பேச்சு:கிப்சின் ஆற்றல்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

entropy குறிக்க சிதறம் சரியான வார்த்தையாக எனக்கு தோன்றவில்லை. குலையளவு என்பதை பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம் --Siva.wiki (பேச்சு) 06:04, 4 ஆகத்து 2013 (UTC)Reply

exergone, endergone reactions - தமிழ்ச் சொல் என்ன ? மாற்றப்பட வேண்டும்--Siva.wiki (பேச்சு) 06:15, 4 ஆகத்து 2013 (UTC)Reply

எக்ஃசோ (exo) என்றால் வெளியே, வெளிநோக்கி (∆G < 0) என்றும் எண்டோ (endo) என்றால் உள், உள்நோக்கிய, உள்வாங்கு ( ∆G > 0) என்றும் ஆற்றல்பாய்வைக் குறிக்க இங்கே வழங்கப்படுகின்றன. எனவே ஆற்றல் வெளிப்பாய்வு வினை, ஆற்றல் உள்வாங்கு வினை என்று குறிக்கலாம். சுருக்கம் வேண்டின் புறசு, அகசு எனலாம். அறிவியலில் வரையறை தந்தே ஒரு சொல்லை ஆளுகின்றோம். ஆகவே பறசு என்பது ஆற்றல் புறத்தே பாய்வதையும், அகசு என்பது ஆற்றல் உள்ளே பாய்வதையும் குறிக்கும் என விளக்கலாம். ஒருங்கியம் (system), சூழகம்(ambient, surroundings) என்பதன் பொருளும் புரிந்திருந்தால் இன்னும் துல்லியமாக விளக்கலாம். exergone, endergone என்பதில் ergon என்பது வேலை (work), பணி, செயற்பாடு என்பது பொருள்.--செல்வா (பேச்சு) 19:14, 4 ஆகத்து 2013 (UTC) புறசு-அகசு போலவே புறனை-அகனை என்றோ பிற பின்னொட்டுகள் கொண்டோ குறிக்கலாம்.--செல்வா (பேச்சு) 19:22, 4 ஆகத்து 2013 (UTC)Reply
பேச்சு:சிதறம் என்னும் பக்கத்தில் சிதறம் என்பது பற்றியும் குறித்துள்ளேன். நன்றி |சிவக்குமார்!--செல்வா (பேச்சு) 19:17, 4 ஆகத்து 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிப்சின்_ஆற்றல்&oldid=1473987" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிப்சின் ஆற்றல்" page.