சாம் ஆண்டர்சன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்[1]) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார்.[1]

சாம் ஆன்டர்சன்
இயற் பெயர் ஆன்டர்சன் சாமுவேல்
பிறப்பு  இந்தியா
நடிப்புக் காலம் 2007-இன்று

இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்[2] கொண்ட ஒரு கூரியர் நிறுவனம்[1] நடத்தி வந்தார்.

2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள்[2] ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்[1].

படங்கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2007 யாருக்கு யாரோ டேவிட்
2007 சென்னை 600028 டேவிட்
2012 சிரிப்பு வர்லனா, நாங்க பொறுப்பு இல்ல ஞான பிரகாசம் குறும்படம்
2013 நவீன சரஸ்வதி சபதம் குமார் சிறப்புத் தோற்றம்
2013 சொன்னா புரியாது தான் சிறப்புத் தோற்றம்
2013 தலைவா தான் சிறப்புத் தோற்றம்
2013 பிரியாணி தான் சிறப்புத் தோற்றம்
2014 கோலி சோடா தான் சிறப்புத் தோற்றம்
2015 எட்டுத்திக்கும் மதயானை பொம்மை
2015 10 எண்றதுக்குள்ள தாஸின் கையாள்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Times Of India article". Archived from the original on 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் November 24, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Ananda Vikatan interview". பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_ஆண்டர்சன்&oldid=4152827" இலிருந்து மீள்விக்கப்பட்டது