பேச்சு:சத்யஜித் ராய்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic நிர்வாகிகள் கவனிக்க
நிர்வாகிகள் கவனிக்க
தொகுசத்யஜித் ரே என்றல்லவா எழுதவேண்டும் அதாவது கதிர்வீச்சினை ray ஜ ரே என உச்சரிக்கும் சமயம் ஏன் சத்யஜித் ரேய் ராய் ஆக மாறியது பொதுவாக aishwarya rai ஜஸ்வர்யா ராய் ஜ i யில் முடிகின்றது விளக்கம் வேண்டப்படுகின்றது. --நிரோஜன் சக்திவேல் 22:53, 29 நவம்பர் 2006 (UTC)
- நான் நிர்வாகி அல்லாவிட்டாலும் ;-( இதை கேட்டுப் பார்க்கவும் ஊடகம்:SatyajitRay2.ogg, அதன் படி ராய் என்றுதான் எழுதவேண்டும் ஆங்கில ஒரு வினோதமான மொழி அதன் எழுத்துகளை வெவ்வேறு வகையில் உச்சரிக்கலாம் மேலும் மூல மொழியை வைத்தே உச்சரிப்பு முடிவு செய்யப்பட வேண்டும்.
--டெரன்ஸ் \பேச்சு 10:13, 30 நவம்பர் 2006 (UTC)
- நிரோ, உங்கள் கேள்விகளை எல்லாருக்கும் பொதுவாக கேட்கலாம் :) நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல. ! என் வங்காள நண்பருக்கு மடலிட்டிருக்கிறேன். அவர் விளக்கியதும் இங்கு பதில் தருகிறேன்--Ravidreams 10:25, 30 நவம்பர் 2006 (UTC)
- இலங்கைக்குக்கு சுனாமி நேரத்தில் வந்த ரஷ்ய நாட்டவர் ஒருவர் முஞ்சி பிஸ்கட் இருக்கா என்று வாகனச் சாரதியைப்பார்த்துக் கேட்டார். இலங்கையில் Munchee Biscuit ஐ இலங்கையில் மஞ்சி பிஸ்கட் என்றவாறே உச்சரிப்பர். வாகனச்சாரதிக்கும் ஒன்றும் விளஙகவில்லை வாகனத்தில் பயணித்த ஏனையவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ஆங்கிலத்தை உச்சரிப்பது என்பது பழகத்தில் எது உள்ளதோ அதையேதான் நாமும் பாவிக்கவேண்டும். அப்போதுதான் வாசிப்பவர்களுக்கும் விளங்கும். நிரோ சினிமா குறித்து வெகு ஆர்வமாகக் கட்டுரை எழுதும் நீங்கள் ஏன் ஓர் வழிமாற்றுப்பக்கத்தை உருவாக்கக் கூடாது எடுத்துக் காட்டாக சத்யஜித் ரே கட்டுரையை ஆரம்பித்துவிட்டு #redirect [[சத்யஜித் ராய்]] என்று போட்டால் கட்டுரையை வேறுமாதிரி உச்சரிப்பவர்களும் அடையலாம்.--Umapathy 13:08, 30 நவம்பர் 2006 (UTC)
நண்பர் உமாபதி கூறுவதுபோல் redirect செய்யலாம் ஆனாலும் நண்பர் ரவியின் பதிலினிற்காகக் சிறிது நாட்கள் காத்திருப்போம்.--நிரோஜன் சக்திவேல் 15:34, 30 நவம்பர் 2006 (UTC)
ஒலிக்கோப்பில் உள்ளவாறு உச்சரிக்க வேண்டுமென்றால் ஷத்தஜித் ராய் என்பது மாதிரி சொல்ல வேண்டும். ஆனால், தமிழில் சத்யஜித் என்று எழுதுவது நிலைத்து விட்டது. இதையே தொடரலாம். ராய் என்று சொல்வது தான் சரி என்று என் வங்காள நண்பர் தெளிவுபடுத்தினார்.--Ravidreams 19:00, 30 நவம்பர் 2006 (UTC)