தங்களின் வழிகாட்டுதலின்படி சங்க காலம் என்னும் தலைப்புக்கு இது மாற்றப்படும். சிறந்த வழிகாட்டுதலுக்கு நன்றி.--Sengai Podhuvan 10:53, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
சங்க காலம் கட்டுரை பார்த்தேன். மிகச் சிறப்பு. அதில் சுட்டப்படும் கருத்துக்களை வரலாற்று அறிஞர்கள் முழுமையாக ஏற்பதில்லை. கொளகை அளவில் மட்டுமே இறையனார் களவியல் செய்திகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தக் கட்டுரை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நூற்றுக்கு மேற்பட்ட ஊர்கள் அதில் இடம்பெற உள்ளன.
என்ன செய்யலாம் என்று மீண்டும் வழிகாட்டுங்கள்.--Sengai Podhuvan 11:09, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

இக்கட்டுரை வளர்ந்து பெரிய தனிக்கட்டுரையாக மாறுமாக இருந்தான் சங்க காலம் கட்டுரையுடன் இணைக்கும் தேவையில்லை. :) தொடர்ந்து கட்டுரையை விரிவாக்குங்கள். --ஜெ.மயூரேசன் 11:18, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

ஊர்களின் பட்டியல்

தொகு

ஊர்களின் பட்டியலை எதற்காக "/" குறியுடன் தருகின்றீர்கள் நண்பரே?? ஏதும் சிறப்புக் காரணம் உள்ளதா?? பொட்டுக்களாக அல்லது தொடரிலக்கம் கொடுத்தால் வாசிப்பவரிக்கு இலகுவாக இருக்குமே?? தொடர்ந்து கட்டுரையை விரிவாக்குங்கள். பங்களிப்பிற்கு நன்றி--ஜெ.மயூரேசன் 12:41, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

நீக்கம்

தொகு
  1. உடையார்பாளையம் (முற்கபுரி) - இவ்வூர் சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே நீக்கப்பட்டது. ஊர்களைச் சேர்க்கும்போது கவனமாய் இருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 23:29, 25 ஏப்ரல் 2013 (UTC)

இணைப்பு

தொகு

தக்க இடத்தில் தக்க படிமம் இணைத்துள்ள அரியரவேலனுக்குப் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 18:32, 9 மே 2013 (UTC)Reply

பழவிறல் மூதூர்

தொகு

இது ஊர் அன்று
பழமையான பெருமைகளைக் கொண்ட முதிய ஊர் என்பது இதன் பொருள். எனவே சேர்க்கை நீக்கப்பட வேண்டியதாயிற்று. --Sengai Podhuvan (பேச்சு) 19:57, 29 நவம்பர் 2017 (UTC)Reply

குறிப்பிடப்பெற்ற மொத்த ஊர்கள்

தொகு

194 ஆ? --செல்வா (பேச்சு) 20:12, 29 நவம்பர் 2017 (UTC)Reply
எண்ணிக்கை வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 19:56, 2 திசம்பர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சங்க_கால_ஊர்கள்&oldid=2451524" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சங்க கால ஊர்கள்" page.