பேச்சு:கொடுந்தமிழ் நாடு

அன்புள்ள சூரிய,
கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு பண்டைய இலக்கண நூல்களில் இல்லை.
கொடுந்தமிழ் என்னும் குறியீடு 'வேண்டும்' என்பதை 'வேணும்' என வழங்குவது போன்ற வினைச்சொல் வளைவு
திசைச்சொல் கட்டுரையைப் பாருங்கள்.
தெரிந்ததை எழுதுங்கள்.
தெளிவு பெறுவோம்.
பாராட்டுகள்.
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:54, 14 மார்ச் 2013 (UTC)

கொடுந்தமிழ் என்பது நன்னூல் உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ள குறியீடு.
எனவே கொடுந்தமிழ் நாடு என்னும் குறியீட்டையும் தவிர்க்கலாம்
தவிர்கவேண்டியதற்கான விளக்கம் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
தலைப்பு செந்தமிழ் சேர் பன்னிரு நிலம் எனப் பழம்பாடல் தொடரின் வழி அமைவது பொருத்தமானது
இந்தத் தலைப்பு இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்படவேண்டிய கட்டுரைக்குத் தரப்பட்டுள்ளது
இத் தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ள கட்டுரை பிந்தியது.
கொடுந்தமிழ் நாடு என்னும் இக் கட்டுரை முந்தியது.
எனவே இக் கட்டுரையின் தலைப்பினைச் செந்தமிழ் சேர் நிலம் என மாற்றிவிட்டு அக் கட்டுரையை இத்துடன் இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 22:35, 18 சனவரி 2014 (UTC)Reply

ஆம். செந்தமிழ் நிலங்கள், திசைச்சொல் வழங்கும் செந்தமிழ் சேர் நிலங்கள், திரிசொல் நிலங்கள் இம்மூன்றும் வேறு வேறானவை.

பயனர்:Sengai Podhuvan கட்டுரையில் ஒரு பாடலே இரண்டுமுறை எழுதப்பட்டுள்ளது. அதில் ஒளிநாடு, பொங்கா நாடு போன்றவை பாடலில் இல்லை. பாடல் மாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:37, 27 சூலை 2014 (UTC)Reply

  • கட்டுரை சூரியபிரகாஷ் தொடங்கியது. திருத்தங்கள் சில என்னால் தரப்பட்டுள்ளன. திரும்பவும் வரும் பகுதிகள் நீக்கப்படவேண்டும். நடு மேற்கோள் முறைமை மிகப் பழமையானது. புதுமைக்கு மாறவேண்டும். நிர்வாகிகள் இதனைச் செய்வது மேல். --Sengai Podhuvan (பேச்சு) 06:52, 30 சூலை 2014 (UTC)Reply

மேற்கோள் வேண்டும்

தொகு

//நன்னூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் திசைச்சொல்லைக் 'கொடுந்தமிழ்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றனர்.//

மேலுள்ள தொடருக்கு மேற்கோள் வேண்டும். திசைச் சொல்லை கொடுந்தமிழ் எனச் சொன்னதற்கு மேற்கோள் உண்டா? ஒருவேளை இல்லை எனில் செந்தமிழ் சேர் நிலங்கள் என்பதற்கு தனிக்கட்டுரை தொடங்கி அவற்றில் இவற்றைச் சேர்ப்பதே சரியாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:12, 30 சூலை 2014 (UTC)Reply


மேற்கோள் அவசியம்

தொகு

பயனர்:Sengai Podhuvan கீழுள்ளவற்றில் விக்கி இணைப்புகளில் கூறப்பட்டிருப்பதுபோல கற்கா நாடு என்பது கோவை சார்ந்த மலைப்பகுதிகள் என்பதற்கும், சீத நாடு என்பது நீலகிரி பகுதி என்பதற்கும் மூல ஆதாரங்கள் என்ன உண்டு???

http://www.tamilvu.org/courses/degree/d041/d0414/html/d0414662.htm

http://ta.wikipedia.org/s/bja

http://ta.wikipedia.org/s/az8 --Jaivanth (பேச்சு) 08:01, 2 அக்டோபர் 2014 (UTC)Reply

சீதம் என்பது குளிரச்சியைக் குறிக்கும். குளிர்நாடு நீலகிரி. --Sengai Podhuvan (பேச்சு) 18:34, 6 அக்டோபர் 2014 (UTC)Reply

திருத்தம் தேவை

தொகு

பயனர்:Sengai Podhuvan கட்டுரை மிக்க பயனுள்ளதாய் இருந்தது. ஆனால் பன்றிமலை என்று 2 ஊர்கள் பழனியை விட்டு வெகுதொலைவில் உள்ளது.

  • கொடைக்கானலின் கிழக்கில் ஒன்று

http://wikimapia.org/26859121/Pandrimalai-Village-Dindigul-district

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488418&Print=1

திண்டுக்கல், சிறுமலை, நத்தம், பொன்னமராவதி, தாடிக்கொம்பு, போன்ற ஊர்களே உள்ளன.

  • அதனை விடவும் கிழக்கில் நத்தத்தில் பன்னிமலை என்றே ஒரு ஊர் உள்ளது

http://villagemap.in/tamil-nadu/dindigul/natham/848700.html

http://vlist.in/village/635310.html

அகராதி தவறாக காட்டினாலும், இதனை பார்த்து தெளியுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கொங்குநாட்டின் கிழக்கில் திண்டுக்கல் அருகே சிறு பகுதிகள் இதனுள் வரும். மற்றபடி பழனி இதில் வராது. மேலும் இன்றைய ஹரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வட்டங்களும் ஏன் செந்தமிழ் சேர் 12 கணக்கிலேயே வரவில்லை??? அதைவிட திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், சேலம் பகுதிகள்??? நாமக்கல், சேலம் பகுதிகள் பெரும்பாலானவை சங்ககாலத்தில் காடுகளாக இருந்திருக்கலாம், ஆனால் இளம்பூரணர் காலத்தில் அப்படி இல்லையே. காவிரிக்கு கிழக்கில் இருக்கும் குடகொங்கம் முழுவதும் குடநாட்டின் கீழ் அணிவகுக்கும். இதனை இராகவா ஐயங்கார் பல ஆதரங்களுடன் தனது வஞ்சி மாநகர் நூலில் கூறியிருப்பார். இரும்பொறை மரபினர் காலத்தில் இருந்து குடநாடு என்றால் அது கொங்கின் குடக்கு பாதியும் சேர்த்துத்தான். மீதம் இருக்கும் மழகொங்கம் (கிருஷ்ணகிரி வரை) ஏன் சீத / கற்கா நாட்டினுள் வராது??? நீலகிரி என்பது தோடர் முதுவர் கீழே நடக்கும் அரசியலுக்கு தொடர்பே இல்லாமல் வாழ்ந்த வகுப்பினர். தோட்டிமலை என்பது நிச்சயம் நீலமலை அல்ல. தோட்டிமலை மக்கள் குதிரை மீதேறி வெள்ளாமை செய்தனர். ஆநிரை வைத்திருந்தனர். அண்டர் கட்டுரையை பார்க்கவும்

https://ta.wikipedia.org/s/28gn

மேலும் இந்த சீத & கற்கா நாடு எது என்பதை கண்டுபிடிக்க நான் முயற்சி செய்கிறேன்--Jaivanth (பேச்சு) 17:58, 4 அக்டோபர் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொடுந்தமிழ்_நாடு&oldid=1733584" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொடுந்தமிழ் நாடு" page.