பேச்சு:காட்டுத்துமட்டி

இக்கட்டுரை வெள்ளரி (பேரினம்) என்றிருக்க வேண்டும். அல்லது வேறு ஏதும் தாவரம் பற்றிக் குறிப்பிடுகிறதா? --AntanO 06:28, 18 நவம்பர் 2015 (UTC)Reply


வெள்ளரி (Cucumber) காட்டுத்துமட்டி (தாவரம்) (Cucumis) அல்லது (cucumis trigonus) என்ற ஆங்கில பதம் கொண்டு பார்க்கும்போது [1] காட்டுத்துமட்டி என்றால் Bitter gourd என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --Muthuppandy pandian (பேச்சு) 05:26, 19 நவம்பர் 2015 (UTC)Reply

Bitter gourd என்பது பாகல் எனப் பொதுவாக அறியப்படுகிறதே? --AntanO 05:46, 19 நவம்பர் 2015 (UTC)Reply

அப்படி என்றால் Bitter gourd என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள். cucumis trigonus என்ற ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கட்டும். --Muthuppandy pandian (பேச்சு) 08:31, 19 நவம்பர் 2015 (UTC)Reply

ஆனால் இணைக்கப்பட்டுள்ள பிற விக்கிக் கட்டுரைகள் பேரினம் பற்றிக் குறிப்படுகிறன. தகவல் பெட்டியில் உள்ள படம் காட்டுத்துமட்டியா? மற்றவர்களும் கருத்துக் கூறினால் நன்று. @செல்வா:, @Kanags: --AntanO 12:36, 19 நவம்பர் 2015 (UTC)Reply

கட்டுரையின் படத்தில் காணப்படும் பழத்தின் பெயர் ”முலாம்பழம்”. தமிழ்நாட்டில் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது. [2]--Booradleyp1 (பேச்சு) 13:19, 19 நவம்பர் 2015 (UTC)Reply

பேரினம் என்பதை வெள்ளரி-பரங்கியினம் எனக் கூறலாம். புலி-பூனையினம் என்பதுபோல. cucurbita என்னும் இலத்தீனச் சொல்லின் வேர்ப்பொருள் தெரியவில்லை என்றே இலத்தீன அகராதிகள் கூறுகின்றன.

  1. நோத்திரதாம் அகராதி cucurbita -ae f. [a gourd; a cupping-glass]
  2. LatDict: cup, cupping-glass; dolt/pumpkin-head; gourd (plant/fruit) (Cucurbitaceae).
  3. Perseus: a gourd planter, cupping


LatDict மூலத்தைப் பற்றிக் கூறுவது Source: General, unknown or too common to say
cucurbita என்னும் மூல இலத்தீனச் சொல்லில் இருந்து பிரான்சிய மொழிவழியாக ஆங்கிலத்தில் gourd என 14-ஆவது நூற்றாண்டில் இருந்து வழக்கில் உள்ளது (ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி (OED) தரும் வடிவங்களும் மூலமும்: Forms: ME–15 goord(e, gourde, gowrd(e, (ME gurd, 15 goward(e, gord, 17 goard), ME– gourd. Etymology: < French gourde, repr. Latin cucurbita). இந்த gourd என்பது புறத்தே கெட்டியான தோலும் உள்ளே செழிப்பான கதுப்பும் சாறுமுடைய பழவகை என்கிறது ஆங்கில அகராதிகள். உள்ளே உள்ள சதைப்பற்றான பகுதியைத் தோண்டி எடுத்துவிட்டு, உறுதியான புற ஓட்டை ஒரு பாத்திரம் அல்லது கலம் போலப் பயன்படுத்தலாம் என்கிறது. 'cupping, cup' முதலான சொற்பொருள்கள் இதனால் வந்தவை. முலாம்பழம் என்பதன் மூலப்பொருள் என்னவென்று விளங்கவில்லை. இப்பழம் பூசணி, வெள்ளரி, பரங்கி, தர்ப்பூசனி போன்ற பழவகையைச் சேர்ந்த இனம். முலாம் பழம் என்னும் அண்மைய வழக்கு இருப்பதால், கட்டாயம் அப்பெயரைக் குறிப்பிடல் வேண்டும் அல்லது அத்தலைப்புக்கு மாற்றப்பட வேண்டும். துமட்டி என்னும் சொல்லின் பொருளும் தெரியவில்லை. பேய்த்துமட்டி, ஆற்றுத்துமட்டி செடிகளைப்பற்றி சித்தமருத்துவ நூல்கள் சொல்கின்றன, எனவே துமட்டி என்னும் செடிவகை இருக்கவேண்டும். படத்தில் இருப்பது ஆங்கிலத்தில் cantaloupe என்னும் பழம். இச்சொல் ஆங்கிலத்தில் 18-ஆவது நூற்றாண்டிலிருந்துதான் வழக்கில் உள்ளது (OED). காட்டு, பேய் முதலான முன்னொட்டுகள், பொதுவாக உண்ணாத செடிகொடி, பழங்களுக்குப் பெயர். இப்பழம் இனிப்பாக நன்றாக இருக்கும். ஆகவே காட்டுத்துமட்டி என்பது பொருந்தாது அல்லது தவறான பெயராக இருக்கும் என நினைக்கின்றேன். முலாம்பழம் எனக் கட்டுரையின் பெயரை மாற்றலாம்.--செல்வா (பேச்சு) 22:08, 19 நவம்பர் 2015 (UTC)Reply

சென்னையில் கிர்ணிப்பழம் என்றும் இதனைச் சொல்வார்கள்.--செல்வா (பேச்சு) 23:54, 19 நவம்பர் 2015 (UTC)Reply


தர்ப்பூசணி (Watermelon), (Canary melon), என்பவை போல இந்த பழமும் உள்ளது. ஆங்கில விக்கியில் cucumis என்பதற்க்கு அடுத்து trigonus என்ற வார்த்தை இல்லை, ஆனாலும் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பஞ்சகால தாவரங்கள் என்ற புத்தகத்தில் cucumis trigonus என்ற ஆங்கில வார்த்தைக்கு காட்டுத்துமட்டி என்று கொடுக்கப்பட்டுள்ளது. முலாம்பழம் என்பது Musk-melon என்று விக்சனரியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் cucumis trigonus என்ற வார்த்தைக்கு முலாம்பழம் என்று கூறமுடியாது. அதேபோல் கிர்ணிப்பழமும் [3] முலாம்பழமும் ஒன்று என்கிறது.--Muthuppandy pandian (பேச்சு) 07:04, 20 நவம்பர் 2015 (UTC)Reply


இங்கு ஆ.வி.யுடன் இணைக்கப்பட்ட கட்டுரை வெள்ளரிப் பேரினம் (Cucumis) பற்றியே குறிப்பிடுகிறது. காட்டுத்துமட்டி (cucumis trigonus) பற்றியல்ல. ஆனால், உருசிய விக்கியில் ஒரு கட்டுரை உள்ளது. பார்க்க: ru:Дикая дыня, @Kanags:.
காட்டுத்துமட்டிக்குரிய படம்
ஆகவே, கட்டுரைக்குரிய பிற மொழி விக்கியிணைப்பு நீக்கப்பட்டு உருசிய விக்கியுடன் இணைக்கப்பட வேண்டும். உள்ளேயும் திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, இதனை உண்ண முடியாது. sour, bitter, sweetish less ... என உருசிய விக்கி குறிப்பிடுகிறது. --AntanO 14:08, 11 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காட்டுத்துமட்டி&oldid=2008878" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காட்டுத்துமட்டி" page.