பேச்சு:காளாஞ்சகப்படை

நீங்கள் தடிப்புத் தோல் அழற்சி என்ற பக்கத்தில் தடிப்புத் தோல் அழற்சி என்ற சொல்லிற்கு மாற்றாக காளாஞ்சகப் படை என்ற சொல்லைக் கொண்டு மாற்றியுள்ளீர்கள். இத்தகைய பெருமாற்றங்கள் உரையாடற் பகுதியில் விவாதிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும். நீங்கள் தொகுப்புச் சுருக்கத்தில் தடிப்பு, அழற்சி இரண்டுமே ஒரே ஆங்கிலச் சொல்லிற்கான தமிழாக்கம் என்றும் காளாஞ்சகப் படை தமிழ் சொல் என்றும் குறிப்பிட்டள்ளீர்கள். இதனை விவரமாக பேச்சுப் பக்கத்தில் பதிந்தால் மற்றவர்கள் கருத்துரையாட வசதியாக இருக்கும். உங்களது இந்தத் திருத்தம் பாராட்டப்படக் கூடியதாக இருப்பினும் விக்கி என்பது சமுதாய இணக்கம் பெற்று கூட்டாக ஆற்றும் முயற்சி. இங்கு உரையாடி மாற்றங்களை மேற்கொள்வோம். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை வழங்கி வாருங்கள் ! --மணியன் (பேச்சு) 14:48, 23 சூன் 2016 (UTC

நன்றி மணியன் அவர்களே எமக்காக தங்கள் நேரத்தை ஒத்துகியதற்கு. நான் ஒரு அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவன் மேலும் ஸ்காட்லாந்தில் Masters in Medical Science clinical pharmacology பயின்றேன். இப்போது சென்னையில் சித்த மருத்துவம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் உள்ளேன். நான் விக்கிக்கு புதியவன் சரிவர படிகாமல் பொதுவான பக்கத்தில் மாற்றம் செயத்தது தவறு தான் மன்னிக்கவும் மேலும் இதை எமக்கு எடுத்துறைத்தமைக்கு நன்றி. நான் சித்த மருத்துவத்தில் பயின்றவரை இதை காளாஞ்சகப்படை என்றே படித்துள்ளேன். மேலும் டிவிஎஸ் சாம்பசிவம் பிள்ளை தமிழ் மருத்துவ அகராதியில் இதை காளாஞ்சகப்படை என்றே குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே இந்த மாற்றத்தை செய்தேன் மேலும் தடிப்பு தோல் அழற்சி என்பதற்கு மேற்கோள் ஏதும் இல்லாததாலும் இம்மாற்றத்ததை செய்தேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திகாள்கிறேன் Dr.satiz (பேச்சு) 17:29, 27 சூன் 2016 (UTC)

Dr.satiz பேச்சுப் பக்க உரையாடல் இங்கு தெளிவிற்காக வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 17:34, 28 சூன் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காளாஞ்சகப்படை&oldid=2082140" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காளாஞ்சகப்படை" page.