பேச்சு:சிம்மேந்திரமத்திமம்
சிந்து, செல்வா, இவ்விராகத்தில் ஆரோகண, அவரோகணங்களை (துணை சுரங்கள்) ஒருக்கால் சரிபார்க்கவும். சுரங்கள் கட்டுரையில் வரும் துணை சுரங்களின் பெயரீடுகளையும் சரிபார்க்கவும்.--Kanags 08:48, 1 அக்டோபர் 2006 (UTC)
கனகு, ஆரோகண அவரோகண வரிசையில் சில திருத்தங்கள் தேவைப்பட்டது. செய்துள்ளேன். சாதாரண காந்தாரம் என்பது க2, அதே போல காகலி நிஷாதம் என்பது நி3 ஆகும்.இக்குறீடு முறைகளை, சுரம் பற்றிய கட்டுரையில் இடுகின்றேன். ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்களின் பாடலையும் சேர்த்துள்ளேன். சிந்து அவர்கள் அட்டவணையையும், விக்கியாகத்தையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எல்லா இராகங்களுக்கும் ஸ ரி க ம ப த நி ஸ் என்று எழுதுவதால் பயன் இல்லை. எந்த ரி, எந்த க என்று குறிப்பது மிகவும் அவசியம். ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் வெவ்வேறு காந்தாரங்கள் (ரி, த, நி முதலியனவும்) வரும் வழி (ஜன்ய) இராகங்களும் உண்டு. எனவே காந்தாரம், ரிஷபம் முதலியனவற்றின் உட்பிரிவுகளைக் குறிப்பது மிகவும் அவசியம்.--C.R.Selvakumar 17:54, 1 அக்டோபர் 2006 (UTC)செல்வா
ஐயம்
தொகு@Kanags: ஆங்கில விக்கியில் Simhendramadhyamam என்பதாக குறிப்பிட்டுள்ளனர். தமிழ் உச்சரிப்பு சரிதானா என்பதனை உறுதிசெய்ய தங்களின் உதவி தேவை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 22 திசம்பர் 2018 (UTC)
- சிம்மேந்திரமத்திமம் சரியானதே.--Kanags (பேச்சு) 10:51, 22 திசம்பர் 2018 (UTC)