பட) தாக்கவல்லது. காசநோய் என்பது நுரையீரலைப் பற்றும் TB யைக் மட்டும் குறிப்பதாக கட்டுரையாளர் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை. --செல்வா 03:32, 24 மார்ச் 2007 (UTC)

அடிக்குறிப்புகள் கொடுத்தல்

தொகு

ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து வருகிறேன். அங்கே கொடுக்கப்பட்டிராத அடிக்குறிப்புக்களையும் தேடிக் கொடுக்க முயல்கிறேன். 11 ஆவது அடிக்குறிப்பு நேரடியாக ஆங்கில விக்கியிலிருந்து, வெட்டி ஒட்டியுள்ளேன். ஆனாலும் அது சரியாக வரவில்லை. காரணம் தெரியவில்லை :(. யாராவது பார்த்து சரி செய்து விடுங்கள்.

திருத்தியுள்ளேன். நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 00:54, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply
நன்றி Kanags. நீங்கள் செய்திருந்த மாற்றங்களைப் பார்த்தேன். என்ன தவறு என்பது புரிந்தது. ஆனாலும் ஒன்று புரியவில்லை. ஆங்கில விக்கியில் மட்டும் எப்படி அந்த குறிப்பிட்ட வார்ப்புரு சரியாக வேலை செய்கின்றது என்பதுதான் புரியவில்லை. --கலை 10:21, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply
ஒரே மேற்கோள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வரும்போது முதலாவது இடத்தில் முழுமையான முழு விபரங்களையும் இட்டு அந்த மேற்கோளுக்கு ஒரு பெயரும் இடவேண்டும், இவ்வாறு: <ref name=Britannica1911>[http://www.1911encyclopedia.org/Tuberculosis Tuberculosis] ''Encyclopedia Britannica,'' 11th ed.</ref>. மற்றைய இடத்தில் <ref name=Britannica1911/> என மட்டும் எழுதினால் போதுமானது.--Kanags \பேச்சு 11:08, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply
மிகவும் நன்றி Kanags. நானும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வார்ப்புருக்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் :). --கலை 21:50, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply
நன்றி. kanags. ஆனால் இதில் சென்று பார்த்தல் இரண்டு வரி மட்டுமே உள்ளது. எப்படி இணைப்பது. கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்...எனக்கு சரியாக விளங்கவில்லை. http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D&action=edit&section=12 --Ragunathan 13:27, 22 செப்டெம்பர் 2009 (UTC)Reply

உரைத் திருத்தங்கள்

தொகு

கலை, நீங்கள் பக்றீரியா என்று எழுதுவதை பாக்டீரியா என்று மாற்றலாமா? முன்பொரு முறை உரைத் திருத்தம் செய்தபொழுது பாக்டீரியா என்று உங்களைக் கேட்காமலே மாற்றி எழுதினேன். அதே போல நுணுக்குக்காட்டி என்பதை நுண்ணோக்கி என மாற்றலாமா? தொலைநோக்கி என்பது போல நுண்ணோக்கி. இலங்கையில் நுணுக்குக்காட்டி என்னும் சொல் வழங்குகின்றது என அறிவேன். சீர்மை கருதி நுண்ணோக்கி எனலாம். அச்சொல்லில் காட்டி என்னும் பின்னொட்டு சரியென்றாலும், நுணுக்கு என்னும் முற்பகுதியோடு சேர்ந்து வரும்பொழுது பிழையான பொருளைச் சுட்டும். நுணுக்கம், நுட்பத்தை (அதாவது செயல் நுணுக்கம், நுட்பத்தைக்) காட்டி என்னும் படி பொருள் தரும். நுண்பொருள் காட்டி என்றால் சரியான பொருள் வரும், ஆனால் நீண்டுவிடும். நுண்காட்டி->நுக்காட்டி என்று சொல்லலாம். ஆனால் பெருவழக்காக இருக்கும் நுண்ணோக்கி என்பதனையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆசிட் என்பதனை காடி என்று எழுதலாம் (அமிலம் என்றும் எழுதலாம் ஆனால் அது தமிழ் அல்ல. புளிமம் என்று எழுதலாம் ஆனால் அது வழக்கில் இல்லை). அக்கறையுடன் நீங்கள் அளித்துவரும் பங்களிப்புகளைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. --செல்வா 01:06, 17 செப்டெம்பர் 2009 (UTC)Reply

நன்றி செல்வா. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி நுண்ணோக்கி, பாக்டீரியா, அமிலம் என்றே எழுதலாம். உண்மையில் அசிட் க்கு தமிழ் அமிலம் என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் நேற்று யோசித்தபோது நினைவில் வர மறுத்துவிட்டது. அதனால் அப்போதைக்கு அசிட் எனக் குறிப்பிட்டுவிட்டு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்றிருந்தேன். நினைவூட்டியதற்கு நன்றி. இனிமேல் தமிழாக்கங்கள் செய்யுய்ம்போது இவற்றை கவனத்தில் கொள்கின்றேன். --கலை 07:52, 17 செப்டெம்பர் 2009 (UTC)Reply
மறுமொழிக்கு நன்றி கலை. --செல்வா 00:54, 19 செப்டெம்பர் 2009 (UTC)Reply

பொறுப்பு துறப்பு

தொகு

இது போன்ற மருத்துவக்கட்டுரைகளில் பொதுவாக, படிப்பவர்கள் நோய் பற்றி அறிந்துகொள்ளவே பாவிக்குமாறும் இதன் அடிப்படையில் சுயசிகிட்சை அல்லது குறிப்பிட்டுள்ள மருந்துகளை உட்கொள்ளுதல் கூடாது, தகுந்த மருத்துவர்களின் அறிவுரைப்படியே சிகிட்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஓர் பொறுப்பு துறப்பு அறிவிப்பு இருக்கும். அத்தகைய அறிவித்தல் குறித்து விக்கிப்பீடியா கொள்கை என்ன ?--மணியன் 05:10, 18 செப்டெம்பர் 2009 (UTC)Reply

ஒவ்வொரு கட்டுரையிலும் இடத் தேவை இல்லை. ஆனால், பொதுவான பொறுப்பு துறப்பு பக்கங்கள் எழுத வேண்டும். பார்க்க: ஆங்கில விக்கிப்பீடியா மருத்துவ பொறுப்புத் துறப்பு பக்கம்.--ரவி 10:02, 18 செப்டெம்பர் 2009 (UTC)Reply
எனக்குத் தெரிந்த அளவில் விக்கிப்பீடியா:மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம் கட்டுரையை எழுதியுள்ளேன். தவறுகள் இருந்தால், தெரிந்தவர்கள், தயவு செய்து திருத்தி விடுங்கள். அத்துடன் அந்த கட்டுரைக்கான இணைப்பை காசநோய் கட்டுரையிலும் கொடுத்து விடுகிறேன்.--கலை 00:04, 19 செப்டெம்பர் 2009 (UTC)Reply
ஒரு பிழை விட்டுவிட்டேன். விக்கிபீடியாவில் விக்கிப்பீடியா:மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம் கட்டுரை தொகுப்பதற்குப் பதிலாக, தவறுதலாக விக்சனரியில் மருத்துவ பொறுப்புத் துறப்பு பக்கம் கட்டுரையின் தொகுப்பை செய்துவிட்டேன். அதை நீக்க வேண்டுமா என்பது தெரியவில்லை.--கலை 00:12, 19 செப்டெம்பர் 2009 (UTC)Reply
விக்சனரியில் நீங்கள் இட்ட கட்டுரையை நீக்கும் படி delete வார்ப்புருவை சேர்த்திருக்கிறேன். நிர்வாகிகள் யாராவது அதனை நீக்குவார்கள்.--Kanags \பேச்சு 11:07, 19 செப்டெம்பர் 2009 (UTC)Reply
  • கட்டுரை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 3 இல் 1 ஒருவருக்கு இந்நோயின் தாக்கம் மறைமுகமாக இருக்கும் என்பது போன்ற நுண்ணறிவு அனைவரும் அறிந்து, பிறருக்கும் அறிவிக்கப் பட வேண்டிய செய்தியாகும். எந்தப் பிணிக்கும் மருந்துகளை, மருத்துவரிடம் கேட்டே உட்கொள்ள வேண்டும் என்பது பொது விதி. மருத்துவரே நோய்தாக்கப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தீவிரத்தன்மை என்பது போன்று வேறுபடுகின்றனர். இவ்வாறான பொதுவான அறிவித்தல் தமிழ்விக்கிப்பீடியாவுக்கு அவசியமில்லை. அதனைத் தான் பல துறையினரும் கரடியாகக் கத்துகின்றனரே! ஆனால் மிகச்சுலபமாக அதனை இந்திய மருத்துவத்துறையினரே, பயன்பாட்டுக்கு மருந்துகளை விடுகின்றனர் என்பதே வேதனை.
நன்றி. த* உழவன் 12:57, 19 செப்டெம்பர் 2009 (UTC){தொடர்புக்கு..}Reply

அடிக்குறிப்பு கொடுத்தல்

தொகு

இந்த காசநோய் கட்டுரையில் 26 ஆவது அடிக்குறிப்பு (”5. தொற்றும் பரவலும்” பகுதியில் இறுதியில் வருகின்றது) எழுதியதில் ஏதோ ஒரு பிழை உள்ளது. என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாராவது அதை திருத்தி விடுங்கள் அத்துடன் என்ன பிழை என்பதையும் கூறினால், நானும் கற்றுக் கொள்ள முடியும். நன்றி. --கலை 22:14, 30 செப்டெம்பர் 2009 (UTC)Reply

cite bulletin என்ற வார்ப்புரு இங்கு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அது காட்டப்படவில்லை. ஆங்கில விக்கியில் தேடினேன். அங்கும் அவ்வார்ப்புரு இல்லை. (எங்கிருந்து இக்குறிப்பை எடுத்தீர்கள்?). எனினும், கட்டுரையில், cite bulletin என்பதற்குப் பதிலாக cite journal என மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 14:11, 2 அக்டோபர் 2009 (UTC)Reply
நன்றி Kanags. நான் அதை ஒரு Bulletin இலிருந்து எடுத்தமையால், ஏனைய வார்ப்புருக்களைப் பார்த்து விட்டு bulletin என்று குறிப்பிட்டேன். எனக்கு முதலே அதற்கான வார்ப்புரு உருவாக்கப்ப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியாது. ஆனால் journal என்று எழுதினாலும் தவறில்லை. இப்போது அடிக்குறிப்பு சரியாகத் தெரிகின்றது. நன்றி. --கலை 00:07, 3 அக்டோபர் 2009 (UTC)Reply

காசு போல் சளி

தொகு

சுவாசகுழாய் (trachea) என்பது பல ringகளால் ஆனது. காச நோயில் இதில் அடைபடும் சளியானது வெளிவரும் போது கட்டியாக தட்டையாக காசு போலிருக்கும். இதை ஆங்கிலத்தில் coin shaped sputum என்பார்கள். இதனால் தான் நம்மவர்கள் இந்நோய்க்கு இந்த பெயரை வைத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 10:25, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

புருனோ, உங்கள் கருத்துக்கு நன்றி. வெகு நாட்களுக்குப் பிறகு இங்கு உங்களைப் பார்கின்றேன். ஏதும் மாற்றங்கள் தேவை எனில் மருத்துவராகிய நீங்கள் செய்து தர வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 23:17, 18 அக்டோபர் 2009 (UTC)Reply

இது நல்ல தமிழில் என்புருக்கிநோய் எனவழங்கப்படுகிறது. எனவே இத்தலைப்பையும் முன்னோட்டத்தில் (Lead) முதலில் அமையும்படிக் கூடுதலாகச் சேர்த்துள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:15, 12 அக்டோபர் 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காச_நோய்&oldid=4176146" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காச நோய்" page.