வாருங்கள்!

வாருங்கள், Dr.satiz, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பவுல்-Paul (பேச்சு) 14:44, 22 சூன் 2016 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றிReply

வணக்கம், Dr.satiz!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மணியன் (பேச்சு) 14:48, 23 சூன் 2016 (UTC)Reply

பெயர் திருத்தம்

தொகு

நீங்கள் தடிப்புத் தோல் அழற்சி என்ற பக்கத்தில் தடிப்புத் தோல் அழற்சி என்ற சொல்லிற்கு மாற்றாக காளாஞ்சகப் படை என்ற சொல்லைக் கொண்டு மாற்றியுள்ளீர்கள். இத்தகைய பெருமாற்றங்கள் உரையாடற் பகுதியில் விவாதிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும். நீங்கள் தொகுப்புச் சுருக்கத்தில் தடிப்பு, அழற்சி இரண்டுமே ஒரே ஆங்கிலச் சொல்லிற்கான தமிழாக்கம் என்றும் காளாஞ்சகப் படை தமிழ் சொல் என்றும் குறிப்பிட்டள்ளீர்கள். இதனை விவரமாக பேச்சுப் பக்கத்தில் பதிந்தால் மற்றவர்கள் கருத்துரையாட வசதியாக இருக்கும். உங்களது இந்தத் திருத்தம் பாராட்டப்படக் கூடியதாக இருப்பினும் விக்கி என்பது சமுதாய இணக்கம் பெற்று கூட்டாக ஆற்றும் முயற்சி. இங்கு உரையாடி மாற்றங்களை மேற்கொள்வோம். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை வழங்கி வாருங்கள் ! --மணியன் (பேச்சு) 14:48, 23 சூன் 2016 (UTC

நன்றி மணியன் அவர்களே எமக்காக தங்கள் நேரத்தை ஒத்துகியதற்கு. நான் ஒரு அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவன் மேலும் ஸ்காட்லாந்தில் Masters in Medical Science clinical pharmacology பயின்றேன். இப்போது சென்னையில் சித்த மருத்துவம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் உள்ளேன். நான் விக்கிக்கு புதியவன் சரிவர படிகாமல் பொதுவான பக்கத்தில் மாற்றம் செயத்தது தவறு தான் மன்னிக்கவும் மேலும் இதை எமக்கு எடுத்துறைத்தமைக்கு நன்றி. நான் சித்த மருத்துவத்தில் பயின்றவரை இதை காளாஞ்சகப்படை என்றே படித்துள்ளேன். மேலும் டிவிஎஸ் சாம்பசிவம் பிள்ளை தமிழ் மருத்துவ அகராதியில் இதை காளாஞ்சகப்படை என்றே குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே இந்த மாற்றத்தை செய்தேன் மேலும் தடிப்பு தோல் அழற்சி என்பதற்கு மேற்கோள் ஏதும் இல்லாததாலும் இம்மாற்றத்ததை செய்தேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திகாள்கிறேன்Dr.satiz (பேச்சு) 17:29, 27 சூன் 2016 (UTC)Reply

நன்றி மருத்துவர் சதீசு ! இந்த மாற்றத்தில் தவறில்லை. பின்பற்றவேண்டிய முறையையே உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன். --மணியன் (பேச்சு) 17:38, 28 சூன் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dr.satiz&oldid=2082143" இலிருந்து மீள்விக்கப்பட்டது