பேச்சு:குறியாக்கவியல்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 23:35, 27 ஜூன் 2009 (UTC)

இது என் பாடத்திட்டத்தில் உள்ளது. எனவே, இது குறித்து நிறைய எழுதவுள்ளேன். தயை கூர்ந்து எளிய சொற்களைக் கையாளுமாறு வேண்டுகிறேன். மறையீட்டியல் என்பதைக் கண்டவுடன் கிறித்தவம் தொடர்பானதோ என எண்ணத் தோன்றிற்று. கிரிப்டோகிராப்பிக்கு இணையான எளிய சொல்லைத் தருக. :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:53, 7 ஆகத்து 2013 (UTC)Reply

வார்ப்புரு:மறையீட்டியியல் என்ற கலைச்சொல் பிழையோ--kaNiJan2 23:26, 9 ஆகத்து 2013 (IST)

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் அகராதித் தொகுப்பில் தேடினேன். (http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm)
மூன்று அகராதிகள் cryptographyக்கு மூன்று வெவ்வேறு சொற்களைத் தருகின்றன.

Volume - 13 Banking மறை தகவலியல் Volume - 3 Engineering and Technology மறைகுறியீட்டியல் Volume - 6 Information Technology மறையீட்டியல்

நான் இந்தத் துறையில் தொழில் செய்வதால் இந்த மூன்றுமே பிழையாகத் தோன்றுகிறது.

மூலச்சொல்:

cryptography 1650s, from Mod.L. cryptographia, from Gk. kryptos "hidden" + graphia "writing."

மறைத்து எழுதுவதைத்தான் கிரிப்டாகிரஃபி என்கிறார்கள்.

சைஃபர் (cypher) அல்லது கோடு (code) என்பவற்றைக் குறியீடுகள் எனலாம். தாழ்வில்லை. ஆனால், கிரிப்டாகிரஃபியை மறையீட்டியல், மறை தகவலியல் என்பது இடறுகிறது. மறைகுறியீட்டியல் என்பது நுட்பத்தைக் குறிக்கிறதே ஒழிய பொருத்தமான சொல் அல்ல. ஒரு செய்தியை நம்மால் படங்களுக்குள்ளோ, பாடல்களுக்குள்ளோ ஒளித்து அல்லது மறைத்து வைக்க முடியும். அல்லது ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனிப்பட்ட பொருளை இட்டுக்கட்டி ஒளித்து எழுத முடியும். அவற்றைக் குறியீடுகள் என்று சொல்லலாமா? தெரியவில்லை.

மறைத்தெழுதுதல் அல்லது ஒளித்தெழுதுதல் பொருந்துகிறது எனக் கருதுகிறேன். வேண்டுமென்றால் -இயல் என்ற பின்னொட்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறியாக்கவியல்&oldid=2194765" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குறியாக்கவியல்" page.