பேச்சு:சூல் முட்டை
இக்கட்டுரை மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் கூடிய அறிவியல் நோக்கோடு எழுதப்படவேண்டும்--ரவி 12:28, 18 ஆகஸ்ட் 2006 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பு சூல்முட்டை என இருப்பது பொருத்தமாக இருக்குமா?--கலை 20:48, 20 பெப்ரவரி 2012 (UTC)
- சூல்முட்டை பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். மருத்துவர்கள் கார்த்தி, செந்தி என்ன சொல்வார்கள் என்றும் கேட்டுப்பார்க்கலாம்.--செல்வா 23:29, 20 பெப்ரவரி 2012 (UTC)
சூல்முட்டை, கருமுட்டை எனும் சொற்கள் zygote என்பதற்குப் பயன்படுத்தும் சொல்லாகும். இthai Ovum எனும் சொல்லுக்குப் பொருத்தமானதல்ல;தவறான சொல்லாகும். எனவே தலைப்பினை உடனடியாக அண்டம் அல்லது முட்டை என மாற்றவேண்டும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:07, 31 அக்டோபர் 2018 (UTC)
அண்டம் (இனப்பெருக்கம்) தலைப்பில் வழிமாற்று இருந்தால் நலம்
தொகுஇந்தக் கட்டுரைக்கு அண்டம் என்கிற பெயரில் எங்கும் வழிமாற்று இல்லை, கட்டுரைக்குள்ளும் எங்கும் அண்டம் என்கிற சொல் குறிக்கப்படவில்லை. நான் பள்ளியில் படித்தபோது விந்து, அண்டம் என்றே சொல்லித் தரப்பட்டது, தமிழ் விக்ஷனரியிலும் கூட ovum என்கிற சொல்லுக்கு அண்டம் என்கிற விளக்கமும் இருக்கிறது( ஆனால், நான் தேடியவரையில் கருமுட்டை தானம், ஆண்குறி ஆகிய இரண்டு கட்டுரைகளைத் தவிர வேறெங்கும் தமிழ் விக்கியில் அண்டம் என்கிற சொல் பயன்படுத்தப்படவில்லை.). நான் தமிழ் விக்கியில் அண்டம் என்று தேடி கிடைக்காமல், பிறகு ஆங்கில விக்கியில் ovum கட்டுரையிலிருந்தே இங்கு வந்தேன். குறைந்தபட்சம் அண்டம் என்கிற பெயரில் வழிமாற்று மட்டுமேனும் இருந்தால் கூட நல்லது என நினைக்கிறேன். . விலங்கியல், மருத்துவம் படித்த பயனர்கள் முடிவெடுங்கள் :). அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 16:16, 16 மார்ச் 2013 (UTC)
Zygote- கருமுட்டை; Ovum-அண்டம், முட்டை; Sperm-விந்து; Fetus-கருக்குழவி; Ovary-அண்டகம்; Testis-விரை; Testicle- விந்தகம் ஆகியன செந்தரக் கலைச்சொற்கள் காலம் காலமாக வழங்கி வருவன. எனவே, கட்டுரையின் தலைப்பை அண்டம் என மாற்றவேண்டும். கருமுட்டை என்பது விந்தும் அண்டமும் சேர்ந்ததாகும். எனவே தலைப்பு முற்றிலும் தவறானதாகும். தலைப்பை வழிமாற்றின்றி மாற்றிடவேண்டும். இதே போல இனப்பெருக்கம் சார்ந்த பல கலைச்சொற்கள் தவறாக குழப்பமூட்டுவனவாக உள்ளன. வழக்கில் உள்ள கலைச்சொற்களை அறிந்து போடாமல் அவரவர் விருப்பப்படி பயன்படுத்துவது (பயன்படுத்தியிருப்பது) சரியான நடைமுறையாகாது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:07, 31 அக்டோபர் 2018 (UTC)