பேச்சு:சாவகம் (தீவு)

இத்தீவின் பெயர் சாவகம் என்றே தமிழில் அறியப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் இங்கிருந்து வந்தவர்கள் முகாம் அமைத்திருந்த இடமே இலங்கையிலுள்ள சாவகச்சேரி எனப்படுகிறது. இத்தீவிலுள்ளவர்களில் பெரும்பான்மையானோர் பேசும் மொழியும் (Bahasa Jawa) சாவக மொழி என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. எனவே, இதன் தலைப்பையும் சாவகம் என்று மாற்றி விடுவதே பொருத்தம் என நினைக்கிறேன்.--பாஹிம் 22:50, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆமாம், நீங்கள் சொல்வது சரியே. நீங்கள் கூறியவாறே கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளேன்.--செல்வா 22:56, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சாவகம் என்பதற்குத் தமிழில் வேறு பொருள் ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை. பார்க்க: [1]. இல்லாவிடில் தீவு என்பது அடைப்புக்குறிக்குள் தேவை இல்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:27, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சாவக மொழியையும் சாவகம் என்று அழைக்கப்படுவதற்கு இடமுண்டு என்பதால் தீவு என்பது அடைப்புக்குறிக்குள் இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.--பாஹிம் 23:46, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றி பாகிம். அப்படியே இருக்கட்டும்.--Kanags \உரையாடுக 00:23, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாவகம்_(தீவு)&oldid=588295" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாவகம் (தீவு)" page.