பேச்சு:குழிக்கரை காளிதாஸ் பிள்ளை

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சா அருணாசலம்

இவரது ஊரின் பெயர் குளிக்கரை என வர வேண்டும் என நினைக்கிறேன். குழிக்கரை அல்ல. @Selvasivagurunathan m and Uksharma3:.--Kanags \உரையாடுக 10:41, 18 சனவரி 2022 (UTC)Reply

திரு பி. எம். சுந்தரம் அவர்கள் எழுதிய "மங்கல இசை மன்னர்கள்" என்ற நூலில் இந்த நாதஸ்வர வித்துவானைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. அந்தக் கட்டுரையிலும், 'குழிக்கரை பிச்சையப்பா' பற்றிய கட்டுரையிலும் ஊரின் பெயர் "குழிக்கரை" என்றே எழுதப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு கல்கி அவர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மாநாடு பற்றி எழுதிய "தெய்வ தரிசனம்" என்ற கட்டுரையில், யாழ்ப்பாணத் தமிழர்கள் "குளிக்கரை பிச்சையப்பா வந்து விட்டாரா?" என்று கவலைப்பட்டதாக எழுதிவிட்டு, பின்னர் "இம்மாதிரி பொதுப் பணிகளில் ஆர்வத்துடன் முன் வந்து கலந்து கொள்ளும் இயல்பு படைத்த பாக்கியவான் குழிக்கரை பிச்சையப்பா அவர்கள்" என எழுதியிருக்கிறார். (யாழ்ப்பாணத்தில் குளிக்கரை என்று சொன்னதை அப்படியே எழுதிவிட்டுப் பின் சரியாக ஊர்ப்பெயரை எழுதியிருக்கிறார்).
ஆகவே குழிக்கரை என்பதே சரி என்றே நான் நினைக்கிறேன். UKSharma3 உரையாடல் 14:26, 21 சனவரி 2022 (UTC)Reply
தமிழகத்திலே பல ஊர்ப் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் ஊர்ப்பெயரை சரியாகத் தெரியாதவர்களால் தமிழில் தவறாக எழுதப்படுகிறது. முசிரி என இருந்த ஊர் இப்போது முசிறி என எழுதப்படுகிறது. குமரமங்கலம் என்ற ஊர் குமாரமங்கலம் என எழுதப்படுகிறது. இப்படி இன்னும் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அந்த வகையில் இந்தப் பெயரும் குளிக்கரை என மாறியிருக்கலாம். UKSharma3 உரையாடல் 14:31, 21 சனவரி 2022 (UTC)Reply
@Uksharma3: கல்கியே சொல்லி விட்ட பிறகு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. மிக்க நன்றி தெளிவுபடுத்தியமைக்கு. வானொலி இதழில் குளிக்கரை பிச்சையப்பா என்றிருந்தது. முடிந்தால் பிச்சையப்பா பிள்ளை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 22:25, 21 சனவரி 2022 (UTC)Reply
பி. எம். சுந்தரம் அவர்களின் நூலும் ஒரு முக்கியமான ஆதாரம். அவரே ஒரு தவில் / நாதஸ்வர வித்துவான். பழைய நாதஸ்வர, தவில் கலைஞர்கள் பற்றி மிகுந்த ஆராய்ச்சி செய்து அந்த நூலை எழுதியிருக்கிறார். சுமார் 150 கலைஞர்கள் பற்றிய அந்த ஆவண நூலில் ஏறக்குறைய எல்லாக் கலைஞர்களின் பிறந்த. இறந்த திகதிகள் உட்பட பல வாழ்க்கைக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். சில கலைஞர்களின் துர்ப்பழக்கங்கள் பற்றிக்கூட நாகரிகமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது ஒரு சிறந்த ஆவண நூலாகும்.
எனக்கு இப்போது உடல் நலம் நன்றாக இல்லை. என்னை ஒரு பொருட்டாக எண்ணி கட்டுரை எழுதுமாறு கேட்டதற்கு நன்றி. இறைவன் அருள் இருந்தால் பார்க்கலாம். UKSharma3 உரையாடல் 04:58, 22 சனவரி 2022 (UTC)Reply
நம்பிக்கையோடு இருங்கள் இறைவன் அருளால் உடல் நலம் பெறுவீர்கள் சா அருணாசலம் (பேச்சு) 10:03, 22 சனவரி 2022 (UTC)Reply
@Uksharma3: விரைந்து உடல் நலம் தேறி வர இறைவனை இறைஞ்சுகிறேன். நன்றாக ஓய்வெடுங்கள்.--Kanags \உரையாடுக 07:26, 22 சனவரி 2022 (UTC)Reply
Return to "குழிக்கரை காளிதாஸ் பிள்ளை" page.