பேச்சு:கொட்டை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy in topic தலைப்பு
ஆங்கிலக் கட்டுரையிலேயே சில குழப்பங்கள் உள்ளன. தாவரவியல் அடிப்படையில் எது கொட்டை எது கொட்டை இல்லை என்பதில். காட்டாக, வால்நட் தாவரவியல் அடிப்படையில் கொட்டையா இல்லையா எனத் தெளிவில்லை. தாவரவியல் அறிஞர்கள் உதவுக --இரா. செல்வராசு 18:00, 30 திசம்பர் 2010 (UTC)
- வால்நட் தாவரவியல் அடிப்படையில் ஒரு கொட்டை இல்லை என்றே கருத்துள்ளது. வால்நட் என அழைக்கப்படுவது உண்ணப்படக்கூடிய விதைப்பகுதியே என்பதால் (முந்திரிக்கொட்டை போன்று) அது கொட்டை என்பதற்கான வரைவிலக்கணத்திற்குள் வரவில்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் பொதுவழக்கில் முந்திரிக்கொட்டை போன்றே இதுவும் ஒரு கொட்டையாகவே கருதப்படுகின்றது.
- ஆங்கிலக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வால்நட் படத்திற்கான குறிப்பில், அது ஒரு உண்மையான கொட்டையல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கிலக் கட்டுரையில் தாவரவியல் வரயறை என்ற துணைத் தலைப்பில், வால்நட் இடம்பெறும் Juglandaceae குடும்பமும் இணைக்கப்படவில்லை. இநதக் கட்டுரையில் இணைக்கப்பட்டிருந்தாலும், தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள் என்பதற்குக் கீழே வால்நட் உம் கொடுக்கப்பட்டுள்ளது. இது முரண்பாடாக இருப்பதனால், Juglandaceae குடும்பத்தை தாவரவியல் வரயறை என்ற துணைத்தலைப்பில் இருந்து நீக்கி விடுதல் நல்லது என நினைக்கின்றேன். கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--கலை (பேச்சு) 08:57, 27 சூலை 2012 (UTC)
தலைப்பு
தொகுஇதனைப் பொதுவாகப் பருப்பு என்றுதானே குறிப்பிடப்படுகிறது? கொட்டை என்றால் விதை அல்லவா. முந்திரிப் பருப்பு, வாதுமை (பாதாம்) பருப்பு என்றவாறுதானே அழைக்கப்பட வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 12:13, 27 சூலை 2012 (UTC)
- அவரை இனத் தாவரங்களில் (Leguminous) பருப்பு வகைத் தாவரங்களும் (Pulse), அவரை தாவரங்களும் (bean) அடங்குகின்றன. இதில் பருப்பு வகைத் தாவரங்கள் பொதுவாக உலர் விதைகளைத் தருவன. இவற்றில் அவரை பச்சைக் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகின்றன. பருப்பு வகைத் தாவரங்களின் பழ விதைகளே பருப்பு எனவும் அழைக்கப்படுகின்றன. கொட்டைகள் (Nuts) பொதுவாக ஒரு விதை கொண்ட பழங்கள். ஆனால் பருப்பு பல விதை கொண்ட பழங்களில் இருந்து பெறப்படும். அந்தப் பழங்கள் pods என அழைக்கப்படும். மேலும் கொட்டை என்பது விதையை அல்லாமல் பழத்தையே குறிக்கும். எனவே தலைப்பை பருப்பு என மாற்றுவது மேலும் குழப்பம் தரும் என்பது எனது கருத்து. கொட்டை என்பது பொருத்தமற்ற சொல் எனக் கருதினால், வேறு பொருத்தமான பெயர் தேட வேண்டும். ஆனால் பருப்பு எனக் குறிப்பிட முடியாது என நினைக்கின்றேன். எனக்கும் பலவற்றிற்கு சரியான, பொருத்தமான பெயர்களைப் பெறுவதில், அல்லது முன்பு படித்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சில குழப்பங்கள் உள்ளது. விரிவாக இதுபற்றி ஆராய வேண்டும்.--கலை (பேச்சு) 13:57, 27 சூலை 2012 (UTC)