பேச்சு:காப்சா

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

ஆங்கிலப் பெயர்கள் தலைப்பாக இடுவதில்லை. காப்ட்சா எனப் பெயர் மாற்றம் செய்துள்ளேன். முதற் பந்தியில் மேலும் சில விளக்கம் தந்தால் நல்லது.--Kanags 21:30, 4 ஜூன் 2007 (UTC)

ஏதோ சேர்த்திருக்கிறேன் --மாஹிர் 21.35, 5 ஜூன் 2007

நல்ல கட்டுரை மாஹிர். இந்த நுட்பத்திற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை இந்தக் கட்டுரையைப் படித்தே அறிந்து கொண்டேன். --ரவி 19:47, 5 ஜூன் 2007 (UTC)

முக்கியமான நவீன தொழினுட்பக் கட்டுரை இது! படித்தறிந்தேன் நன்றி! எனினும், படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டுகிறேன். நீண்ட வரிகளைப் பிரித்து எழுதுமாறு வேண்டுகிறேன். - தமிழ்க்குரிசில்

பகர மெய்யை அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வராது என்பதனால் இதன் தலைப்பைக் காப்சா என மாற்றியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 16:19, 8 சனவரி 2013 (UTC)Reply

காப்ட்சா என்பதை விட காப்சா என்பதே ஒலிப்பு வழியிலும் நெருக்கமாகப் படுவதால் உங்கள் கருத்தை ஏற்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:38, 8 சனவரி 2013 (UTC)Reply
இப்போது இது Capsa என்று ஒலிக்கிறது:).--Kanags \உரையாடுக 20:12, 8 சனவரி 2013 (UTC)Reply
காப்ச்சா என்று வர வேண்டுமென்கிறீர்களா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 9 சனவரி 2013 (UTC)Reply

எப்படிப் பார்த்தாலும் பகர மெய்யை அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வருவதற்குத் தமிழில் இலக்கணமில்லை.--பாஹிம் (பேச்சு) 15:38, 9 சனவரி 2013 (UTC)Reply

வழுவமைதியாகத் திருத்தி எழுத இயலாதா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:55, 9 சனவரி 2013 (UTC)Reply
  • தமிழில் ஒரு வல்லின எழுத்து எப்பொழுது வல்லினமாக ஒலிக்கும் என்றால் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும்தான். (1) முதலெழுத்தாக வந்தால் (2) முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தால். என்னென்ன எழுத்துகள் அடுத்து வரலாம் என்பது பிறிதொரு விதி (அறிவின் அடிப்படையில் அமைந்த விதி, ஏதோ காரணம் இன்றி அமைத்த விதி அன்று). ஆனால் இந்த பிறிதொரு விதியைப் பின்பற்றாமல் எழுதினால் காப்சா என்பது kaapchaa என்றே ஒலிக்கும். ஒருபோதும் kaapsaa என ஒலிக்காது. kaapsaa என ஒலிக்க வேன்டும் எனில் காப்ஃசா என எழுதலாம். ஏனெனில் ஃச என்பது ஓரளவு காற்றொலி சகரமாகும். திருக்குறளில் வரும் கஃசு = (பொருள்) காற்பலம் (1/4 பலம்) (kahsu என்பது போல ஒலிக்கும்) என்பதை நோக்கலாம். காப்சா என்று பாகிம் பரிந்துரைத்தது சரியானது (இந்த இரண்டாம் விதிமீறல் தவிர). --செல்வா (பேச்சு) 16:37, 9 சனவரி 2013 (UTC)Reply
தமிழ் விதிமீறல் இல்லாமல் எழுதவேண்டும் எனில் காப்புச்சா என்று எழுதலாம். இதில் ஒரு நன்மை என்னவென்றால், ஏதோ காப்பு தருகின்றது என்னும் குறிப்பு இருக்க நேர்வது. காப்பிச்சா என்றால் காப்பு+இச்சா என்னும் பொருள் தரும். உண்மை ஆங்கில சொற்றொடரின் அஃகுப்பெயர் (சுருக்கப்பெயர்) என்றாலும், தமிழ்வழி இன்னொரு விதமாக தமிழில் பொருள் சுட்டுமாறு, நினைவு கொள்ள உதவியாக இருப்பது தவறென்று கூற இயலாது. உண்மைச் சொல்வரலாறு "Capcha = (தமிழில்) காப்புச்சா (அல்) காப்பிச்சா. ஒலிபெயர்ப்பதில் தமிழ்வழி எழுதப்பட்டுள்ளது" என்பதே. --செல்வா (பேச்சு) 16:49, 9 சனவரி 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காப்சா&oldid=1296442" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காப்சா" page.