பேச்சு:காவடியாட்டம்

காவடியாட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவடியாட்டம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழீழம்

தொகு
  1. தூக்குக் காவடியைத் தோளில் தூக்க முடியாது :-)
  2. தமிழீழம் என்பதைக் கட்டுரைகளில் தவிர்ப்பது நல்லது. கதிர்காமம் தமிழீழத்தில் இல்லை. காவடி முக்கியத்துவம் குறைந்து விடவில்லை. ஆகவே இலங்கை குறிப்பிடப்பட வேண்டும். இலங்கை குறிப்பிடப்படும்போது தமிழீழம் தனியாகக் குறிப்பிடப்பட வேண்டியதில்லை.

நன்றி. --கோபி 17:19, 9 நவம்பர் 2006 (UTC)Reply

உங்கள் கருத்துக்களிற்கு மதிப்பளிக்கின்றேன் அதே சமயம் தூக்குக்காவடி அதன் அதிகாரப்பூர்வப் பெயர் என்ன தெரியுமா.ஏனெனில் நான் செவிமடுத்த பெயர்களையே இங்கு வழங்கியுள்ளேன்.--சக்திவேல் நிரோஜன் 01:38, 10 நவம்பர் 2006 (UTC)Reply

மேலும் நீங்கள் கூறுகின்றீர்கள் கதிர்காமத்தில் காவடி எடுக்கப்படுவதென்று அதனால் இலங்கை முழுவதிலும் அதன் பங்குள்ளதென்று, எடுத்துக்காட்டாக பரத நாட்டியம் இன்று வெளிநாட்டவராலும் பயிலப்படுகின்றது அப்படியானால் அதனை உலகில் அனைத்திடங்களிலும் காணப்படுகின்றது என்று கூறலாமா இல்லை அதன் தோற்றப் பகுதிகளை மட்டும் எழுதினால் சரியா.எவ்வாறு விக்கியில் தெரிவிக்கலாம்.--சக்திவேல் நிரோஜன் 02:35, 10 நவம்பர் 2006 (UTC)Reply

நான் தமிழீழத்தினை வேண்டுமென்று திணிக்கவில்லை அப்பகுதிகளில் தோற்றம்பெற்றவை இலங்கையெங்கும் என்று குறிப்பிடுவதனால் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற ஜயப்பாடே அதன் காரணம்.--சக்திவேல் நிரோஜன் 02:48, 10 நவம்பர் 2006 (UTC)

நிரோ, தமிழீழம் என்ற அதிகாரப்பூர்வ அரசியல் அமைப்பு வரும்வரை நிலப்பகுதிகளை அதன் பேரில் குறிப்பதை விக்கிபீடியாவில் தவிர்க்கலாம். இலங்கை என்று பொதுவாக குறிப்பிடுவது உங்களுக்குத் துல்லியமாகத் தெரியாவிட்டால், தமிழ்ப்பகுதிகளை குறிப்பிட குறிப்பிட்ட மாகாணங்களின் பெயர்களை குறிப்பிடலாம். அல்லது பெரும்பான்மை தமிழர்கள் வாழும் ஊர்கள், நிலப்பகுதிகள் என்று குறிப்பிடலாம். விக்கிபீடியாவில், அரசியல் ரீதியில் துல்லியம் பேண வேண்டியது நம் கடமையல்லவா? --Ravidreams 07:24, 10 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காவடியாட்டம்&oldid=3783223" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காவடியாட்டம்" page.