பேச்சு:சபாபதி நாவலர்
Untitled
தொகுதகவல் உழவன், நன்றாக இக்கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். சில கருத்துகள்: கூடியமட்டிலும் அடிக்கோடு இடுவதைத் தவிர்க்க வேண்டும் என விக்கிப் பரிந்துரைகளில் எங்கோ படித்த நினைவு. ஏதோ ஒரேயொரு இடத்தில் இருந்தால் பொருட்டன்று, ஆனால் அடிக்கடி பயன்படுத்தினால் அழகாக இராது என்பது பொதுவாக உள்ள ஓர் எண்ணம். அச்சு நூல்களிலும், அச்சு கலைக்களஞ்சியங்களிலும் கூட இதனை நீங்கள் நோக்கலாம். எனவே மிகவும் அரிதாகவே பயன்படுத்துதல் நல்லதென்று நினைக்கிறேன். இதே போலவே, ஒரேயடியாய், பல நிறங்களில் அட்டவணையை அமைப்பதும் பரிந்துரைக்கப்படாதது (நீங்கள் இதனைச் செய்யவில்லை, ஆனால் பிறர் பிற இடங்களில் இதனைப் புரிந்துகொள்ளாமல் செய்துள்ளனர்). இவற்றுக்கான விக்கிப் பரிந்துரைகள் எங்குள்ளன என்று கண்டு இடுகின்றேன். இன்னொரு கருத்து. ஆசிரியர் அந்தணர் என்று எழுதியுள்ளீர்கள், அச்சொல்லை எந்தக் கருத்தில்/பொருளில் எழுதினீர்கள் என்று குறிப்பிட வேண்டுகிறேன். --செல்வா 23:16, 20 ஆகஸ்ட் 2009 (UTC)
- இந்தியாவில் சுதந்திரத்திற்க்கு பிறகே, கல்வி அனைத்து சாதிகளுக்கும் கற்பிக்கப்படுகிறது எனலாம். அதற்கு முன் சாதிய அடிப்படையிலேயே கல்விக் கற்பிக்கப்பட்டது. இருப்பினும், சில அந்தண சாதி ஆசிரியர், சாதிய எண்ணங்களைக் கட்டறுத்தும் கல்வி கற்பித்தனர். அவர்களிடம் கல்வி கற்றவர் பலர் இருப்பினும், சபாபதி நாவலர் போன்றோர் ஒரு சிலரே காலத்தையும் கடந்து நிற்கின்றனர். சாதி இரண்டொழிய இரண்டொழிய வேறில்லை என்பதெல்லாம் இன்றுதான்.(மறைமுகமாக இருக்கிறதென்பது வேறு விசயம்) வரலாற்றுக் கட்டுரைகளில், 'சாதி குறித்த சொற்கள் தேவை' என்ற, வரலாற்று அறிஞர் கூற்றைப் பின்பற்றுகிறேன். சாதியச் சொற்களை நான் எங்கும் எதற்கும் பயன்படுத்துவதில்லை. அந்தணன் என்று சொல்லுக்கு, பாரதி தன்கட்டுரையில் தந்த விளக்கமேப் பொருத்தமானது என்பது, என் உறுதிபட்டக் கருத்து. த* உழவன் 04:57, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- மேலே உங்கள் மறுமொழியில் உள்ள முதல் வரியில் "கல்வி" என்பதை இரு பொருள்களில் கூறியுள்ளது போல் தெரிகின்றது. தொழிற்கல்வியும் கல்வி என்பதை நீங்கள் மறுக்கவில்லை என்று நினைக்கிறேன். நல்லோர் குலத்தில் பிறந்தான், சான்றோர் குலத்தில் பிறந்தாள் என்பது போல அந்தணர் குலத்தில் பிறந்தார் என்பது ஒரு பிறப்படிப்படையான சாதி-குலம்-சாராத பொது மொழிக் குறிப்பு. பிராமணர் குலத்தில் பிறந்தார் என்றால் அது பிறப்படியான சாதி-குலம் பற்றிய குறிப்பு. பிராமணர்களின் கல்வி, வேதம், வேத வியாகியானம் முதலியன பற்றியது. ஆனால், பானை செய்யும் குயவன், மரவேலை செய்யும் தச்சன் என்று ஒவ்வொரு "இனத்தாரும்" ஒவ்வொரு துறைகளில் அறிவாளிகளாக இருந்தனர். எழுதப் படிக்கும் அறிவும் பல தொழில்சார் இனத்தவர்களும் தமிழ் நாட்டில் பெற்றிருந்தனர். ஐராவதம் மகாதேவன் அவர்களின் excerpts from Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. என்னும் நூலிலும் மற்றும் அவர் பல இடங்களில் எழுதியுள்ளதையும் கருத்தில் கொண்டால், தமிழகத்தைப் எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்ட ஒன்று (2000+ ஆண்டுகளாக). அந்தணன் என்ற சொல் பிராமணர்களைக் குறிப்பது அல்ல. பல பிராமணர்கள் அந்தணர்களாக இருந்தனர், உண்மை. பாணர்களும், குயவர்களும், அரசர்களும், கூலவாணிகர்களும் என பற்பல தொழிற்குலங்களைச் சார்ந்தவர்களும் அந்தணர்களாக இருந்துள்ளனர். சான்றோர், நல்லோர், போன்றே அந்தணர் என்பதும் பொதுச்சொல். ஒருசிலர் இதனைத் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதால் நாமும் இங்கு தவறாகப் பயன்படுத்தவேண்டும் எனல் கூடாது. நீங்கள் கருதியது பிராமணர் என்றால் பிராமண ஆசிரியர் என்றே குறிப்பிடுங்கள். நான் மறுக்கவிலை. ஆனால் அந்தணர் என்னும் சொல்லை பிராமணர் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துவது தவறு. அந்தண்மை உடைய பிராமணர் என்று கூறுங்கள் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. --செல்வா 18:48, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
தகவலுழவன், நல்லதொரு கட்டுரையை தந்தமைக்கு பாராட்டுக்கள். செல்வா குறிப்பிட்டது போல அடிக்கோடுகள் இடுவதைத் தவிர்க்கலாம். அவற்றை சாய்வெழுத்திற்கு மாற்றியிருக்கிறேன். வேறும் சில சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 00:20, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
- அடிக்கோடுகளைத் தவிர்க்கிறேன். பெரியபத்திகளில் மட்டுமே இனி பயன்படுத்துவேன்த* உழவன்
- அருமை,த.உழவன்!. சிறப்பாக மேலும் பல பக்கங்களைச் செய்யுங்கள். பரிதிமதி 02:00, 21 ஆகஸ்ட் 2009 (UTC)