பேச்சு:கூம்பு வெட்டு

இங்கே கூம்பு வெட்டு என்பதே பொருந்தும் என நினைக்கிறேன். கூம்பு வெட்டுக்கோடு என்பது பொருந்தாது எனத் தோன்றுகிறது. கூம்பு வெட்டுத் தளம் என வேண்டுமானால் குறிக்கலாம். --செல்வா 15:04, 10 பெப்ரவரி 2007 (UTC)

கூம்பு வெட்டில் இருந்து பெறப்படும் வளை கோட்டைக் குறிக்க வேண்டும் எனில், விளக்கம் அது குறித்துத் தெளிவாக இருத்தல் வேண்டும் (வெட்டு வடிவத்தின் எல்லைக் கோடு முதலிய வகையில் குறித்தல் பொருந்தும்).--செல்வா 15:12, 10 பெப்ரவரி 2007 (UTC)

ஆம், கூம்பு வெட்டு பொருத்தமான பெயராக இருக்கும். நல்ல தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதித் தருகிறீர்கள், மயூரனாதன். நன்றி--Ravidreams 15:37, 10 பெப்ரவரி 2007 (UTC)

செல்வாவின் ஆலோசனைப்படி தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. Mayooranathan 16:37, 10 பெப்ரவரி 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:17, 14 மே 2007 (UTC)Reply

சூத்திரங்கள்

தொகு

கூம்பு வெட்டுடன் தொடர்புடைய சூத்திரங்களை இணைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.--ஏர்னஸ்டோ பாலாஜி 14:10, 14 திசம்பர் 2011 (UTC)Reply

பெயர் சிக்கல்கள்

தொகு

தமிழ்நாட்டுப் பாடநூல்களின் தரவுகளின் படி, பாரபோலா மற்றும் ஹைபர்போலா என்ற ஆங்கிலப் பதங்களுக்கு பரவளையம் மற்றும் அதிபரவளையம் என்ற பதங்களே பொருத்தமாக இருக்கும். "வளைவு" என்பது சிறிது பொருந்தாததாக உள்ளது.

--ஏர்னஸ்டோ பாலாஜி 14:13, 14 திசம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூம்பு_வெட்டு&oldid=952239" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கூம்பு வெட்டு" page.