பேச்சு:சடையப்ப வள்ளல்
ஆதாரம்
தொகுசடையப்ப வள்ளல் தஞ்சையில் வாழ்ந்தவர் கொங்கு பகுதியில் அல்ல.இவரை கொங்கு வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர் என்று எந்தவித ஆதாரம் இல்லாமல் கருத்துக்களை பதிந்துள்ளனர்.
மேலதிக கர்ண பரம்பரச் செய்திகள்?? - நபர் வரலாற்றுக் கட்டுரையில் மேற்கோள் வேண்டும்
தொகுகவிச்சக்கரவர்த்தி கம்பர் சடையப்ப வள்லலைப் பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது.
சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும் இல்லையென்று சொன்னது கிடையாது, கேட்பர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது. அவர் வீட்டு அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது அந்தப் புற்றுக்கும் தவறாமல் இவர் பால் வார்த்து வந்தார். இது போல் தனக்குமில்லாமல் எல்லாவற்றையும் தானம் செய்தபின் ஒரு நாள் அவரிடம் வழங்க ஒன்றுமே இல்லாத நிலையும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் நம் இறைவன் அவரைச்சோதிக்க விரும்பினார்.
சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும் ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள் புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப் புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான் ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார். உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக் கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப் புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித் திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.
உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால் ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி கொடுத்தார்.
"உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன், இழந்த செல்வம் உனக்குத் திரும்பிக் கிடைகட்டும். அமோகமாக வாழ்வாயாக" என்று ஆசிகள் வழங்கினார். பாம்புக்கும் மோக்ஷம் கிடைத்துவிட்டது.