பேச்சு:சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள்
அப்பா என்பது அரபு மொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல்.--பாஹிம் (பேச்சு) 15:26, 11 மே 2012 (UTC)
- இணைப்பில் எங்கே உள்ளது? --மதனாகரன் (பேச்சு) 15:31, 11 மே 2012 (UTC)
- அப்பன் என்பது தூய தமிழ்ச் சொல். அப்பன் எனும் தமிழ்ச் சொல்லிலிருந்தே அப்பா என்ற சொல் வந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன். முசுலிம்கள் தாத்தாவைத் தான் அப்பா என்று அழைப்பதாக விக்சனரியில் உள்ளது. தாத்தாவைக் குறிக்கும் அப்பா என்ற சொல் மட்டும் அரபு மொழியிலிருந்து வந்திருக்க வாய்ப்புண்டல்லவா? --மதனாகரன் (பேச்சு) 15:36, 11 மே 2012 (UTC)
நான் கொடுத்த pdf கோப்பின் இணைப்பில் மூன்றாம் பக்கம் மூன்றாம் பந்தியிற் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையே என்பதை இயேசு அப்பா என அழைக்கிறார். அது அரபுச் சொல் என்பது விளக்கப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 15:38, 11 மே 2012 (UTC)
"அப்பா" எங்கிருந்து வந்த சொல்?
தொகுபாஹிம், மதனாகரன், இது பெரிதுபடுத்த வேண்டிய ஒரு காரியம் அல்ல என்றே தோன்றுகிறது. அப்பாவும் அம்மாவும் பல்லாயிரக் கணக்காக வழங்கப்படுகின்ற சொற்களே. குழந்தைகளின் வாயில் இயற்கையாக வருகின்ற "பா", "மா" என்னும் இரு எழுத்துக்களும் "அ"வோடு இணைந்து அப்பா, அம்மா ஆவதால், தமிழும் அரபியும் மட்டும் இச்சொற்களுக்குச் சொந்தக்கார மொழிகள் அல்ல. மாறாக, உலகில் உள்ள அனைத்து மொழிகளிலுமே அம்மூல ஒலிகள் தந்தை தாயைக் குறிப்பனவாக வழங்கி வந்துள்ளதாக மானிடவியலார் (anthropologists) கருதுகின்றனர்.
இயேசு பாலத்தீனத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் பேசிய மொழி அரமேயம். எபிரேயத்தோடும் அரபியோடும் தொடர்புடைய அம்மொழியும் செமித்திய குடும்பத்தை (Semitic family) சார்ந்தது. எனவே அம்மொழிகளில் "அப்பா" என்னும் சொல் பொதுவாக இருந்ததில் வியப்பில்லை. காண்க: "அப்பா" - விக்கி கட்டுரை.
ஆகவே, அப்பா தமிழா சிங்களமா என்பது பெரிய சிக்கலாக இருக்க வேண்டாம் என்பது எனது கருத்து! --பவுல்-Paul (பேச்சு) 18:52, 11 மே 2012 (UTC)
- "அப்பா" அரபியிலிருந்து தமிழுக்கு வந்தது என்று பாஹிம் கூறப்போய், அங்கு தொடங்கிய உரையாடல் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது! எவ்வாறாயினும், தமிழ் பேசும் முசுலிம்கள் கையாளுகின்ற செந்தமிழ்ச் சொற்கள் பலவற்றை ஆய்ந்துள்ளார் எம்.எம். உவைஸ். அவர் 1976இல் ஈழத்து முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள் என்னும் நூலை இலங்கையின் பாணந்துறையில் வெளியிட்டுள்ளார். அந்நூல் முழுவதையும் வாசித்துப் பயன்பெற இங்கே சொடுக்குக:முசுலீம்கள் கையாளும் தமிழ்ச் சொற்கள் - "நூலகம்".--பவுல்-Paul (பேச்சு) 04:24, 12 மே 2012 (UTC)
- எம். எம். உவைஸ் அவர்களின் அருமையான நூல். வாசித்துப் பார்க்கிறேன். நூலகத்தில் இவ்வாறு ஏராளமான பயனுள்ள நூல்கள் உள்ளன. அறியத் தந்தமைக்கு நன்றி பவுல்.--Kanags \உரையாடுக 04:58, 12 மே 2012 (UTC)
ஆம், எபிரேயமும் அரமேயமும் அரபியும் அப்பா என்பதைத் தம் மொழிச் சொல்லென்பது போல ஏனைய மொழிகளும் கூறலாம். எப்படியிருப்பினும் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அப்பா என்று அழைக்கிறாரெனின், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இருக்கும் எபிரேயமும் அதற்கு உரிமை கொண்டாடுவதெனின் அச்சொல்லின் மூலம் தமிழென்று எவ்வகையிலும் வாதிட முடியாது. அவ்வாறே அம்மா என்பதும் மா, அம்மா, உம் என்றவாறு சிறிய மாற்றங்களுடன் பல்வேறு மொழிகளிலும் காணப்படுகிறது. இந்நிலையில் இவ்வாறானவற்றைத் தமிழா சிங்களமா என்று கூறுவதை விடுத்து, அவ்வாறான சொற்களை இப்பட்டியலிலிருந்து நீக்கிவிடுவதுதான் சரி.--பாஹிம் (பேச்சு) 01:34, 12 மே 2012 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதையே இங்கும் குறிப்பிட்டேன். அப்பா என்பதை நீக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 04:02, 12 மே 2012 (UTC)
"அக்கா" எங்கிருந்து வந்த சொல்?
தொகுதமக்கையைக் குறிப்பதற்காகத் தமிழில் அக்கா என்றழைக்கப்படுகிறது. இச்சொல்லின் மூலமும் தமிழா என்பதிற் சந்தேகமுள்ளது. இந்தோனேசியாவின் பல்வேறு மொழிகளிலும் தமக்கையைக் குறிக்கவும் அண்ணனைக் குறிக்கவும் காக்கா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையிலும், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேசும் பலரும் அண்ணனைக் காக்கா என்றே அழைக்கின்றனர். மேலும், இந்தோனேசிய மொழிகளில் அம்மா, அப்பா போன்ற தெளிவான சொற்களைத் தவிர, ஏனைய சொற்களுக்குப் பால் வேற்றுமை கிடையாது.--பாஹிம் (பேச்சு) 01:55, 12 மே 2012 (UTC)
- காக்கா என்பது இலங்கையில் தமிழ் பேசும் முசுலிம்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். நீங்கள் கூறுவதைப் பார்த்தால் காக்காவில் இருந்து தான் அக்கா வந்தது என நிரூபிக்கப் பார்க்கிறீர்கள் போல் தெரிகிறது:).--Kanags \உரையாடுக 02:52, 12 மே 2012 (UTC)
நான் அப்படி நிரூபிக்க நினைக்கவில்லை. அக்கா என்ற சொல்லின் மூலம் தொடர்பில் எனக்குச் சந்தேகமுள்ளது, அவ்வளவுதான். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மட்டுமே அப்படிப் பயன்படுத்துவதாகத்தான் நானும் முன்னர் கருதினேன். எனினும் ஒரு சில தமிழர்களும் அப்படியே பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறேன். அது எதனாலோ என்பது தெரியாது.--பாஹிம் (பேச்சு) 03:02, 12 மே 2012 (UTC)
"டேய்", "அடி" என்பன எங்கிருந்து வந்த சொற்கள்?
தொகுஇளையவரை விளிக்க டேய், அடி போன்ற சொற்கள் தமிழிற் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக ஒருவன் தன் தம்பியை டேய் என அழைத்தால் அதைப் பெரிய தவறாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை இளையவன் ஒருவன் மூத்தவனை டேய் என அழைக்கும் போது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. அவ்வாறே பெண்கள் தமக்குள் அடி, அடியே என்றவாறு சொற்களை ஆள்கின்றனர். தமிழில் டேய் என்ற சொல் பொது வழக்கில் இருந்தாலும், டகரத்தில் எச்சொல்லும் தொடங்குவது தமிழ் மரபுக்கு அப்பாற்பட்டது. எனவே, டகரத்திற் தொடங்கும் எச்சொல்லின் மூலமும் தமிழாக இருக்க முடியாது. இதே சொற்கள் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த பல்வேறு இனங்களிடமும் இதே கருத்திற் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசிய மொழி, சாவக மொழி, சுண்டா மொழி, பத்தாவிய மொழி, மலாயு மொழி உட்படப் பல்வேறு இந்தோனேசிய-மலேசிய மொழிகளிலும் அடி (adik - இங்கு k ஒலிப்புக் குன்றியது) என்றால் இளைய சகோதரன் அல்லது சகோதரி என்று பொருள். அவ்வாறே, சிறுவர்களை ஆணாயினும் பெண்ணாயினும் டே (deh - இங்கு h ஒலிப்புக் குன்றியது) என்றழைக்கின்றனர். டே என்று பெரியவர்களை அழைப்பது மரியாதைக் குறைவாகவே இந்தோனேசிய-மலேசிய மொழிகளிலும் கருதப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:19, 12 மே 2012 (UTC)
//தமிழில் டேய் என்ற சொல் பொது வழக்கில் இருந்தாலும், டகரத்தில் எச்சொல்லும் தொடங்குவது தமிழ் மரபுக்கு அப்பாற்பட்டது. எனவே, டகரத்திற் தொடங்கும் எச்சொல்லின் மூலமும் தமிழாக இருக்க முடியாது.//
- அடியே என்பது போல அடேய் என்பது கூட டேய் என மாறி இருக்கலாம். சொற்களின் மூலங்களைத் தேர்ந்த மொழியிலாளர்களே நிறுவ இயலும். எனவே, ஐயத்துக்குரிய சொற்களைத் தவிர்த்து விட்டுப் பட்டியல்களை உருவாக்கலாம்.--இரவி (பேச்சு) 05:58, 12 மே 2012 (UTC)
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
தொகுஅப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
--Natkeeran (பேச்சு) 13:13, 12 மே 2012 (UTC)
”அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும் மாமியும் நீ” அப்பர் - ஆறாம் திருமுறை - திருத்தாண்டகம் காலம் –மகேந்திரவர்மன் (600 முதல் 630 CE) காலத்தில் வாழ்ந்த
அப்பர் 574 க்கும் 655 க்கும் இடையே இப்பாடலைப் பாடினார்.
(கவிதையில்/செய்யுளில் அப்பன் என்பது பேச்சு வழக்கில் அப்பா என அழைக்கப்பட்ட்து.)
”அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆரமுதே” மாணிக்க வாசகர் - எட்டாம் திருமுறை - திருகோவையார் காலம் - மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு: கி.பி. 863-இல் மாணிக்கவாசகர் பல ஆண்டுகள் வரகுண பாண்டிய மன்னனுக்கு மந்திரியாகவும் இருந்தவர்
'Wikipedia: “India–Saudi Arabia relations”: Trade and cultural links between ancient India and Arabia date back to third millennium BC.[1] By 1000 AD, the trade relations between southern India and Arabia flourished and became the backbone of the Arabian economy அப்பன் என்ற சொல்லாட்சி கி.பி.574 முதல் 655 வரை வாழ்ந்த அப்பர் பயன் படுதி உள்ளார். அரேபியர்களின் தென்னிந்தியத் தொடர்பு 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னாலேயே நிகழ்ந்தது. (அதற்கு முன் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட போது இலக்கியங்கள் இல்லாததல் சான்றுகள் இல்லை; ஆயினும் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.) பேராசிரியர். அ. மனோகரன்
சில சொற்கள்
தொகுஐயா என்ற சொல் தமிழிலும் சிங்களத்திலும் ஒரே பொருளிற் பயன்படுத்தப்படுவதில்லை. இந்நிலையில் அது தமிழிலிருந்துதான் சென்றதெனக் கூறலாகாது. இச்சாவ (ඉච්ඡාව) என்று சிங்களத்திற் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இச்சகம் என்ற பொருளில்லை. அதன் பொருள் இச்சை என்பதாகும். அச்சொல்லின் தொடக்கம் வடமொழி.--பாஹிம் (பேச்சு) 02:40, 13 மே 2012 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்தே மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருந்தால் உடனுக்குடன் திருத்தி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 02:44, 13 மே 2012 (UTC)