பேச்சு:குவாண்டம் இயங்கியல்

இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் சரியானதாக்த் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக,

"உதாரணமாக, ஒளி அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் காலமும் கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும்."

எங்கிருந்து இக்கருத்து பெறப்பட்டது (காலமும் இடமும் கூட)? இதன் பொருள் என்ன? --C.R.Selvakumar 03:12, 29 ஜூலை 2006 (UTC)செல்வா

Quantum comes from Latin word quantumus which is the neuter gender form Cf. [L., neut. of quantus how much, how great.] But does it mean thaty it is a question?? I thought it meant the amount (how much), but not as a question 'how much?' May be I'm mistaken. . Does anybody know whether quantuamus is a interogative pronoun? (I don't think so, but I don't know for sure0.) --C.R.Selvakumar 17:37, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

From Oxford Latin-English dictionary:

Search Results Displaying 1 of 1 result Search level: All search terms in entry headings [info] Books searched: The Pocket Oxford Latin Dictionary (Latin-English)

1. quantus adj how great , as great as (From The Pocket Oxford Latin Dictionary (Latin-English) in Classics) இது ஒரு உரிச்சொல்லாகத்தான் காட்டபடுகின்றது

Interrogative pronoun என்றால் கீழ்க்காணுமாறு குறிக்கப்படுகின்றது (pn stands for pronoun) :

Search Results Displaying 2 of 2 results Search level: All search terms in entry headings [info] Books searched: The Pocket Oxford Latin Dictionary (Latin-English)

1. quis pn who? which? what? anyone ; anything ; someone ; something (From The Pocket Oxford Latin Dictionary (Latin-English) in Classics)

2. squis pn if any one , if any person (From The Pocket Oxford Latin Dictionary (Latin-English) in Classics) --C.R.Selvakumar 17:56, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

காலமும் இடமும் ஒரு அளவுக்கு மேல் பகுக்கப் பட முடியாது எனும் கருத்தை 'கலைக்கதிர்' எனும் இதழில் படித்ததாக நினைவு. அதற்கு சான்றாக Planck Time கட்டுரையின் பின்வரும் பகுதி இருக்கிறது என்று எண்ணுகிறேன்:

general relativity and the Heisenberg uncertainty principle of quantum mechanics [...] imply that it is impossible to measure position to a precision greater than the Planck length, or duration to a precision greater than the time a photon moving at c would take to travel a Planck length.

இந்த பிளாங்கின் இடத்தையும் காலத்தையுமே அக்கட்டுரை குறிப்பிட்டு, இந்த அளவுகளுக்குக் கீழ் காலமும் இடமும் பிரிக்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. இக்கருத்தை நுட்பமான இயற்பியல் அறிவு கொண்டோர் மேலும் ஐயமற தொகுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் (please express it unambiguously).

குவாண்டம் எனும் சொல் கேள்விச் சொல் இல்லை என்றே நானும் தற்போது நினைக்கிறேன். ஆயினும் 'how much' என்பதை எப்படி தமிழ்ப் படுத்துவது என்று தெரியவில்லை. Sundaryourfriend 11:04, 12 மே 2007 (UTC)Reply

நான் உங்கள் கருத்துக்களை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். இடத்தையும் காலத்தையும் ஓரளவிற்கு மேல் பகுக்க இயலாது என்பது சரியான கருத்தாகத் தெரியவில்லை. வெற்றிடத்தில் ஒளியின் விரைவு ஓர் உயர் எல்லை என்பதாக இப்பொழுதுள்ள நிலை. எனவே இடத்தின் நிலையை அளக்கவும், காலத்தின் நுட்பத்தை அளக்கவும், ஒளியைப் பயன்படுத்தினால், அளப்பதில் சில எல்லைகள் எழலாம். எதை (இப்பொழுதிருக்கும் அறிவுப்படி) அளக்க முடியாதோ, அது உண்மையிலேயே இல்லை, இருப்பதாகக் கொள்வது தவறு என்று ஒரு வாதம் உண்டு, ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்வதன்று. இதில் கருத்தளவில் பல இடைஞ்சல்கள் உள்ளன. என்னால் இங்கு விரித்தெழுத இயலாது (போதிய உள் அறிவும் இல்லை). அடுத்ததாக, இன்று பயனர்:203.199.213.66 என்பவர் இக்கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளார். அவையும் திருத்தப்பட வேண்டும். நீல்ஸ் போர் - ஐன்ஸ்ட்டைன் கருத்துக்கள் இன்று மறுபார்வைக்குள்ளாகியுள்ளது. ஐன்ஸ்ட்டைன் - ரோசன் - போடலோஸ்க்கி (EPR) ஆகியோர் 1935ல் முன் வைத்த கருத்துக்கள் பெரும்பாலும் உதறித் தள்ளப்பட்டன, ஆனால் அவற்றுள் உண்மை இருப்பதாக இன்று பலர் கருதுகிறார்கள் (ஷுரோடிங்கர், 'பெல்(Bell), 'டேவி'ட் 'பாம், ஆகியோரும் இந்த EPR கொள்கைகளை வளர்த்தெடுத்துள்ளார்கள்). இது பற்றி எழுத வேண்டும்!! எப்பொழுதோ அறியேன்!!--செல்வா 16:57, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

தலைப்பு

தொகு

இக் கட்டுரையின் தலைப்பில் உள்ள பொறிமுறை என்பது பொருத்தம் இல்லாமல் இருக்கின்றது. குவாண்ட்டம் விசையியல் அல்லது குவாண்ட்டம் இயங்கியல் என்பது சரியானதாக இருக்கும். பயனர்கள் கருத்து தெர்ரிவிக்க வேண்டுகிறேன்.--செல்வா 00:59, 13 மார்ச் 2009 (UTC)
+1 மாற்றியாயிற்று. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:32, 21 ஆகத்து 2011 (UTC)Reply

குவாண்டம் விசையியல் என்பது சற்று முரணானது எனத் தோன்றுகிறது, இயங்கியல் சரியாக அமையும். குவாண்டவியலில் விசையென்பது ஹெல்மென் - பெயின்மேன் தேற்றம் போன்ற சில விசயங்களாலேயேப் பேசப்படுவது, மேலும் இவை, (மின்னூட்ட) அடர்வு சார்பின் பண்பு சார்பு (Density functional theory)க் கொள்கைகளிலும் காணப்படுவது, இவை குவாண்டவியலுக்கும் மரபுசார்ந்த இயற்பியலுக்கும் இடைப்பட்ட வெளியிலும் உள்ளும் அமையும் சிறு பகுதியாகும். குவாண்டம் டைனமிக்ஸ் எனப்படும் குவாண்ட இயங்கியலில் கூட விசைகள் பார்க்கப்படுவதில்லை, ஆற்றலிலும், சுற்றியுள்ள மற்ற குவாண்டப் பொருட்களின் ஆற்றலின் தூண்டுதலினாலும் அமைவதே ஆகும். ஆகையால், அதில் குழப்பங்கள் நேரலாம், என்பது என் கருத்து.

tunneling என்பதற்கு துளைத்தல் என்பதைவிட ஊடுருவுதல் என்பது சரியாக இருக்கலாம். பெரும்பாலும் ஊடுருவல் ஊடுபரவலில் ஊடகம் பாதிப்பதில்லை என்பதினாலும் இவ்வாறுக் கருதுகிறேன்.--ஈஸ்வர்(பேச்சு)

வணக்கம் ஈசுவர், குவாண்டம் இயங்கியல் என்றே தலைப்பை மாற்றலாம். கட்டுரையில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். மேற்கோள்கள் கொடுத்தால் நல்லது. இயற்பியலில் அதிக கட்டுரைகள் இல்லை. இருக்கும் கட்டுரைகளும் சிறிய குறுங்கட்டுரைகளே. அவற்றையும் முடிந்தால் மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 21:14, 1 மார்ச் 2016 (UTC)
வணக்கம் ஐயா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம் என நினைத்திருக்கிறேன், அவ்வாறே செய்கிறேன்! --Eswar (பேச்சு) 12:15, 2 மார்ச் 2016 (UTC)
Return to "குவாண்டம் இயங்கியல்" page.