பேச்சு:கா. ந. அண்ணாதுரை

கா. ந. அண்ணாதுரை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கா. ந. அண்ணாதுரை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்புப் பெயர் கா.ந.அண்ணாதுரை என்றிருக்க வேண்டாமா? --விஜயராகவன் 08:54, 13 டிசம்பர் 2006 (UTC)

'சமயம்` பகுதியில் பெரிய பெட்டியில் சில வார்த்தைகள் கொடுத்துள்ளது, அரசியல், கலாசார பிரசாரம் போலுள்ளது. மேலும் “தாரக மந்திரம். (கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்.) அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் தாரக மந்திரமும் அதுதான்” என்பவை அபிப்பிராயங்கள். அவற்றை புறவயமாக காட்டி (முடியுமானால்), சீர்படுத்தவும்--Ginger 22:53, 18 ஜூன் 2009 (UTC)

தாங்களும் சீர்படுத்தலாம், நீங்களும் மொழிபெயர்க்கலாம். இது அந்த நபரின் கட்டுரை அவர் கூறிய நல்லவைகளைக் கூறலாம் தவறில்லை. இது அவருடைய பிரச்சாரம் தான். ஏதாவது நடை மாற்றவேண்டுமென்றால் மாற்றலாம்.--செல்வம் தமிழ் 23:05, 18 ஜூன் 2009 (UTC)

அண்ணாவின் சமயம் எது?

தொகு

வலப்பக்கம் இருக்கும் பட்டையில் அண்ணாவின் சமயம் என்று போட்டு இந்து சமயம் என்றிருக்கு. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதுபோல இருக்கிறது. இதுபற்றிய உரையாடலும் திருத்தமும் தேவை. --மு.மயூரன் 19:47, 19 ஜூன் 2009 (UTC)

குறித்த தகவலுக்கு மேற்கோள் கோரியுள்ளேன் --மு.மயூரன் 20:42, 19 ஜூன் 2009 (UTC)

அது மாற்று வழி செய்யப்படவில்லை. வேண்டுமென்றே செய்யப்படவில்லை. வழக்காமாக அதற்கு மாற்றிணைப்பு கொடுப்பேன். அதை மறந்து விட்டேன். தாங்கள் கூட கொடுத்திருக்கலாம்.--செல்வம் தமிழ் 19:59, 19 ஜூன் 2009 (UTC)

//அண்ணாதுரை பிறப்பினால் சார்ந்த சமயம் இந்து சமயமாகும். // என்ற வசனத்தை , அண்ணாத்துரை இந்துக்குடும்பம் ஒன்றில் பிறந்தார் என்றவாறாக மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இவ்வாசகம் அண்ணாத்துரைக்கு இந்துசமய அடையாளத்தைக் கொடுத்துவிடுகிறது. ஒருவர் எந்தச் சமயத்தைப்பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தார் என்பது அவர் அச்சமயத்தைப் பிறப்பினால் சார்ந்திருக்கிறார் என்ற அர்த்தத்தைத் தராது. அவர் அதனைப் பின்பற்றுவதைப் பொறுத்தே அது அமையும். --மு.மயூரன் 20:26, 19 ஜூன் 2009 (UTC

மாற்றிவிட்டேன். ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லையே. இப்பொழுதும் சமயத்தைதான் குறிக்கின்றது. ஆங்கில கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்துதான். இதற்கு அவர் சமயம் குறிப்பிடாமல் இருக்கலாமே.--செல்வம் தமிழ் 20:45, 19 ஜூன் 2009 (UTC)

சமயம் குறிப்பிடாமல் விட்டால் மிகவும் நல்லது. நான் எடுத்தவுடன் ஒன்றை அழிக்கும்படி வேண்ட வேண்டாமே என்றுதான் திருத்தம் பரிந்துரைத்தேன். அவ்வார்த்தையை எடுத்துவிடுவது சிறப்பு. இந்துசமயம் மீதான காட்டமான விமர்சனங்கள் அண்ணாவால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை இந்து சமயத்தோடு தொடர்புபடுத்துவது அவ்வளவு அழகாயில்லை. --மு.மயூரன் 20:49, 19 ஜூன் 2009 (UTC)

நான் தான் குறிப்பிட்டுவிட்டேனே ஆங்கில கட்டுரை மொழியாக்கம் என்று. என்க்கு அண்ணா சமயம் குறிப்பிட வேண்டுமென்று அவசியமில்லை. நீக்கலாம். அண்ணா பேரவை உறுப்பினர் விக்கியில் சிலவற்றை எதிர்பார்ப்பீர்கள் என்று குறிப்பிட்டேன். வேண்டாம என்று சொன்னாலே போதுமானது. அண்ணா தான் முக்கியம் சமயமல்ல.--செல்வம் தமிழ் 21:02, 19 ஜூன் 2009 (UTC)

நீங்கள் வெகுநாள் விக்கியில் இருத்தீர்கள் என்று சொன்னார்கள்.--செல்வம் தமிழ் 21:09, 19 ஜூன் 2009 (UTC)

நீக்கியாகி விட்டது மேற்கோளும் இருக்கின்றது. என்க்குத் தேவையில்லை.--செல்வம் தமிழ் 21:23, 19 ஜூன் 2009 (UTC)

நீங்கள் கொடுத்த பகுதி தலைப்பை துணைப்பகுதி தலைப்பாக மாற்றுகின்றேன். அவை யனைத்தும் முன்னுரைதான். கீழேயும் அதே செய்தி வருகின்றது.--செல்வம் தமிழ் 21:40, 19 ஜூன் 2009 (UTC)

பாராட்டுக்கள்.

தொகு

பயனுள்ள உழைப்பினை செலுத்தியிருக்கிறீர்கள் செல்வம் தமிழ். பாராட்டுக்கள். --Sathiyan 17:57, 20 ஜூன் 2009 (UTC)

பாராட்டுக்கு நன்றி சத்யன். அண்ணாவின் இலக்கியம் அல்லது நகைச்சுவை, சிலேடை மேடைபேச்சுக்களின் ஒலிக்கோப்புக்கள் இருந்தால் உள்ளிட்டு உதவ முடியுமா?. அண்ணாவை பற்றி எழுதியவை ஒரு சதவீதம் மட்டுமே நீங்களும் பல நிகழ்வுகளை புத்தங்களிலிருந்து எடுத்து உதவினாலும் நன்மையாக இருக்கும்.--செல்வம் தமிழ் 04:43, 22 ஜூன் 2009 (UTC)

கம்ப ரசம்

தொகு

அண்ணா கம்பரசம் என்று கம்பனின் இராமயனத்தை காமத்தி்ன் வாயிலாக பல மேற்கோள்களுடன் எழுதினார். பிறகு அதற்காக வருத்தம் கொண்டார் எனவும் சொல்லக்கேட்டிருக்கிறேன். பெரியார் எல்லா புத்தகங்களையும் எதிர்த்த போது,.. மணிமேகலை,சிலப்பதிகாரம் என சில புத்தகங்களின் மீது விமர்சனம் வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே இன்று கண்ணகி பெரும் தெய்வமாக சென்னையில் இருக்கிறாள்.

மெரினாவில் இருக்கும் அண்ணாவின் நினைவிட புகைப்படத்தையும் வழங்கலாம். மிகவும் அதிக மக்கள் வந்துபோகும் இடம்...

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்குமான நட்பு பற்றி குறிப்பிடலாம். அது மேலும் கட்டுரையை பலப்படுத்தும்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:20, 3 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கா._ந._அண்ணாதுரை&oldid=4061161" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கா. ந. அண்ணாதுரை" page.