பேச்சு:சீன எழுத்துமுறை

சீன எழுத்துமுறை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கன் எழுத்துக்களை இதனுடன் இணைக்கலாம் என நிணைக்கிறேன்--டெரன்ஸ் \பேச்சு 01:20, 15 ஜனவரி 2007 (UTC)


எழுத்துவடிவங்களின் அமைப்புமுறைகள்

தொகு

உருவப்பட எழுத்துக்கள்

தொகு

ஒரு பொருளின் படத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்கள் உருவ விளக்கப்பட எழுத்துக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக 木 மரத்தையும் 日 சூரியனையும் 山 மலையையும் சுட்டுகின்றன. உருவபட எழுத்துக்களில் பல வடிவுக்காக மிகவாக உருமாறி உள்ளன. தற்காலத்தில் 4% வரையன சீன எழுத்துக்களே உருவ விளகப்பட எழுத்துக்கள் ஆகும்.

குறியீட்டுப்பட எழுத்துக்கள்

தொகு

ஒரு கருத்தை குறியீடாக வெளிப்படுத்தும் எழுத்துக்கள் குறியீட்டு எழுத்துக்கள் ஆகும். 下 கீழே, 上 மேலே, 回 சுழற்சி ஆகியவை இந்தவகை எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். எவை உருவ விளக்கப்பட எழுத்துக்கள் எவை குறியீட்டுப்பட எழுத்துக்கள் என்பதில் சற்றுக் குளப்பங்கள் உள்ளன.

கருத்துப்பட எழுத்துக்கள்

தொகு

உள்ள பட எழுத்துக்களை மாற்றி அல்லது நேரடியாக ஒரு கருத்தை சுட்டும் எடுத்துக்கள் கருத்துப்பட எழுத்துக்கள் (Ideograms, 指事字, zhǐshìzì) ஆகும். எ.கா 木 என்ற மரத்துக்கான எழுத்துக்கள் மூன்று 森 இவ்வாறு சேர்ந்து ஒரு காட்டைச் சுட்டும் கருத்துப்பட எழுத்தாக மாறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீன_எழுத்துமுறை&oldid=2360859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீன எழுத்துமுறை" page.