பேச்சு:சூரிய மின்னாற்றல்

Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Magentic Manifestations


இக்கட்டுரை மிகவும் குழப்பமான முறையில் எழுதப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு. இதனைத் திருத்தத் தேவைப்படும் ஆற்றலில் புதிய கட்டுரை ஒன்றையே படைத்துவிடலாம்! எ.கா: இது நேரடியாக ஒளிமின்னழுத்திங்கள் முறையில் அல்லது மறைமுகமாக முழுச்செறிவூட்டும் சூரிய ஆற்றல் (CSP) முறையில் செய்யப்படுகிறது. முழுச்செறிவூட்டல் முறையில் சூரிய ஒளியானது நீரின் மீது குவிக்கப்பட்டு நீரை கொதிக்கவைக்கிறது, இதன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.ஒளிமின்னழுத்தியங்களிலிருந்து கிடைக்கும் சூரிய மின்சக்தி.. (இங்கே ஒளிமின்னழுத்திங்கள் என்பது என்னவென்று விளங்கவில்லை. photovoltaic என்பதைத்தான் கூற முற்படுகின்றார் என்று புரிகின்றது. ஒளிமின்னழுத்தம் = photovoltage. ஒளிமின்னழுத்தவியல் எனக் கூற முற்படுகின்றாரா என்று விளங்கவில்லை. கதிரொளியைக் குவியப்படுத்திப் பெறும் ஆற்றலை முழுச்செறிவூட்டும் என்றும் படிப்பவர் ஏதும் விளங்கிக்கொள்ள இயலாதவாறு கூறுகின்றார். concentrated solar power (CSP) என்பதைத்தான் அப்படிக் கூறுகின்றார் என்று துறையறிவுடையவர்கள் புரிந்துகொள்ளலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே அபப்டிச்சொன்னால் ஒன்றும் விளங்காது. பெரிய அளவிலே கதிரவ ஒளியில் இருந்து மின்னாற்றலை வடிக்கப் பயன்படும் நுட்பத்தைப் பற்றிக் கூறுகின்றார். வெப்பமாக்கி மின்னாற்றலை வடிப்பதும், பல கதிரவன்களுக்கு ஈடான ஒளியைக்கொண்டு (குவியப்படுத்தி) மின்னழுத்தமாக மாற்றி மின்னாற்றலாக வடிப்பதும் வேறு வேறானது. இக்கட்டுரையைப் பெரிதும் மாற்றி எழுதலாமா, அல்லது புதிதாகவே ஒரு கட்டுரை எழுதலாமா என்பதே என் கேள்வி. --செல்வா (பேச்சு) 03:53, 27 சூலை 2012 (UTC)Reply

பல கூகுள் கட்டுரைகளிலும் இதுவே நிலை :( முதற் பத்தியை மட்டும் திருத்தி விட்டு எஞ்சிய உரையைப் பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தலாம். நேரம் கிடைக்கும் போது கட்டுரையை வளர்க்கலாம்--இரவி (பேச்சு) 05:38, 27 சூலை 2012 (UTC)Reply

வணக்கம் இக் கட்டுரை சரியாகவே இருக்கின்றன. இதில் பிழைகள் ஏதும் இல்லை. ஆனால் சூரிய மின் சக்தி பற்றிய நுண்ணியல் விளக்கம் அறியாதவர்களுக்கு இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும், அதேவேளை அதிகமான கலைச்சொற்கள் இதில் செர்க்கபட்டுள்ளன அதுவும் ஒரு காரணமாகலாம். மேலும் எமக்கு தெரிந்த, புரிந்த விளக்கத்தை இக் கட்டுரையில் இடலாம், அப்படியானால் இக் கட்டுரையின் அனைத்து சார அம்சங்களையும் மாற்றவேண்டி வரும். அப்போது இக் கட்டுரையின் முழு ஆக்கங்களும் பிழையாகிவிடும். அதனால் அமைதியாக கவனமாக கையாள்வது நன்று. நன்றி.

  • ஒளிமின்னளுத்தம் என்று கூறப்பட்டுள்ளது சூரியனின் அதி உச்ச சூரிய ஒளிக் கதிர் வீச்சை இங்கு கூறி இருக்கிறார். (மதிய நேரம்)
  • நீர் என்று குறிப்பிடபட்டது செரிவுட்டபட்ட திரவம். ஆனால் இது திரவதன்மைக்கும் தின்மதன்மைக்கும் இடைப்பட்டது. (தின்ம கழி அசிட்)
  • உதாரணம்: சுமையூந்து, பேருந்து, போன்றவற்றில் இருக்கும் மின்கலம்(பற்றி)அதனுள் இருக்கும் திரவமானது, நீர் ஆவியாக்கி அதில் இருந்து கிடைக்கபெறும் நீர், மழைநீர் ஆகும் அவற்றை செறிவூட்டும் போது அசிட் என்று கூறுகிறோம், அது போன்றுதான் இதுவும் ஆனால் இது தின்மம் மற்றும் திரவம் உள்ளடங்கி இருக்கும். இவை சூரிய ஒளிக்கதிர் வீச்சு மூலம் மேலும் செரிவூட்டபடுகின்றன.(ஏலேக்ரோன்கள் உள்வாங்கபடுகின்றன)

அவ்வளவுதான். நன்றி--சிவம் 04:44, 18 அக்டோபர் 2012 (UTC)

தலைப்பு மாற்றம்

தொகு

தலைப்பை சூரிய மின்னாற்றல் என மாற்றலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:02, 18 அக்டோபர் 2012 (UTC)Reply

உடன்படுகிறேன்.--சிவம் 05:12, 18 அக்டோபர் 2012 (UTC)

  • இக்கட்டுரையை எனக்கு நேரம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நானே திருத்துகிறேன். இக் கட்டுரயை தயவாக நீக்க வேண்டாம். நன்றி--சிவம் 08:52, 18 அக்டோபர் 2012 (UTC)

முதலாவது பந்தி(தலைப்பு) திருத்தியுள்ளேன் உங்களுக்கு புரியக் கூடனவாக இருக்கின்றனவா??--சிவம் 13:20, 18 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் சூரிய ஆற்றல் என்னும் கட்டுரையில் இரண்டு உள்ளன இவற்றை ஒன்றிணைக்க முடியுமா?? --சிவம் 16:38, 22 அக்டோபர் 2012 (UTC)

Return to "சூரிய மின்னாற்றல்" page.