பேச்சு:கொண்றங்கி கீரனூர்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
’’’கொண்றங்கி(கொண்டல் இறங்கி) கீரனூர்’’’ இவ்வூர் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறதா? கூகுளில் தேடும் போது கிடைக்கவில்லை.--Kanags \உரையாடுக 08:19, 21 மே 2013 (UTC,
- கொண்றங்கி, கொண்டங்கி எனவும் அழைக்கப்படுகிறது--ஸ்ரீதர் (பேச்சு) 10:23, 21 மே 2013 (UTC)
- ஊர் ஒன்றின் பெயர் ஏன் இவ்வாறு உள்ளது? கொண்றங்கி எனவோ கொண்டல் இறங்கி எனவோ கூகுளில் தேடிய போது எதுவும் இல்லை என்று வருகிறது. கொண்டங்கி உள்ளது. தலைப்பை கொண்டங்கி என மாற்ற வேண்டும். தலைப்பில் விளக்கம் எதுவும் தேவையில்லை. கட்டுரைக்குள் விளக்கம் தரலாம்.--Kanags \உரையாடுக 10:40, 21 மே 2013 (UTC)
- அரசு ஆவணங்களில் K Keeranur என்றே உள்ளது, பழனி வட்டத்திலும் கீரனூர் உள்ளது, இக்கட்டுரையின்தலைப்பை கொண்றங்கி கீரனூர் என நகர்த்த பரிந்துரைக்கப்படுகின்றது--ஸ்ரீதர் (பேச்சு) 11:35, 21 மே 2013 (UTC)
- ஒரே மாவட்டத்தில் இரண்டு கீரனூர் உள்ளதால் வட்டத்தின் பெயர் அடைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது--ஸ்ரீதர் (பேச்சு) 12:27, 21 மே 2013 (UTC)
- அதிகாரபூர்வமாக கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுவதாக யோகிசிவம் தகவல் தந்துள்ளார். அவ்வாறே தலைப்பை மாற்றலாம். அடைப்புக்குறிக்குள் கொண்டல் இறங்கி என எழுதத்தேவையில்லை. கொண்றங்கி (கொண்டல் இறங்கி) கீரனூர் என்றே அதிகாரபூர்வமாக எழுதுகிறார்கள் என்றால் அவ்வாறே வைக்கலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. விக்கியில் எழுதத் தொடங்கினால் விரைவில் கூகுளிலும் கொண்றங்கி என்ற பெயர் பிரபலமாகிவிடும். ஆனாலும், எந்த இரண்டு சொற்களுக்கும் இடையே ஓர் இடைவெளி வரவேண்டும். இது தமிழக அரசு ஆவணங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை போல் தெரிகிறது. அதிகாரபூர்வமாக இடைவெளி இல்லாவிட்டாலும் விக்கியில் இடைவெளி வைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:18, 21 மே 2013 (UTC)
- கொண்றங்கி (கொண்டல் இறங்கி) கீரனூர் பெயர் நடைமுறையில் இல்லை மேலும் நீண்ட பெயர் சொல்லாக உள்ளது, கொண்றங்கி எனும் வழக்கு சொல் உள்ளதால் கொண்றங்கி கீரனூர் என நகர்த்தலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 04:14, 22 மே 2013 (UTC)
- கொண்றங்கி கீரனூர் என்பது அரசு ஆவணங்களில் உள்ளது.நான் நில அளவைத் துறையில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சார்-ஆய்வாளர்(Sub-inspector of Survey) தகுதியில் அரசு ஊழியராகப் பணி செய்துள்ளேன்.எனக்கு நன்கு அறிந்த தகவல்கள் தான் இருப்பினும்,விக்கியில் ஆதாரங்கள் இணைக்கப் பட வேண்டும்.தாங்கள் இருவரும்(ஸ்ரீதர் மற்றும் கனக்ஸ்)2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணத்தை ஆய்வு செய்யவும். மேலும் பழனி வட்டத்தில் உள்ள கீரனூர் எந்த கூடுதல் பெயரும் இல்லை,ஆனால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கீரனூர் மட்டுமல்ல அந்த ஊரின் பெயர் கொண்றங்கி கீரனூர் என்பது அரசு ஆவணங்களில் உள்ளது மட்டுமல்ல அங்குள்ள அருள் மிகு மல்லீஸ்வரர் கோவில் தல வரலாறும் உள்ளது கல்வெட்டுகளும் உள்ளது.
- கீரனூர்(ஒட்டன்சத்திரம்)என்பது தவறு எனவே ’’’கொண்றங்கி கீரனூர்’’’என்றே மீளமை செய்யவும்,மேலும் (கொண்டல் இறங்கி) என்பது மறுவி கொண்றங்கி என ஆனது, ஸ்ரீதர் கூற்றுப்படி தலைப்பை கொண்றங்கி கீரனூர் என நகர்த்தலாம்--Yokishivam (பேச்சு) 10:01, 22 மே 2013 (UTC)
- யோகிசிவம், உங்களின் பல கட்டுரைகளில் இரண்டு சொற்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் எழுதுகிறீர்கள். அது விக்கியில் மட்டுமல்ல எந்த ஆவணங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழில் மட்டுமல்ல எந்த மொழிகளிலும் இவ்வாறு எழுதுவதில்லை. இவற்றைத் திருத்துவது பெரிய வேலைப்பழுவாக உள்ளது. மேலே நீங்கள் எழுதியுள்ள ஒரு சிறு பந்தியிலேயே எவ்வளவு தவறுகள் உள்ளன என்பதைப் பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல பலர் இவ்வாறு எழுதுகிறார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:50, 22 மே 2013 (UTC)