பேச்சு:கொழும்பு றோயல் கல்லூரி

வேத்தியர் என்றால் என்ன? சொல் விளக்கம் தந்தால் நன்று. துடுப்பெடுத்தாட்டம் என்றால் கிரிக்கெட்டா? துடுப்பாட்டம் என்றே சொல்லலாமா?--ரவி 08:24, 8 ஜூன் 2007 (UTC)

வேத்தியர் = Royal

தமிழ் விக்கிப்பீடியாவில் தலைப்புப் பெயர்களைப் பயன்படுத்தும்போது அந்தந்த நாட்டில் வழங்கப்பட்டுவரும் பெயர்களைப் பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்குமெனக் கருதுகின்றேன். உதாரணமாக இலங்கையில் ரோயல் கல்லூரி என்பது தான் அனைவருக்கும் தெரிந்த பெயர். தமிழ்விக்கிப்பீடியாவில் ரோயல் கல்லூரிக்கு கொழும்பு வேத்தியர் கல்லூரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேத்தியர் கல்லூரி எனும்போது இலங்கையில் பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே இத்தலைப்பில் வேத்தியர் கல்லூரியை முதன்மைப்படுத்தாது ரோயல் கல்லூரி என பெயர் மாற்றுவது பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகின்றேன். குறிப்பாக தலைப்பிடும் போது அந்தந்த நாட்டில் வழங்கப்படும் பெயர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட தலைப்பில் தேடுபவர்கள் நடைமுறையிலுள்ள பெயர்களுக்கிணங்கவே தேடுதல்களை மேற்கொள்வார்கள். இதனைக் கருத்திற் கொண்டு உரிய திருத்தத்தை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். இக்கட்டுரையில் ரோயல் கல்லூரி என்பது குறிப்பிடப்பட்டாலும்கூட தலைப்பிலுள்ள கொழும்பு வேத்தியர் கல்லூரி கருத்து மயக்கத்தைத் தருகின்றது. --P.M.Puniyameen 06:39, 15 சனவரி 2012 (UTC)Reply

தமிழில் இது முன்னொரு காலத்தில் வேத்தியர் கல்லூரி எனவும் அழைக்கப்பட்டதாக நினைவு. ஆனாலும் அது பின்னர் வழக்கொழிந்து விட்டது. கட்டுரையை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் அவ்வாறே ஆரம்பித்து விட்டார். அது பின்னர் மாற்றாமல் விடப்பட்டு விட்டது. தலைப்பை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே. கொழும்பு ரோயல் கல்லூரி எனவே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:57, 15 சனவரி 2012 (UTC)Reply

நன்றி Kanags, இக்கட்டுரை பழைய கட்டுரையாகும். இத்தலைப்பை மாற்றுவது தொடர்பாக யாதாவது கருத்து முரன்பாடு இருப்பின் ஏனைய பயனர்கள் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அப்படி முரண்பாடுகள் இல்லாவிடின் தலைப்பினை மாற்றிவிடலாம்.--P.M.Puniyameen 07:13, 15 சனவரி 2012 (UTC)Reply

இதன் பெயர் றோயல் கல்லூரி, கொழும்பு என்றிருக்க வேண்டும். அப்படித்தான் கல்லூரியின் கடிதத் தலைப்பு உட்படப் பல்வேறு ஆவணங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 02:03, 15 மே 2012 (UTC)Reply

Return to "கொழும்பு றோயல் கல்லூரி" page.