பேச்சு:குடம்பி
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by PARITHIMATHI in topic தோற்றுவளரி
குடம்பி என்பது இலங்கைத் தமிழரிடையே வழக்கில் உள்ள சொல்லா? தமிழ்நாட்டில் நான் கேள்விப்பட்டதில்லை.--சிவக்குமார் \பேச்சு 09:22, 15 சூன் 2012 (UTC)
ஆம். இலங்கைப் பாடநூல்களில் இவ்வாறே உள்ளது. Larva விற்கு தமிழ்நாட்டில் என்ன சொல் பயன்படுத்தப்படுகின்றது?--கலை (பேச்சு) 09:48, 15 சூன் 2012 (UTC)
- கூட்டுப் புழு என்று படித்ததாக நினைவு. சரியாகத் தெரியவில்லை. விக்சனரியில் புழு என்றே குறிப்பிடப்பட்டள்ளது.--சிவக்குமார் \பேச்சு 11:23, 15 சூன் 2012 (UTC)
- கூட்டுப்புழு என்பது Pupa. புழுவானது கூட்டினுள்ளே இருப்பது. புழு என்பது ஒரு பொதுவான பெயர். பல்வேறு வகையான புழுக்களை உள்ளடக்கி இருக்கும். எனவே அது பொருத்தமற்றது. தமிழ்நாட்டில் குடம்பிக்கு வேறு ஏதாவது சொற்கள் பயன்படுத்தக்கூடும். அறிந்து சொன்னீர்கள் என்றால், அந்தப் பெயரையும் கொடுக்கலாம். --கலை (பேச்சு) 13:23, 15 சூன் 2012 (UTC)
- கலை அவர்களே, விளக்கத்திற்கு நன்றி. தமிழ்நாடு அரசின் ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் (சமச்சீர் கல்வித்திட்டம், முதற்பதிப்பு 2011) லார்வா என்பதற்கு இளம் உயிரி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுரையில் உரிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன். --சிவக்குமார் \பேச்சு 06:35, 17 சூன் 2012 (UTC)
- கூட்டுப்புழு என்பது Pupa. புழுவானது கூட்டினுள்ளே இருப்பது. புழு என்பது ஒரு பொதுவான பெயர். பல்வேறு வகையான புழுக்களை உள்ளடக்கி இருக்கும். எனவே அது பொருத்தமற்றது. தமிழ்நாட்டில் குடம்பிக்கு வேறு ஏதாவது சொற்கள் பயன்படுத்தக்கூடும். அறிந்து சொன்னீர்கள் என்றால், அந்தப் பெயரையும் கொடுக்கலாம். --கலை (பேச்சு) 13:23, 15 சூன் 2012 (UTC)
தோற்றுவளரி
தொகுதமிழ்நாட்டில் லார்வாவிற்கு (larva) தோற்றுவளரி எனும் பதம் உள்ளது. இது பல வெகுசன பத்திரிக்கைகளிலும், இயற்கை சார்ந்த நூல்கள், கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது[1][2]. [3][4]ஆகவே, இந்தப் பதத்தையும் இங்கே சேர்க்கவும்.இந்தப் பதம் வயல் தாவி விக்கிபீடியா பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. PJeganathan (பேச்சு) 08:37, 12 சூலை 2021 (UTC)
- larva என்ற சொல்லிற்கு குடம்பி என்ற கலைச்சொல் இங்கு[5] கொடுக்கப்பட்டுள்ளது; தோற்றுவளரி என்ற பதமும் இயற்கை சார்ந்த எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன்மையாக குடம்பி என்றும் தோற்றுவளரி என்ற சொல்லிற்கு இக்கட்டுரைக்கான வழிமாற்றும் இடலாமா? --PARITHIMATHI (பேச்சு) 15:08, 14 சூலை 2021 (UTC)
- ↑ "பார்வையால் பிடித்து மகிழ்வோம் தட்டான்களை!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
- ↑ "வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா?". கருத்துக்களம். பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
- ↑ "கான்கிரீட் காட்டில் 23: பூச்சிக்கும் உண்டா கொம்பு?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
- ↑ "பச்சை நிறமே, மரகதப் பச்சை நிறமே!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
- ↑ அருளி. ப. (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. பக். 532. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்