பேச்சு:சாம் ஆண்டர்சன்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
சாம் ஆண்டர்சன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

புரட்சி நாயகன் என்பது சில ரசிகர்கள் இவரைக் கிண்டல் செய்வதற்காக வைத்த பெயர் என்று நினைக்கிறேன். படத்திலோ நடிகரோ அதைக் குறிப்பிடாத வரையில் தவிர்க்கலாம். இவர் கலைக்களஞ்சியத்தில் எழுதத்தக்க அளவு குறிப்பிட்டத்தக்கவரா என்று தெரியவில்லை. மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கு notability தரத்தைக் கூடுதலாக வைத்திருக்கையில் ஒற்றைப் படம் நடித்ததற்காகவே எல்லா நடிகர்களுக்கும் (அவ்வளவாக பிரபலம் இல்லாவிட்டாலும்) விக்கிப்பீடியா கட்டுரை எழுதலாமா?--ரவி 08:56, 22 மே 2008 (UTC)Reply

I get what you're saying... you're right, aside from the one movie I haven't found much info about him or else I would have written that up too. I like Tamil movies, but being in America I don't exactly have in-depth knowledge of Tamil cinema, so when I do hear about a Tamil actor/director/movie I usually just assume he or she is notable. If you don't think he belongs on Wikipedia feel free to delete the article. I was able to find external links to cite the movie he acted in though... at the very least he seems to be a Youtube celebrity! Werklorum 09:06, 22 மே 2008 (UTC)Reply

ஒரு படத்தில் நடித்திருந்தாலும் நூறு படங்களில் நடித்திருந்தாலும், அவர் ஒரு நடிகர் தான். நடிகர் என்ற அளவில் அவருக்கு விக்கிப்பீடியாவில் இடமுண்டு. விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற தகவற் களஞ்சியம் என்பதை மறக்க வேண்டாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் 2 மில்லியன் கட்டுரைகள் உண்டென்றால் அவற்றில் எழுதப்பட்டவர்கள் எல்லோரும் பிரபலமானவர்களா? இக்கட்டுரையை நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 09:39, 22 மே 2008 (UTC)Reply

werklorum, அவர் youtubeல் சராமாரியாக ஓட்டப்படுகிறார் என்பது உண்மை தான். இவர் இந்தப் படத்தில் நடித்தார் என்பது தவிர ஒரு தகவலும் அறிய இயலாத போது தனிக்கட்டுரை தேவையா என்று தோன்றியது. கனகு, என் கேள்வி இவர் ஒருவர் குறித்து மட்டும் அல்ல. யார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தக்கவர், எது குறிப்பிடத்தக்கது என்பது குறித்து. ஆங்கில விக்கிப்பீடியாவில் 2 மில்லியன் கட்டுரைகள் இருந்தாலும் அங்கும் இது போன்ற உரையாடல்கள் உண்டு. தமிழ்நாட்டில் உப்புமா படங்கள், மஞ்சள் படங்கள், எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள் உண்டு. ஒரு படத்தில் நடித்த ஒரே காரணத்துக்காக நடிகர் என்று அடைமொழியிட்டு கலைக்களஞ்சியத்தில் சேர்க்க வேண்டுமா தெரியவில்லை. இதே நோக்கில் ஒரு படம் வரைந்த ஓவியர், ஒரு புத்தகம் போட்ட எழுத்தாளர் என்று இலட்சக்கணக்கானவர்களைச் சேர்க்கலாம். நடிப்பு என்பது ஒரு தொழிலே. பிற தொழில் செய்பவர்களில் எப்படி கொஞ்சமாவது குறிப்பிடத்தக்கமை பார்த்து சேர்க்கிறோமோ அது போலவே நடிப்பு, திரைத்துறைக்கும் குறிப்பிடத்தக்கமை பார்ப்பது நல்லது--ரவி 11:44, 22 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாம்_ஆண்டர்சன்&oldid=4020782" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாம் ஆண்டர்சன்" page.